நாசா: பிரபஞ்சத்தின் ஆழமான புகைப்படத்தை எடுத்த ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி - விரிவான தகவல்கள்

இந்த தொலை நோக்கி இரண்டு முக்கியமான இலக்குகளை கொண்டிருக்கிறது. ஒன்று 13.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பிரபஞ்சத்தில் பிரகாசித்த முதல் நட்சத்திரங்களின் படங்களை எடுப்பது. மற்றொன்று தொலைதூரத்தில் உள்ள கிரகங்களை ஆய்வு செய்வது.
13 பில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய ஒளியை படமெடுத்த நாசா - விரிவான தகவல்கள்
13 பில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய ஒளியை படமெடுத்த நாசா - விரிவான தகவல்கள்Twitter
Published on

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கியின் முதல் முழு வண்ணப்படம் வெளியிடப்பட்டது. இந்த புகைப்படம் வானவியலில் புதிய சாதனையாக கருதப்படுகிறது.

வெளியிடப்பட்ட படம் பிரபஞ்சத்தின் மிக ஆழமான, மிக விரிவான அகச்சிவுப்புக் காட்சியை தருகிறது. இந்த விண்மீன் திரள்களின் ஒளி தாமாகவே நம்மை அடைய பல பில்லியன் ஆண்டுகள் ஆகும். அந்த நேரத்தை ஜேம்ஸ் வெப் தொலை நோக்கி வெகுவாக குறைத்திருக்கிறது.

இந்தப் படம் வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு காண்பிக்கப்பட்டது. ஜேம்ஸ் வெப் எடுத்த மேலும் சில படங்கள் செவ்வாயன்று (இன்று) உலகளாவிய அளவில் நாசாவால் வெளியிடப்பட உள்ளன.

“அமெரிக்கா பெரிய விஷயங்களை செய்ய முடியும் என்பதை இந்த படங்கள் உலகிற்கு நினைவூட்டுகின்றன. இதுவரை யாரும் பார்த்திராதவற்றைப் பார்க்க முடியும் சாத்தியக் கூறுகள் நமக்கு உண்டு. இதுவரை யாரும் செல்லாத இடங்களுக்கு நாம் செல்ல முடியும்" என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறினார்.

10 பில்லியன் டாலர் செலவிலான ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி கடந்த ஆண்டு டிசம்பர் அன்று செயல்பட துவங்கியது. இது புகழ்பெற்ற ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கியின் வாரிசாகக் கருதப்படுகிறது.

இது வானத்தில் அனைத்து வகையான அவதானிப்புகளையும் (observation) செய்ய முடியும். இருப்பினும் இந்த தொலை நோக்கி இரண்டு முக்கியமான இலக்குகளை கொண்டிருக்கிறது. ஒன்று 13.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பிரபஞ்சத்தில் பிரகாசித்த முதல் நட்சத்திரங்களின் படங்களை எடுப்பது. மற்றொன்று தொலைதூரத்தில் உள்ள கிரகங்களை ஆய்வு செய்வது. அந்த கிரகங்கள் வாழக்கூடியவையா என்று பார்ப்பது.

அதிபர் பைடனுக்கு காண்பிக்கப்பட்ட படம் முதல் நோக்கத்தை நோக்கி பயணிப்பதை காட்டுகிறது. நாசா வெளியிட்ட படத்தில் SMACS 0723 என்ற பெயரால் அறியப்படும் தெற்கு அரைக்கோள விண்மீன் தொகுப்பில் உள்ள விண்மீன்கள் காணப்படுகின்றன.


இந்த SMACS 0723 தொகுப்பு சுமார் 4.6 பில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. ஆனால் இந்த தொகுப்பின் பெரும் நிறையானது வெகு தொலைவில் உள்ள பொருட்களின் ஒளியை வளைத்து பெரிதாக்கியுள்ளது.

ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி அதன் 6.5 மீட்டர் அகலமுள்ள தங்க கண்ணாடி மற்றும் அதி உணர்திறன் அகச்சிவப்பு கருவிகளும் பெருவெடிப்பு நடந்ததற்கு 600 மில்லியன் ஆண்டுகளுக்கு பிறகு இருந்த விண்மீன்களின் சிதைந்த வடிவத்தை (சிவப்பு வளைவுகள்) படமாக எடுத்துள்ளது.

இதன் விளைவாக இதுவரை பெறப்பட்ட ஆழமான அண்டப் பார்வைப் படமாகவும் இது இருக்கலாம். "ஒளி வினாடிக்கு 186,000 மைல் வேகத்தில் பயணிக்கிறது. மேலும் அந்த சிறிய புள்ளிகளில் ஒன்றில் நீங்கள் பார்க்கும் அந்த ஒளி சில பில்லியன் ஆண்டுகளுக்கும் மேலாக பயணிக்கிறது" என்று நாசா நிர்வாகி பில் நெல்சன் கூறினார்.

