ஹவாய் : வானில் தோன்றிய மர்ம சுழல்; மலைத்து போன மக்கள் - உண்மை என்ன?

பிரபஞ்சத்தில் நடக்கும் நிகழ்வுகள் நம்மால் பார்க்க முடிவது மிகவும் அதிசயமான ஒன்றுதான். ஆனால் ஒவ்வொரு கோளும் வெகு தொலைவில் இருப்பதனால் நம்மால் மிக தெளிவாக எதையும் காண முடியாது. ஆனால் இந்த சுழல்...
Japanese telescope captures mysterious blue spiral in Hawaii
Japanese telescope captures mysterious blue spiral in Hawaii Twitter
Published on

வானில் ஒரு சுழற்போல ஒளிர்ந்து கொண்டு செல்வதை ஜப்பானிய தொலைநோக்கிகள் ஹவாயில் கண்டறிந்துள்ளன.

சுபரு என்ற தொலைநோக்கி ஹவாயின் மௌனா கியா என்ற எரிமலை நகரில் உள்ளது.

அந்த தொலைநோக்கியில் தான் நீல நிறத்தில் நகரும் சுழலைக் கண்டறிந்தனர். இது பார்பதற்கு கடலில் ஏற்படும் நீர்சுழற்சி போல இருந்தது.

பிரபஞ்சத்தில் நடக்கும் நிகழ்வுகள் நம்மால் பார்க்க முடிவது மிகவும் அதிசயமான ஒன்றுதான். ஆனால் ஒவ்வொரு கோளும் வெகு தொலைவில் இருப்பதனால் நம்மால் மிக தெளிவாக எதையும் காண முடியாது.

ஆனால் இந்த சுழற்சி மிகவும் தெளிவாக இருந்ததால் இது எலான் மஸ்கின் வேலையாக இருக்கலாம் எனக் கூறுகின்றனர்.

ஆம், எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் பல செயற்கை கோள்களை பூமிக்கு அருகில் சுற்ற வைத்துள்ளது. இவை கண்ணுக்கு தெரியும் தூரத்தில் அமைந்துள்ளன.

சில நாட்களுக்கு முன்னர் மதுரையில் இருந்து கூட ஸ்பேஸ் எக்ஸ் செயற்கை கோள்களைப் பார்க்க முடிந்தது.

கடந்த ஜன்வரி 18ம் தேதி ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் புதிய செயற்கை கோளை ஏவியிருக்கிறது அதன் புகைப்படம் இது எனக் கண்டறிந்துள்ளனர்.

Japanese telescope captures mysterious blue spiral in Hawaii
"நான் தற்கொலை செய்துகொண்டால்..." Twitter Space-ல் என்ன பேசினார் எலான் மஸ்க்?
Japanese telescope captures mysterious blue spiral in Hawaii
மதுரை மக்களை மலைக்க வைத்த மர்ம ஒளி; ஆச்சரியத்தில் உறைந்த தூங்கா நகரம் - காரணம் என்ன?

ராக்கெட்டில் இருந்து எரிபொருள் வெளியேறுவது சுழற்போல காட்சியளிக்கிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நம் பூமியை சுற்றி ஏற்கெனவே அதிகப்படியான செயற்கைகோள்கள், செயலிழந்த செயற்கை கோள்களின் குப்பைகள் இருக்கின்றன. இவை நமக்கு எப்போது வேண்டுமானாலும் தீங்கு விளைவிப்பதாக மாறலாம் என அச்சம் தெரிவிக்கின்றனர் செயற்பாட்டாளர்கள்.

Japanese telescope captures mysterious blue spiral in Hawaii
Vladimir Komarov: உலக வரலாற்றில் முதல் முறையாக வானில் உயிரிழந்த விண்வெளி வீரர்- யார் இவர்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com