மதுரை மக்களை மலைக்க வைத்த மர்ம ஒளி; ஆச்சரியத்தில் உறைந்த தூங்கா நகரம் - காரணம் என்ன?

மதுரை மக்கள் குறிப்பாக உசிலம்பட்டிக்காரர்கள் வியந்து போய் வானத்தைப் பார்க்க வைத்திருக்கும் ஒரு ஒளித் தொடரி (ரயில் போல வானத்தில் தெரிந்த நட்சத்திரக் கூட்டம்) போன்ற ஒரு விஷயம், கடந்த சில மணி நேரங்களாக வரலாகிக் கொண்டிருக்கிறது.
மதுரை மக்களை மலைக்க வைத்த மர்ம ஒளி; ஆச்சரியத்தில் உறைந்த தூங்கா நகரம் - காரணம் என்ன?
மதுரை மக்களை மலைக்க வைத்த மர்ம ஒளி; ஆச்சரியத்தில் உறைந்த தூங்கா நகரம் - காரணம் என்ன?Twitter
Published on

அறிவியல், தொழில்நுட்பம் உச்சத்தில் இருக்கும் காலமிது. 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை சிரமமாக இருந்த பல விஷயங்கள் தற்போது சொடுக்கும் நேரத்துக்குள் செய்யும் அளவு இணையம் எல்லாவற்றையும் சாத்தியமாக்கிவிட்டது. 

இந்த காலத்திலும் சில விஷயங்களைக் கண்டால் மனிதன் உறைந்து போகிறான் அல்லது குழந்தை ஆகிறான். உதாரணத்துக்கு யானை, சில்லிடம் மழை, அம்மா கையில் உணவு, வானத்தில் ஜொலிக்கும் நட்சத்திரம் எனப் பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்.

அப்படி நம் மதுரை மக்கள் குறிப்பாக உசிலம்பட்டிக்காரர்கள் வியந்து போய் வானத்தைப் பார்க்க வைத்திருக்கும் ஒரு ஒளித் தொடரி (ரயில் போல வானத்தில் தெரிந்த நட்சத்திரக் கூட்டம்) போன்ற ஒரு விஷயம், கடந்த சில மணி நேரங்களாக வரலாகிக் கொண்டிருக்கிறது.

ஒவ்வொருவராகப் பார்க்கத் தொடங்கிய பின் மதுரை மக்களுக்குள்ளேயே என்ன இது, ஏன் இப்படி ஒளி ஒரு ரயில் வண்டி போலத் தெரிகிறது, ஜொலிக்கிறது என ஆச்சரியப்பட்டுப் பார்த்தவர்கள் மெல்லப் புகைப்படம் எடுப்பது, காணொளிப் பதிவு செய்வது என சமூக வலைத்தளங்கள் பக்கம் திசை திருப்பிவிட்டார்கள். ஒரு சிலர் இது ஏதோ வானியல் நிகழ்வு என ஆச்சர்யப்பட்டு இருக்கிறார்கள். மற்ற சிலரோ இது ஏதோ அதிசயம் என வாய் பிளந்து இருக்கிறார்கள். 

அப்புகைப்படங்கள் காணொளிகள் எல்லாம் சமூக வலைத்தளங்களில் டிரெண்டாகத் தொடங்கிவிட்டன. இப்போது பல்வேறு செய்தி நிறுவனங்களும் சமூக வலைத்தளத்தில் வைரலாகும் காணொளிகளைக் குறித்து செய்திகளையும், விளக்கங்களையும் வெளியிட்டு வருகின்றன.

உண்மையில் அது என்ன?

இப்படி ஒரு நீளமான விட்டுவிட்டு மின்னக் கூடிய, நகர்வது போன்ற ஒளி உண்மையிலேயே ஏதாவது வானியல் நிகழ்வா? என துறை சார்ந்த சில வல்லுநர்களிடம் கேட்ட போது, எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தைக் கை காட்டுகிறார்கள்.

எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ஸ்டார்லிங்க் என்கிற திட்டத்தின் கீழ், செயற்கைக் கோள்கள் மூலம் பூமியில் இணைய சேவையைக் கொடுத்து வருகிறது. அப்படி விண்ணில் ஏற்கனவே ஏவப்பட்ட பல்வேறு ஸ்டார்லிங்க் செயற்கைக் கோள்களின் தொகுப்பு தான் இப்படி பூமியிலிருந்து பார்க்கும் போது தெரிகிறது என்கிறார்கள்.

மதுரை மக்களை மலைக்க வைத்த மர்ம ஒளி; ஆச்சரியத்தில் உறைந்த தூங்கா நகரம் - காரணம் என்ன?
பறக்கும் ரயில் போல வானில் தோன்றிய மர்ம ஒளி - குழம்பிய உ.பி. மக்கள் - உண்மை என்ன?

இதற்கு முன் உலகின் பிற பகுதிகளில் அல்லது இந்தியாவில் இப்படிப்பட்ட நிகழ்வுகள் நடந்திருக்கிறதா?

ஆம், இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள ஃபருகாபாத் என்கிற பகுதியில்  கடந்த செப்டம்பர் 13ஆம் தேதி,  ஒளி ரயில் நீளமாக ஓடுவது போல் தெரிந்தது என அப்போதே பல ஊடகங்களில் செய்திகள் வெளியாயின. அப்படித் தெரிந்தது ஸ்டார்லிங்க் 51 செயற்கைக் கோள் தொடரி என பிறகு உறுதிப்படுத்தப்பட்டது.

இதுவரை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ஸ்டார்லிங்க் திட்டத்தின் கீழ் சுமார் 3.000 செயற்கைக் கோள்களை அனுப்பியுள்ளதும் இங்கு நினைவுகூரத்தக்கது.

மதுரை மக்களை மலைக்க வைத்த மர்ம ஒளி; ஆச்சரியத்தில் உறைந்த தூங்கா நகரம் - காரணம் என்ன?
எலான் மஸ்க் : புகைப்படங்களை ஏலம் விட்ட கல்லூரி காதலி

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com