"மேலும், நாங்கள் இன்னும் பின்னோக்கிச் செல்ல முடிவு செய்துள்ளோம். இது ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியின் முதல் படம் தான். பிரபஞ்சம் 13.8 பில்லியன் ஆண்டுகள் பழமையானது என்பது எங்களுக்குத் தெரியும் என்பதால், நாம் கிட்டத்தட்ட பிரபஞ்சத்தின் ஆரம்பத்தை அடையப்போகிறோம்." என்று அவர் மேலும் கூறினார்.

ஹப்பிள் தொலைநோக்கி இவ்வாறான பலனைத் தருவதற்காக விஞ்ஞானிகள் வாரக்கணக்கில் வானத்தை பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியோ வானில் மிக ஆழமான பொருட்களை 12.5 மணிநேர அவதானிப்புகளுக்கும் பிறகு அடையாளம் கண்டுள்ளது.

13 பில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய ஒளியை படமெடுத்த நாசா - விரிவான தகவல்கள்
Space Advertising : விண்வெளியில் விளம்பரம் செய்யும் நிறுவனங்கள் : பூமிக்கு அடுத்த ஆபத்தா?

நாசாவும் அதன் சர்வதேச பங்காளிகளான ஐரோப்பிய மற்றும் கனேடிய விண்வெளி நிறுவனங்களும் செவ்வாயன்று வெப் தொலைநோக்கியில் இருந்து மேலும் வண்ணப் படங்களை வெளியிடும்.

பூமியில் இருந்து 1,000 ஒளியாண்டுகளுக்கு மேல் அமைந்துள்ள மாபெரும் கோளான WASP-96 b இன் வளிமண்டலத்தை வெப் தொலைநோக்கி ஆய்வு செய்துள்ளது. அந்த வளிமண்டலத்தின் வேதியியல் பற்றி அது சொல்லும்.

WASP-96 b அதன் தாய் நட்சத்திரத்திற்கு மிக மிக அருகில் உயிர் வாழ்வதற்குச் சுற்றுகிறது. ஆனால், ஒரு நாள், பூமியை சுற்றி இருக்கும் வாயுக்களைக் கொண்ட ஒரு கிரகத்தை வெப் தொலைநோக்கி உளவு பார்க்கக்கூடும் என்று நம்பப்படுகிறது. இது உயிரியல் இருப்பதைக் குறிக்கும் ஒரு அற்புதமான வாய்ப்பு.

நாசா விஞ்ஞானிகள் வெப் தொலைநோக்கி அதன் வாக்குறுதியை நிறைவேற்றும் என்பதில் சந்தேகமில்லை என்கிறார்கள்.

"நான் முதல் படங்களைப் பார்த்தேன், அவை கண்கவர் காட்சியாக உள்ளன" என்று துணை திட்ட விஞ்ஞானி டாக்டர் அம்பர் ஸ்ட்ராக் கூறினார்.

13 பில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய ஒளியை படமெடுத்த நாசா - விரிவான தகவல்கள்
உயிர்வாழ தகுதியான மண்டலத்தில் Super-Earth கண்டுபிடிப்பு - விண்வெளி ஆராய்ச்சியின் அடுத்தபடி


"அவை உருவங்களாகவே ஆச்சரியமாக இருக்கின்றன. ஆனால் அவற்றைக் கொண்டு நாம் செய்யப் போகும் விரிவான அறிவியலின் குறிப்புகள் தான் என்னை மிகவும் உற்சாகப்படுத்துகிறது" என்று அவர் கூறினார்.

வெப் தொலைநோக்கி திட்டத்தின் திட்ட விஞ்ஞானி டாக்டர் எரிக் ஸ்மித், புதிய தொலைநோக்கியின் முக்கியத்துவத்தை பொதுமக்கள் ஏற்கனவே புரிந்து கொண்டதாக தான் கருதுவதாக கூறினார்.

"வெப் தொலைநோக்கியின் வடிவமைப்பு, தோற்றம் போன்றவையும் அதன் பணியும் பொதுமக்கள் மிகவும் கவரப்படுவதற்கு பெரிய அளவில் காரணம். இது எதிர்காலத்தில் இருந்து வரும் விண்கலம் போல் தெரிகிறது." என்று உற்சாகத்துடன் அவர் கூறினார்.

ஆக பிரபஞ்சத்தின் தோற்றம் குறித்த இரகசியங்களையும், உயிரினங்கள் வாழும் கிரகங்களை கண்டுபிடிப்பதையும் இந்த ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி சொல்லப் போகிறது. விஞ்ஞானிகளும், அறிவியல் ஆர்வலர்களுக்கும் இது உற்சாகம் அளிக்கும் செய்தியாகும்.

13 பில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய ஒளியை படமெடுத்த நாசா - விரிவான தகவல்கள்
செவ்வாய் கிரகத்தில் குப்பைகள் : என்ன நடக்கிறது அங்கே? - விஞ்ஞானிகள் விளக்கம்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com