செவ்வாய் கிரகம் : ஏன் வறண்டு போனது? - விஞ்ஞானிகள் தரும் ஆச்சர்ய விளக்கம்

சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில், சில அசாத்தியமான நிகழ்வுகளால் தான், செவ்வாய் கோளில் வெப்பம் அதிகரித்து கடந்த காலத்திலிருந்த நீர் காணாமல் போனது என்று கூறப்பட்டுள்ளது.
Mars
MarsPixabay

மனிதர்கள் பூமியைத் தாண்டி விண்வெளியில் குடியேறும் ஆர்வம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதற்கான ஆராய்ச்சிப் பணிகளும், முதலீடு லாபம் சார்ந்த வியாபாரக் கணக்கீடுகள் ஒரு பக்கம் நடந்து வருகின்றன. அவ்வளவு ஏன் விண்வெளியில் ஹோட்டல்கள் கூட கட்ட சில நிறுவனங்கள் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன.

மனிதர்கள் விண்வெளிக்குக் குடியேறும் பட்டியலில் முதல் இலக்கு செவ்வாய் கோள்தான். மனிதர்கள் செவ்வாயில் குடியேறுவதற்கு முன் அக்கோளைக் குறித்தும், ஒரு காலத்தில் நீர் இருந்த செவ்வாய் கோள் எப்படி தற்போது வறண்டு போனது என்கிற கேள்விக்கும் விடை காண வேண்டும்.

சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில், சில அசாத்தியமான நிகழ்வுகளால் தான், செவ்வாய் கோளில் கடந்த காலத்திலிருந்த நீர் காணாமல் போனது என்று கூறப்பட்டுள்ளது. செவ்வாய் கோளின் வளிமண்டலத்தின் மேற்பகுதியில் ஒரு மெல்லிய பனி மேகம் பசுமை இல்ல வாயு கண்ணாடி போலச் செயல்பட்டு, செவ்வாய் கோளின் வெப்பத்தை அதனுள்ளே பிடித்து வைத்ததால் தான் அக்கோளிலிருந்த நீர் வறண்டு விட்டதாக அப்புதிய ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Mars
MarsTwitter

இந்த ஆய்வு 'சயின்ஸ் அட்வான்சஸ்' என்கிற சஞ்சிகையில் பிரசுரமாகியுள்ளது. செவ்வாய் கோளின் நீர் மற்றும் வளிமண்டலத்தின் வரலாற்றைக் குறித்த விவரங்களை வெளிக்கொணர, ஆராய்ச்சியாளர்கள் செவ்வாய் கோளிலிருந்த ஆறுகளின் தடத்தைப் பின்தொடர்ந்து ஆராய்ந்தனர்.

"பலரும் பலவிதமான கருத்துக்களை முன்வைத்தனர். ஆனால் செவ்வாய் கோளின் காலநிலை இத்தனை பெரிய மாற்றத்தைக் காண என்ன காரணம் என்பதை எங்களால் உறுதியாகக் கூற முடியவில்லை. செவ்வாய் கோள் மட்டுமே வாழத் தகுதியான கோள் என்கிற நிலையிலிருந்து வாழ முடியாத கோள் என்கிற நிலைக்குச் சென்றுள்ளதை நம்மால் உறுதியாகக் கூற முடியும்.

Mars
வியாழன் கோளை போல உருவாகும் ஒரு கோள் - ஆச்சர்ய தகவல்

எனவே செவ்வாய் கோளில் என்ன ஆனது என்பதைத் தெரிந்து கொள்ள உண்மையிலேயே ஆர்வமாக இருக்கிறோம்" என சிகாகோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஜியோஃபிசிகல் விஞ்ஞானி எட்வின் கைட் தன் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். அவர்தான் இந்த ஆய்வை தலைமை தாங்கி முன்னெடுத்துச் சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

செவ்வாய் தன் வளிமண்டலத்திலிருந்து கார்பன் டை ஆக்ஸைடை இழந்ததால் தான் ஒட்டுமொத்த கோளும் வெப்பமாகி, வறண்டுவிட்டது என ஒரு கருத்து முன்வைக்கப்பட்டது.

Mars
MarsPixabay

பூமியைப் போல, செவ்வாய் கோளில் கண்ட தகடுகள் ஏதும் கிடையாது. எனவே ஆறுகள் ஓடிய தடம்கொண்ட பாறைகள் இப்போதும் காண முடிகின்றன. செவ்வாய் கோளின் சுற்று வட்டப் பாதையிலிருந்து, செயற்கைக் கோள்கள் எடுத்த பல்லாயிரக் கணக்கான படங்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட வரைபடத்தை, சிகாகோ பல்கலைக்கழகம், ஸ்மித்சோனியன் நிறுவனம் ஜே பி எல், கால் டெக் போன்ற நிறுவனங்கள், என்ன காரணத்தால் செவ்வாய் கோள் வெப்பமாகி, தன் நீர் நிலைகளை இழந்தது என ஆராய்ந்தனர்.

செவ்வாய் கோளின் வளிமண்டலத்தில் ஏற்படும் கார்பன் டை ஆக்ஸைட் அளவு மாற்றம், எந்தவித பெரிய மாற்றங்களையும் காட்டவில்லை என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

Mars
அண்டத்தில் தெரியும் அமானுஷ்ய பொருள், அதிர்ச்சியில் விஞ்ஞானிகள் - Mysterious Object

மெல்லிய பனி மேகம் பசுமையில்ல வாயு கண்ணாடி போலச் செயல்பட்டதாகப் பேராசிரியர் எட்வின் கைட் முன் வைத்த கருத்து போக, செவ்வாய் கோளின் உட்புறத்திலிருந்து ஹைட்ரஜன் வாயு வெளியானால், அது கார்பன் டை ஆக்ஸைடோடு வினை புரிந்து வளிமண்டலத்தில் உள்ள இன்ஃப்ரா ரெட் கதிர்களை உறிஞ்சிக் கொண்டு செவ்வாய் கோளை வெப்பப்படுத்தி இருக்கலாம் என மற்றொரு கருத்தை வேறு சில விஞ்ஞானிகள் முன் வைத்தனர்.

சுருக்கமாக, செவ்வாய் கோள் ஏன் வறண்டு போனது என்பதற்கான உறுதியான காரணம் தெரியவில்லை. இது போல இன்னும் பல காரணிகள் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Mars
Space Advertising : விண்வெளியில் விளம்பரம் செய்யும் நிறுவனங்கள் : பூமிக்கு அடுத்த ஆபத்தா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com