நம் முன்னோர்கள் சக மனிதர்களை சாப்பிட்டனரா? - அறிவியல் கூறுவதென்ன?

1.45 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு கிடைத்த ஒரு எலும்பை ஆராய்ந்ததில் அந்த எலும்பு ஒரு கருவியால் மூட்டில் வெட்டப்பட்டுள்ளது தெரியவந்திருக்கிறது. அதுவும் உணவுக்காக வெட்டப்படும் வகையில்!
நம் முன்னோர்கள் சக மனிதர்களை சாப்பிட்டனரா? - அறிவியல் கூறுவதென்ன?
நம் முன்னோர்கள் சக மனிதர்களை சாப்பிட்டனரா? - அறிவியல் கூறுவதென்ன?Twitter
Published on

மனித கறியை மனிதனே உண்ணும் பழக்கத்தை நர மாமிசம் சாப்பிடுதல் என்கின்றனர். ஆங்கிலத்தில் கேனிபலிசம் என்று கூறுவர். 

நாகரீக உலகலத்திலேயே நர மாமிசம் சாப்பிடும் சம்பவங்கள் ஆங்காங்கே நடைபெற்று நம்மை அதிர்ச்சியடைய வைக்கின்றன. நம் முன்னோர்களுக்கு நரமாமிசம் சாதாரணாமானதாக இருந்திருக்கலாம் என சமீபத்தில் நடந்த ஆய்வில் தெரிவிக்கின்றனர். 

எப்போதும் இல்லை என்றாலும் மனிதர்கள் சில நேரங்களில் நரமாமிசமும் சாப்பிட்டுள்ளதாக இந்த ஆய்வுகள் கூறியுள்ளன.

ஸ்மித்ஸோனியன் மேகசின் தான் இந்த ஆய்வில் ஈடுபட்டது. இவர்கள் 1.45 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு கிடைத்த ஒரு எலும்பை ஆராய்ந்ததில் அந்த எலும்பு ஒரு கருவியால் மூட்டில் வெட்டப்பட்டுள்ளது தெரியவந்திருக்கிறது. அதுவும் உணவுக்காக வெட்டப்படும் வகையில்!

மனிதர்களின் முன்னோர்களாக இருந்த உயிரினம் நரமாமிசம் சாப்பிட்டதற்கான மிகவும் பழமையான ஆதாரம் இது எனகின்றனர். 

<div class="paragraphs"><p>Cannibalism</p></div>

Cannibalism

NewsSense

மரங்களில் இருந்து அனைத்து உயிரினங்களும் தாங்கள் வாழ்வதற்காக, உணவுக்காக சக உயிர்களை சாப்பிடக் கூடியவை தான். புதைப்படிவங்கள் மனிதர்களும் 1.45 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் இதனைச் செய்துள்ளனர் என்பதைக் காட்டுகின்றன என ஆய்வின் தலைமை ஆசிரியர் கூறியுள்ளார்.

அந்த எலும்பு கென்யாவில் உள்ளா டுர்கனா என்ற பகுதியில் 1970ம் ஆண்டு கிடைத்துள்ளது. 2017ம் ஆய்வின் தலைவரான போபினெர் அதனை கூர்மையாக நவீன தொழில்நுட்பங்களுடன் ஆராய்ந்தார். 

நம் முன்னோர்கள் சக மனிதர்களை சாப்பிட்டனரா? - அறிவியல் கூறுவதென்ன?
62 கிலோ முட்டைகோஸ், 30 கிலோ பூசணி... ராட்சத காய்கறிகள் வளரும் பூமி - அறிவியல் சொல்வதென்ன?

கென்யாவில் கிடைத்த இந்த எலும்பின் அதே காலக்கட்டத்தைச் சேர்ந்த மற்ற விலங்குகளின் எலும்புகளிலும் ஆயுதங்களிம்ன் தடம் இருப்பதை போபினார் அறிந்துள்ளார். 

நம் முன்னோர்கள் சக மனிதர்களை சாப்பிட்டனரா? - அறிவியல் கூறுவதென்ன?
Cannibalism : தன் இனத்தையே உண்ணும் விலங்குகள்; 7 விசித்திர உண்மைகள்

“இந்த எலும்பில் இருக்கும் தடம் என்னவென்று எனக்கு உறுதியாக தெரியும். உண்மையில் இப்படி ஒரு தகவல் கிடைக்கும் என ஆய்வைத் தொடங்கும் போது நான் எதிர்பார்க்கவே இல்லை.” என அவர் கூறியுள்ளார். 

மனிதர்களின் முன்னோர் ஒருவரை ஒருவர் சாப்பிடனர் என்பது கேட்பதற்கு இனிமையாக இல்லை என்றாலும் அது உண்மைதான் என அறிவியல் கூறுகின்றது.

நம் முன்னோர்கள் சக மனிதர்களை சாப்பிட்டனரா? - அறிவியல் கூறுவதென்ன?
பகலில் குட்டி தூக்கம் போடுபவரா நீங்கள்? இதன் பலன்கள் என்ன - புதிய ஆய்வு சொல்வதென்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com