கடல் வாழ் உயிரினங்களிலேயே அதிக அச்சத்தை ஏற்படுத்தக்கூடியது சுறாக்கள் தான். அவற்றை விட அளவில் மிகப் பெரிய உயிரினங்கள் பல கடலில் இருந்தாலும் வேட்டையாடும் தன்மை, பயங்கரமான உருவமைப்பு, மற்றும் தாக்குதல் முறைகள் காரணமாக கடலில் ராஜாவாகவே கருதப்படுகிறது சுறாக்கள்.
உலகில் பல வகைச் சுறாக்கள் இருந்தாலும் அதிகமாக தாக்குதல்களை நடத்துவது பெரிய வெள்ளைச் சுறாக்கள் தான். இந்த சுறாக்கள் வேட்டையாடும் போது அவற்றின் நிறம் மாறுவதாக புதிய ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளன.
தென்னாப்ரிக்க கடல்பகுதியில் ஆய்வு நடத்திய ஆராய்சியாளர்கள் பெரிய வெள்ளைச் சுறாக்களில் லுசிசம் என்ற தோல் சிதைவினை கண்டறிந்தனர்.
இந்த மர்மமான நிகழ்வினால் சுறாக்கள் அதன் நிறத்தை இழப்பதாக அவர்கள் கூறுகின்றனர்.
போட்டோ ஐடி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்த ஆய்வை நடத்தியுள்ளனர். அத்துடன் ஆய்வகத்தில் ஹார்மோன் சிகிச்சை மூலமும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இறுதியாக இந்த நிறமாற்றத்துக்கு ஹார்மோன்களே காரணம் எனக் கண்டறியப்பட்டிருக்கிறது.
சுறாக்கள் ஒரு ஹார்மோனால் அடர்த்தியான நிறத்தையும் மற்றொரு ஹார்மோனால் வெளிர் நிறத்தையும் பெறுகின்றன என கன்டறிந்தனர். இதனைக் கொண்டு சுறாக்கள் தங்கள் நிறத்தை மாற்றுகின்றன என உறுதியாகக் கூற முடியாது. மேற்கொண்டு அதிக ஆராய்ச்சிகளை செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் மனிதர்கள் மீதான சுறா தாக்குதல்கள் ஆண்டுக்கு 75 என்ற அளவில் பதிவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust