உணவு அரசியல் : உலகின் உணவாக போகும் ஆப்ரிக்காவின் பொய் வாழை - ஓர் ஆச்சரிய தாவரம்

என்செட் குறித்து ஆராய்ச்சி மேற்கொண்ட தாவரவியலாளர்கள் அடுத்த 40 ஆண்டுகளில் 10 கோடி மக்களுக்கு உணவு அளிக்கும் தாவரமாக என்செட் அமையும் எனக் கூறியுள்ளனர்.
உணவு அரசியல் : உலகின் உணவாக போகும் ஆப்ரிக்கவின் பொய் வாழை - ஓர் ஆச்சரிய தவரம்
உணவு அரசியல் : உலகின் உணவாக போகும் ஆப்ரிக்கவின் பொய் வாழை - ஓர் ஆச்சரிய தவரம்Twitter
Published on

உலக வெப்பமயமாதல் பெரிய அளவில் அதிகரித்து வருகிறது. உலகின் வெப்பநிலை ஒவ்வொரு ஆண்டும் 1.4 டிகிரி ஃபாரன்ஹீட் அதிகரிக்கிறது. இதனால் எந்த நேரமும் உலகில் பஞ்சமோ அல்லது உணவு பற்றாக்குறையோ ஏற்படுமென நிபுணர்கள் அஞ்சுகின்றனர்.

அப்படியான சூழல் ஏற்பட்டால் இந்த வெப்பமான உலகைக் காக்கும் உணவாக இந்த பொய் வாழை இருக்கும் என அறிவியலாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

இந்த கட்டுரையில் பொய் வாழை எனக் குறிப்பிடப்படுவது எத்தியோப்பியாவில் வளரும் என்செட் என்ற உணவு தாவரமாகும். இது ஏன் பொய் வாழை எனப்படுகிறது?

உணவில் சேர்க்கப்படும் புதிய தாவரங்கள்

ஆதிமனிதன் நாகரீகமடைந்த புதிதில் காடுகளுக்குள் அழைந்து திரிந்து புதிய தாவரங்களை, உணவுகளை கண்டறிந்தான். பின்னர் அவற்றை பயிரிட்டு வளர்க்கும் முறையை தெரிந்துகொண்டான்

காலனி ஆதிக்கம் வளர்ந்த போதும், உலகின் சில பகுதிகளில் பஞ்சம் ஏற்பட்ட போதும் உணவாக பயன்படுத்த நாம் பிற பிராந்தியங்களில் இருந்து புதிய காய்கறி, கிழங்கு வகைகளை வரவழைத்து உற்பத்தி செய்தோம்.

உதாரணமாக தென்னமெரிக்க உணவான உருளைக் கிழங்கு, தக்காளி எல்லாம் தமிழகம் வரை வந்து சேர்ந்ததற்கு பின்னால் பெரிய வரலாறே இருக்கிறது. ஈரானில் இருந்து பல வகையான உணவு முறைகளை நாம் தத்தெடுத்துள்ளோம்(இதில் பிரியாணியும் ஒன்று).

இந்த வரலாற்றைத் திருப்பி பார்க்கும் போது என்செட் நம் தட்டுகளில் ஏறும் நாள் வெகு தொலைவில் இல்லை எனத் தோன்றலாம். ஆனால் ஆப்ரிக்கா முழுவதும் இருக்கும் இந்த எப்செட், எத்தியோப்பியாவில் மட்டுமே பயிரிட்டு வளர்க்கப்படுகிறது. ஏன் பிற ஆப்ரிக்க பகுதிகளில் உணவாக முக்கியத்துவம் பெறவில்லை? என்ற கேள்வி ஆய்வாளர்கள் முன் இருக்கிறது.

உணவு அரசியல் : உலகின் உணவாக போகும் ஆப்ரிக்கவின் பொய் வாழை - ஓர் ஆச்சரிய தவரம்
சீனா மக்களின் ஆயுள் இரகசியம் இது தான் - ஆரோக்கியத்துக்கு கேரண்டி கொடுக்கும் ஒரு உணவு!

Enset - என்செட்

இது பார்பதற்கு வாழை மரத்தைப் போலவே இருக்கிறது. அதே இலை, அதே தண்டு. ஆனால் இலைகள் வானத்தை நோக்கியதாக இருக்கின்றன. இதனால் தான் இதனை பொய் வாழை என அழைக்கின்றனர்.

இந்த தாவரம் 10 மீட்டர் உயரம் வரை வளரும். வெறும் 15 மரங்கள் இருந்தால் ஓராண்டு முழுவதும் ஒரு மனிதருக்கு உணவு அளித்துவிட முடியும்.

இதனை எக்காலத்திலும் பயிரிடலாம், நீண்ட காலத்துக்கு பாதுகாத்துக்கு வைக்க முடியும், எளிதில் நோய்வாய்ப்படாது என இதன் பயன்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.

இதனை எத்தியோப்பியாவின் மக்கள் "பசிக்கு எதிரான மரம்" என அழைக்கின்றனர்.

உண்மையில் எத்தியோப்பியா என்செட் பயிரிடுவதற்கு ஏற்ற நிலப்பரப்பைக் கொண்டிருக்கவில்லை. ஆனால் எத்தியோப்பிய மக்கள் இந்த தாவரத்தின் பலனை மனதில் கொண்டு இது குறித்து அதிகமாக தெரிந்துகொண்டனர்.

என்செட் போல இருக்கும் சில தாவரங்கள் நச்சுத் தன்மைக் கொண்டதாக இருக்கவும் வாய்ப்புகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

உணவு அரசியல் : உலகின் உணவாக போகும் ஆப்ரிக்கவின் பொய் வாழை - ஓர் ஆச்சரிய தவரம்
பாதாமை விட சிறந்தது! ஆண்கள் அவசியம் சாப்பிட வேண்டிய ஒரு உணவு - என்ன அது? எவ்வளவு பலன்கள்?

என்செட் குறித்து ஆராய்ச்சி மேற்கொண்ட தாவரவியலாளர்கள் அடுத்த 40 ஆண்டுகளில் 10 கோடி மக்களுக்கு உணவு அளிக்கும் தாவரமாக என்செட் அமையும் எனக் கூறியுள்ளனர்.

இது ஆப்ரிக்க மக்களின் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாக இருக்கும். கென்யா, உகாண்டா, ரவாடா உள்ளிட்ட நாடுகள் எத்தியோப்பியாவைப் போல என்செட் உற்பத்தியில் கவனம் செலுத்தும்.

உணவு அரசியல் : உலகின் உணவாக போகும் ஆப்ரிக்கவின் பொய் வாழை - ஓர் ஆச்சரிய தவரம்
உணவு அரசியல் : ஆரோக்கியமான உணவு இன்றி தவிக்கும் 70% இந்தியர்கள் - என்ன நடக்கிறது இங்கே?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com