'காதலுக்கு இது தான் முக்கியம்' Flirting பின்னிருக்கும் அறிவியல் தெரியுமா?

உங்களுக்குத் தெரியுமா பெரும்பாலான ஆண்களும் பெண்களும் ஒரே மாதிரியாகத் தான் ஃப்ளர்டிங் செய்கிறார்கள்! ஒரே முறைகள் தான் வொர்க் அவுட் ஆகின்றன. சிறந்த ஃப்ளர்டிங் முறை எது தெரியுமா?
Flirting
FlirtingTwitter
Published on

கதைகளோ, திரைப்படங்களோ எதுவாயினும் காதலை எப்படி வெளிப்படுத்த வேண்டும் என்று சில வழிமுறைகளை நமக்கு கற்றுத்தருகின்றன. முதலில் பார்ப்பது, பின் பேசுவது, வார்த்தைகளில் விளையாடுவது, வெட்கமுறச் செய்வது, பின் சில நாட்களில் கண்களில் பேசத் தொடங்குவது. இவ்வாறு வளரும் விரல்களால், இதழ்களால் என நீண்டு கொண்டு போகும்.

மேலே சொல்லப்பட்ட காதலுக்கு முந்தைய, காதலைப் பெற முனைகிற செயல்களைத் தான் Flirting என்கிறோம். முதல் முறையாக ஃப்ளர்ட் செய்யும் போது உங்கள் காதலன்/காதலியின் மொபைல் நம்பரை வாங்கிவிட்டால் அதனை வெற்றியாகக் கொள்கிறோம். ஆனால் அதற்கு நாம் மெனக்கெட வேண்டும். நம்மைக் குறித்த நல்ல எண்ணத்தை ஏற்படுத்த வேண்டும்.

சரி ஃப்ளர்டிங்கில் நாம் தனித்துவமாக இருக்கிறோமா எனச் சிந்தித்திருக்கிறீர்களா? உங்களுக்குத் தெரியுமா பெரும்பாலான ஆண்களும் பெண்களும் ஒரே மாதிரியாகத் தான் ஃப்ளர்ட் செய்கிறார்கள்! ஒரே முறைகள் தான் வொர்க் அவுட் ஆகின்றன. சிறந்த ஃப்ளர்டிங் முறை எது தெரியுமா?

Love
LoveTwitter

ஃப்ளர்டிங் குறித்து அறிவியலாளர்கள் செய்த ஆய்வு ஃப்ளர்டிங்கை எளிதாக விளக்குகிறது. அமெரிக்கா மற்றும் நார்வேயைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இந்த ஆய்வினை மேற்கொண்டனர்.

நார்வேயைச் சேர்ந்த 415 பேர் (இரு பாலரும்) மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த 577 பேரும் இந்த ஆய்வில் பங்கெடுத்திருக்கின்றனர்.

அவர்களிடம் எதிர் பாலினத்தவரிடம் அவர்களை ஈர்க்கும் குணங்கள் குறித்து கேள்விகள் கேட்கப்பட்டன.

ஆய்வில் ஆண்கள் ஃப்ளர்ட் செய்யும் போது அவர்களின் பெருந்தன்மையுடனும் அர்ப்பணிப்புடனும் இருப்பது நன்றாக வேலை செய்வது தெரிய வந்துள்ளது. பெண்களுடன் பழகும் போது இந்த இரண்டு குணாதீசியங்களையும் உடன் வைத்துக்கொள்ளுங்கள். அத்துடன் அவர்களுடன் நெருக்கமாக chat செய்வது, அவர்களுடன் அதிக நேரம் செலவிட விருப்பத்தை வெளிப்படுத்துவது போன்றவையும் உதவலாம். முக்கியமாக உடலுறவு குறித்த சிந்தனைகளைத் தவிர்த்துவிட்டு ஃப்ளர்ட் செய்வதே வெற்றிகரமானதாக இருக்கும்!

Flirting
தகிக்கும் இலங்கை : விமான நிலையத்தை சுற்றி வளைத்த மக்கள், ராஜபக்சே வீட்டிற்கு தீ வைப்ப்பு


பெண்கள் ஃப்ளர்ட் செய்யும் காலங்களில் அவர்களின் இணையைக் காண வரும் போது அணியும் ஆடை கவனிக்கப்படுவதாக ஆய்வு கூறுகிறது. அத்துடன் நட்பாகத் தொட்டுப் பேசத் தொடங்குவதும் அடுத்த நிலைக்கான பாதையை எளிதாக்குகிறதாக ஆய்வு கூறுகிறது.

Flirting
Elon Musk : வாடகை செலுத்த, வீட்டை நைட் கிளப்பாக்கிய மஸ்க் - இது எப்ப?

சரி ஃப்ளர்டிங்கில் மாஸ்டர் டூல் இது தான். ஒரு பெண்ணையோ ஆணையோ கவருவதற்கு இதைச் சரியாகச் செய்தால் போதும். சரியான நேரத்தில், இடத்தில் நீங்கள் ஒரு ஜோக் சொல்லி அவர்களைச் சிரிக்க வைத்துவிட்டால் உங்கள் மீது ஈர்ப்பு ஏற்படும் வாய்ப்பு தாறுமாறாக அதிகரிக்கும்.

Flirting
Sex Strike : உள்நாட்டு போர்களை நிறுத்திய பெண்களின் செக்ஸ் நிறுத்தம் - ஓர் ஆச்சர்ய வரலாறு!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com