சந்திர கிரகணம்: 2022-ம் ஆண்டின் முதல் சந்திர கிரகணம் - யார் பார்க்கலாம், கிரகண நேரம் என்ன?

சமீபத்தில் தான் உலகம் 2022-ம் ஆண்டின் முதல் சூரிய கிரகணத்தைக் கண்டு களித்தது. தற்போது வரும் மே 15, 16 தேதிகளில் 2022ஆம் ஆண்டுக்கான முதல் சந்திர கிரகணம் நடைபெற உள்ளது.
நிலவு
நிலவுTwitter
Published on

பள்ளி மாணவர்களோ, வேலைக்குச் செல்லும் இளைஞரோ, 40 வயது கடந்த குடும்பஸ்தரோ, வயதானவர்களோ... யாராக இருந்தாலும் வானியல் நிகழ்வுகள் மீது, நம் இந்தியர்களுக்கு, குறிப்பாகத் தமிழ்நாட்டு மக்களுக்கு இருக்கும் ஆர்வத்தைக் கட்டாயம் பாராட்டியே ஆக வேண்டும்.

சூரிய கிரகணம், சந்திர கிரகணம் போன்ற அறிவியல் சார் விஷயங்களும் தமிழ் மக்கள் கொடுக்கும் முக்கியத்துவமே தனி. இதில் ஆன்மிகம் சார்ந்த விஷயங்களை மக்கள் பார்க்கிறார்கள் என்பதையும் மறுப்பதற்கு இல்லை.

சமீபத்தில் தான் உலகம் 2022-ம் ஆண்டின் முதல் சூரிய கிரகணத்தைக் கண்டு களித்தது. தற்போது வரும் மே 15, 16 தேதிகளில் 2022ஆம் ஆண்டுக்கான முதல் சந்திர கிரகணம் நடைபெற உள்ளது.

இந்த அரிய வானியல் நிகழ்வை யார் பார்க்கலாம், கிரகணம் நடக்கும் நேரம் என்ன? வாருங்கள் விரிவாகப் பார்ப்போம்.

Blood Moon Eclipse
Blood Moon EclipseTwitter

சூரியன், பூமி, சந்திரன் ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் நிற்கும் காலத்தைத் தான் சந்திர கிரகணம் என்கிறோம். இப்படி இந்த மூன்றும் ஒரே நேர்கோட்டில் நிற்கும் போது, நிலவின் மீது சூரிய ஒளி படாமல் மறைக்கிறது பூமி.

எனவே தான் நிலவு தற்காலிகமாக மறைந்து சிறிது நேரம் கழித்து மீண்டும் வானில் ஜொலிக்கிறது.

இந்த கிரகணம் மே 15 - 16 தேதிகளில் நடைபெற உள்ளது. சுமார் 85 நிமிடங்கள் நடக்க உள்ள இந்த சந்திர கிரகணத்தை வட அமெரிக்காவில் உள்ள பெரும்பாலான பகுதி, தென் அமெரிக்கா, மத்திய மற்றும் மேற்கு ஐரோப்பா, ஆப்பிரிக்கா எனப் பல பகுதிகளிலிருந்தும் பார்த்து ரசிக்கலாம்.

இந்தியாவில் மே 16ஆம் தேதி காலை சுமார் 7 மணிக்குத் தான் சந்திர கிரகணம் தொடங்குவதால், இந்தியாவிலிருந்து இந்த கிரகணத்தைப் பார்க்க முடியாது. இந்திய நேரப்படி காலை 8.59க்கு முழு சந்திர கிரகணம் தொடங்கி, காலை 10.23க்கு நிறைவடைகிறது.

நிலவு
Kiss Day : மனிதர்கள் முத்தமிடுவதற்கு என்ன காரணம்?

அதே போல் இதை ஒரு ப்ளட் மூன் எக்லிப்ஸ் (Blood Moon Eclipse) என்கிறார்கள். காரணம், இந்த கிரகண காலத்தில் நிலவு ரத்தச் சிவப்பு நிறத்தில் ஜொலிக்கும்.

சூரிய ஒளி, நிலவைச் சென்றடையாமல் பூமி தடுக்கிறது. பூமியின் வளிமண்டலம் வழியாகக் கடந்து நிலவைச் சென்றடையும் சூரிய ஒளி பல்வேறு தூசு, மேகம் போன்றவற்றைக் கடந்து செல்வதால் நிலவு ரத்தச் சிவப்பாக ஜொலிக்கும் என்கிறது நாசா.

இந்த நூற்றாண்டிலேயே அமெரிக்காவின் மேற்கு கடற்கரைப் பகுதியில் நிகழவிருக்கும் நீண்ட கால முழு நேரச் சந்திர கிரகணம் என்பதும் இங்குக் குறிப்பிடத்தக்கது.

நிலவு
'காதலுக்கு இது தான் முக்கியம்' Flirting பின்னிருக்கும் அறிவியல் தெரியுமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com