ஒரு முட்டைகோஸ் எடை சராசரியாக அரை கிலோ முதல் ஒரு கிலோ வரை இருக்கும். 62.5 கிலோ எடை இருக்கும் முட்டைகோஸை என்னவென்று அழைப்பீர்கள்?
30 கிலோ பூசணி, 15 கிலோ ப்ரோக்கோலி இருந்தால் எவ்வளவு பெரியதாக இருக்கும் என நினைத்துப்பாருங்கள். இது எல்லாம் சாதாரணமாக விளையும் மண் இருக்கிறது.
அதுதான் அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணம். யார் அதிக எடையுடைய காய்கறியை வளர்க்கிறார் என போட்டிகள் எல்லாம் இங்கு நடத்துகின்றனர்.
அலாஸ்காவில் ராட்சத காய்கறிகள் விளைவதன் ரகசியம் என்ன?
அலாஸ்கா அமெரிக்காவின் வடக்கு மாகாணங்களில் ஒன்று. பெரும்பாலும் பனியால் சூழப்பட்டுள்ளது. நார்டிக் நாட்டில் இருப்பது போலவே இங்கும் வாழ்க்கை இருக்கும்.
வடக்கு முனையில் இருப்பதனால் அலாஸ்காவில் கோடைக்காலமென்றால் அதிக நேரம் சூரியன் இருக்கும். ஒரு நாளுக்கு 20 மணி நேரம் வரை சூரிய வெளிச்சம் கிடைக்கும்.
இதற்கு "மிட் நைட் சன்" என்று பெயர். இதனால் புதிதாக செல்லும் மனிதர்கள் தூக்கம் வராமல் அவதிப்படலாம். ஆனால் அங்கிருக்கும் தாவரங்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் இருக்கும்.
அதிக சூரியன் இருந்தால் அதிக ஒளிச்சேர்க்கை நடக்கும். அதிக சத்துகள் கிடைக்கும். இதனால் காய்கறிகள் பெரிதாக வளர முடிகிறது.
முட்டைகோஸ் போன்ற இலைகளுக்கு சொல்லவா வேண்டும்? ராட்சத கோஸ்களாக வளர்ந்து நம்மையே பயமுறுத்தும்.
உருவம் மட்டுமல்ல அதிக சூரிய வெளிச்சம் கிடைத்தால் காய்கறிகள் மிகுந்த சுவையாகவும் இருக்கும்.
இங்குள்ள கேரட்டை சாப்பிடுபவர்கள் அதில் நிச்சயம் சர்க்கரை சேர்க்கப்பட்டிருக்கிறது என் நம்புவார்களாம்.
இது மாதிரியான ராட்சத காய்கறிகளை வளர்க்க சூரிய வெளிச்சத்துடன் சரியான விதைகளை தேர்வு செய்ய வேண்டியதும் அவசியமாம்.
இயற்கைமுறையில் ராட்சஸ காய்கறிகளை உருவாக்க வகுப்புகளும் நடத்துகின்றனர்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust