ஒரே மாதிரி வளர்க்கப்பட்ட குழந்தையும் சிம்பான்சியும்; நடந்தது என்ன? சோகத்தில் முடிந்த ஆய்வு

ஒரு நாளைக்கு 12 மணி நேரம், வாரம் 7 நாட்களும் என மொத்தம் 9 மாதங்களுக்கு இந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த சமயத்தில் தம்பதியினர் சிம்ப் மற்றும் குழந்தையின் மீது அனேக பரிசோதனைகள் மேற்கொண்டனர்.
ஒரே மாதிரி வளர்க்கப்பட்ட குழந்தையும் சிம்பான்சியும்
ஒரே மாதிரி வளர்க்கப்பட்ட குழந்தையும் சிம்பான்சியும்twitter
Published on

ஆராய்ச்சியாளர்கள் இன்றுவரை மனிதர்கள் மற்றும் விலங்குகளை உட்படுத்தி வினோதமான பரிசோதனைகள் மேற்கொண்டுள்ளனர். அவை பல முறை வெற்றிப் பெற்றிருந்தாலும், சில சமயங்களில் ஆராய்ச்சியாளர்கள் எதிர்பார்த்த முடிவுகள் வரவில்லை என்பது தான் உண்மை!

1931ஆம் ஆண்டில், உளவியலாளர் விந்த்ராப் நைல்ஸ் கெல்லாக் மற்றும் அவரது மனைவி, வினோதமான பரிசோதனை ஒன்றை மேற்கொண்டனர். அது அவரது மகன் மற்றும் ஒரு சிம்பான்சியை ஒன்றாக வளர்க்கும் முயற்சி.

குவா என பெயரிடப்பட்ட சிம்ப், மற்றும் நைல்ஸ் கெல்லாகின் மகன் டொனால்ட் ஒரு சேர வளரக்கப்பட்டனர். குவா அமெரிக்காவில் cross-rearing பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட முதல் சிம்பான்சி ஆகும். குவாவை உளவியலாளர் கெல்லாக் அவரது வீட்டிற்கு அழைத்து வரும்போது பிறந்து ஏழரை மாதங்களே ஆகியிருந்தது. டொனால்ட் அப்போது பத்து மாத குழந்தை.

ஒரே மாதிரி வளர்க்கப்பட்ட குழந்தையும் சிம்பான்சியும்
ஓநாய், குரங்கு, கோழியால் வளர்க்கப்பட்ட குழந்தைகள்: மிருகங்களாகவே மாறிய மனிதர்களின் கதை!

குழந்தை வளர்ப்பும் சுற்றுசூழலும்:

”விலங்குகளை போல, உடை அணியாமல், மனிதர்களின் மொழிகளை கற்காமல், மனிதர்களின் அரவணைப்பில்லாமல் ஒரு குழந்தை வளர்ந்தால் எப்படி இருக்கும்?” என்று தனது தி ஏப் அண்ட் தி சைல்ட் என்ற புத்தகத்தில் உளவியலாளர் நைல்ஸ் ஒரு கேள்வியை முன்வைத்திருன்தார். நீண்ட நாட்களாக அவருக்குள் இருந்த இந்த சந்தேகத்தை தீர்த்துகொள்ள விரும்பியே கெல்லாக் இந்த பரிசோதனையை மேற்கொண்டார்.

தி சைகலாஜிகல் ரெக்கார்டின் அறிக்கைபடி, சுற்றுச்சூழல் ஒரு குழந்தையின் வளர்ச்சியில் எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை கண்டறிய மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையாகும். அதன்படி, அந்த சிம்ப் மற்றும் டொனால்ட் இருவரையும் அண்ணன் தங்கையாக வளர்த்தனர் கெல்லாக் தம்பதி.

ஒரு நாளைக்கு 12 மணி நேரம், வாரம் 7 நாட்களும் என மொத்தம் 9 மாதங்களுக்கு இந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த சமயத்தில் தம்பதியினர் சிம்ப் மற்றும் குழந்தையின் மீது அனேக பரிசோதனைகள் மேற்கொண்டனர்.

பரிசோதனை முறைகள்:

டொனால்டின் "இரத்த அழுத்தம், நினைவாற்றல், உடல் அளவு, எழுதுதல், ரிஃப்லெக்ஸ், குரல், நடை, வலிமை, அச்சங்கள், கீழ்ப்படிதல், மொழி புரிதல், கவனம் செலுத்துதல் உள்ளிட்டவை சோதிக்கப்பட்டன என்று தி சைகலாஜிகல் ரெக்கார்டின் ஆசிரியர் குறிப்பிட்டார். இதுபோலவே சிம்பான்சியின் நடவடிக்கைகளும் ஆராயப்பட்டன.

