செவ்வாய் கிரகத்தில் குப்பைகள் : என்ன நடக்கிறது அங்கே? - விஞ்ஞானிகள் விளக்கம்

செவ்வாய் கிரகத்தில் இரு பாறைகளுக்கு இடையில் மனிதர்கள் தங்கள் உணவுப் பொருட்களை பார்சல் செய்யப் பயன்படுத்தும் ஃபாயில் பேப்பர் போல் இருந்ததாக வெளியான புகைப்படம் குறித்து நாசா விஞ்ஞானிகள் நீண்ட நேரம் ஆய்வு செய்து விளக்கம் கொடுத்துள்ளனர்.
Mars
MarsTwitter
Published on

ஆறறிவு கொண்ட மனிதன் கால்வைத்து செழித்து வளரத் தொடங்கிய இடமெல்லாம் குப்பைகளும், சண்டை சச்சரவுகளும் தான் நிரம்பி வழிகின்றன.

சில நூற்றாண்டுகளுக்கு முன்பு வரை, பச்சை பசேலென காடுகளாக இருந்த இடங்களில் பல, இன்று ரியல் எஸ்டேட் என்கிற பெயரில் காலி மனைகளாகவும், அடுக்குமாடிக் குடியிருப்புகளாகவும் மாறியுள்ளன.

மனித கழிவுகளால் நிலம், நீர், காற்று என மாசுபடாத விஷயங்களே இல்லை எனலாம். சரி இந்த மனித இனம் பூமியில்தான் வாழ்கிறது என்பதால், புவி இந்த மாசுபாடுகளை எல்லாம் பொறுத்துக் கொள்ளலாம்.

செவ்வாய் என்ன பாவம் செய்தது? அங்கேயும் குப்பையா என ஒரு சாமானிய மனிதனே கோபப்படும் அளவுக்கு, சமீபத்தில் ஒரு செய்தி வெளியாகியுள்ளது.

Mars
MarsNewsSense

பெர்சவரன்ஸ் ரோவர் என்கிற விண்கலம் நினைவிருக்கிறதா...? அமெரிக்காவின் நாசா அமைப்பு செவ்வாய் கோளை ஆராய அனுப்பிய ரோவர் சமீபத்தில் பல பாறைகள் மற்றும் மண் மாதிரிகளை வெற்றிகரமாகச் சேகரித்தது. அதோடு கடந்த திங்கட்கிழமை ஒரு படத்தையும் அனுப்பியது.

அப்படத்தைப் பார்த்த ரோவர் திட்டத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் சற்றே வாயடைத்துப் போய்விட்டனர். அப்படத்தில், மனிதர்கள் தங்கள் உணவுப் பொருட்களை பார்சல் செய்யப் பயன்படுத்தும் ஃபாயில் பேப்பர் போல ஒரு பொருள், செவ்வாய் கிரகத்தில் இரு பாறைகளுக்கு இடையில் இருந்தது.

அப்பொருள் என்ன என நாசா விஞ்ஞானிகள் நீண்ட நேரம் ஆய்வு செய்தனர். கடைசியாக அது பெர்சவரன்ஸ் ரோவர் வாகனம், செவ்வாய் கிரகத்தில் கடந்த பிப்ரவரி 2021-ல் தரையிறங்கிய போது, அதிலிருந்து வெளிப்பட்ட குப்பைதான் என முடிவுக்கு வந்தனர்.

Mars
செவ்வாய் கிரகத்தில் UFO போன்ற அமானுஷ்ய பொருள் - நாசா வெளியிட்ட புகைப்படம்

விண்வெளித் துறையைச் சேர்ந்தவர்கள் இந்த ஃபாயில் பேப்பர் போன்ற காகிதத்தை தெர்மல் பிளாங்கெட் என்று அழைக்கிறார்கள். இதைப் பயன்படுத்தித் தான் விண்கலம் போன்றவைகளின் தட்பவெப்பநிலையைக் கட்டுப்படுத்துகிறார்கள்.

இது குறித்து நாசாவின் பெர்சவரன்ஸ் மார்ஸ் ரோவரின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் கணக்கில், அந்த வெள்ளி நிற ஃபாயில் காகிதம் போன்ற குப்பை செவ்வாயில் இருப்பது போன்ற படம் பதிவிடப்பட்டிருக்கிறது.

இதைவிட ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், பெர்சவரன்ஸ் ரோவர் தரையிறங்கிய இடத்திலிருந்து, இந்த தெர்மல் பிளாங்கெட் குப்பை சுமார் இரண்டு கிலோமீட்டர் தள்ளிக் கிடைத்ததுதான்.

ரோவர் வாகனம் தரையிறங்கும் போதே இந்த குப்பைத் துண்டு இங்கே வந்துவிட்டதா? அல்லது செவ்வாய் கிரகத்தில் வீசும் காற்று காரணமாக இந்த குப்பை இங்கு வந்ததா? என்கிற கேள்வியும் எழுப்பப்படுகிறது.

1967ஆம் ஆண்டு கையெழுத்திடப்பட்ட விண்வெளி ஒப்பந்தத்தில் (Outer Space Treaty), விண்வெளி, நிலவு உட்பட எந்த ஒரு விண்வெளி சார் கோள், எரிகல் போன்றவற்றில் பாதிக்கப்படக்கூடிய மாசுபாடுகளும் செய்யப்படக் கூடாது எனக் கூறப்பட்டிருக்கிறது.

Mars
MarsPixabay

ஆனால் மாசுபாடு குறித்து விரிவாக விளக்கப்படவில்லை என ஒரு தரப்பினர் தங்கள் வாதங்களையும் வருத்தத்தையும் முன்வைக்கிறார்கள்.

செவ்வாய் கிரகத்தில் உள்ள வளிமண்டலம் புவியைப் போல அடர்த்தி மிக்கதல்ல. அதன் வளிமண்டலம் மெலிதாகத் தான் இருக்கும். எனவே செவ்வாய் கோளில் எது தரையிறங்க வேண்டுமானாலும் பாராசூட், லேண்டிங் அமைப்பு போன்றவற்றைப் பயன்படுத்தித்தான் தரையிறங்க முடியும். எனவே இதுபோன்ற சில குப்பைகளைத் தவிர்க்க முடியாது என விஞ்ஞானிகள் தரப்பில் விளக்கம் கூறப்படுகிறது.

கடந்த 2021 பிப்ரவரியில் செவ்வாய் கோளில் ஜெசெரோ கிரேடர் என்கிற பகுதியில் தரையிறங்கிய பெர்சவரன்ஸ் ரோவர், அக்கோளில் உயிர்கள் ஏதேனும் வாழ்ந்திருக்கிறதா என ஆராய்ந்து கொண்டிருக்கிறது. அதோடு செவ்வாயின் பல பாறை மற்றும் மண் மாதிரிகளையும் சேகரித்து வருகிறது. சுமார் 3.5 பில்லியின் ஆண்டுகளுக்கு முன் செவ்வாயில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கலாம் என அறிவியல் சமூகம் நம்புகிறது.

Mars
செவ்வாய் கிரகம் : ஏன் வறண்டு போனது? - விஞ்ஞானிகள் தரும் ஆச்சர்ய விளக்கம்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com