குவா மற்றும் குழந்தையின் மீது பொருட்களை வீசி எறிவது, நாற்காலியில் உட்காரவைத்து சுற்றிவிடுவது, அவர்களை கிள்ளிப்பார்த்து எப்படி அவர்கள் எதிர்வினையாற்றுகிறார்கள் போன்றவை கணக்கிடப்பட்டது.

பரிசோதனையின் விளைவு:

ஆனால், இதன் விளைவு கெல்லாக் தம்பதி எதிர்பார்த்த விதத்தில் அமையவில்லை. சிறு வயது முதலே குழந்தையும் சிம்ப்பும் ஒன்றாக வளர்க்கப்பட்டதன் தாக்கத்தால், சிறிது காலத்திற்கு பிறகு குழந்தையிடம் வித்தியாசமான நடவடிக்கைகளை பெற்றோர் கவனித்துள்ளனர்.

அதாவது, டொனால்ட் குரங்குகள் போன்ற பண்புகளை வெளிப்படுத்த தொடங்கியுள்ளான். அதிகப்படியான கோபம், மனிதர்களை கடிப்பது, குரங்குகளை போல சத்தமிடுவது போன்ற நடவடிக்கைகளை அவனிடம் கவனிக்க தொடங்கினர். மேலும், டொனால்ட் நான்கு கால்களில் நடப்பது, அதிக உணவு தேவைப்பட்டால் குவாவை போல குரைப்பது போன்ற நடவடிக்கைகளிலும் அவன் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

ஒரே மாதிரி வளர்க்கப்பட்ட குழந்தையும் சிம்பான்சியும்
Real மௌக்லி: ஓநாய் வளர்த்த காட்டுச் சிறுவன் - அதிர வைக்கும் உண்மை கதை

நிறுத்தப்பட்ட பரிசோதனை:

இதனால் பயந்துபோன தம்பதியினர், இந்த பரிசோதனையை நிறுத்தியுள்ளனர். மொத்தம் ஐந்து வருடங்கள் மேற்கொள்ளப்படும் என முடிவு செய்யப்பட்டிருந்த பரிசோதனை, ஒன்பதே மாதங்களில் முடிவுக்கு வந்தது. பரிசோதனை தடை செய்யப்பட்டாலும், டொனால்டின் நடவடிக்கைகளில் எந்த வித மாற்றத்தையும் ஏற்படுத்த முடியவில்லை.

குவா மற்றும் டொனால்டின் மரணம்:

அதன் பிறகு டொனால்ட் குறித்த வேறெந்த தகவல்களும் கிடைக்காத நிலையில், அவர் 1973ல் 43 வயதில் தற்கொலை செய்துகொண்டதாக தகவல் கிடைத்தது என்று டைம்ஸ் நவ் தளம் தெரிவிக்கிறது.

டொனால்ட் உடன் வளர்க்கப்பட்ட குவா என்ற சிம்ப் அதனை தத்தெடுத்த காப்பகத்திலேயெ விடப்பட்டது. அங்கு சிறிது காலம் மற்ற பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், குவா சிம்ப் 3 வயதில் நிமோனியா நோய் தாக்கத்தால் உயிரிழந்தது.

பரிசோதனை நிற்க மற்ற காரணங்கள்:

The Psychological Record இன் கூற்றுப்படி, காலத்திற்கு முன்பே நடத்தப்பட்ட இந்த பரிசோதனை சிறப்பான வெற்றியயே பெற்றிருக்கலாம என நம்பப்படுகிறது. காரணம் சுற்றுச்சூழல் வாய்ப்புகள் மற்றும் செறிவூட்டப்பட்ட சூழலில் உருவாக்கக்கூடிய வளர்ச்சி ஆதாயங்களைப் பொருட்படுத்தாமல் இந்த சோதனை நடத்தப்பட்டது.

இந்த சோதனை ஏன் நிறுத்தப்பட்டிருக்கலாம் என்பதற்கான சில காரணங்களும் பின்னர் கூறப்பட்டது. டொனால்டை விட சிம்ப் வலு பெற்றிருக்க கூடும், அல்லது ஒன்பது மாதங்கள் நீண்ட சோதனையால் தம்பதியினர் சோர்வடைந்திருக்கலாம் எனக் கூறப்பட்டது.

குவாவால் மனித மொழிகளை கற்க முடியாததால் தம்பதியினர் நம்பிக்கையையும் இழக்கத் தொடங்கினர் என்றும் ஒரு தரப்பு கூறுகிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com