ஏலியன்ஸ் : நியூசிலாந்து வானத்தில் தோன்றிய மர்ம ஒளி - என்ன காரணம்?

திடீரென்று வானத்தில் தெரிந்த ஒரு சுழல் ஒளியானது நியூசிலாந்து மக்களைத் திகைப்பில் ஆழ்த்தியிருக்கிறது. மேலும், வேற்றுகிரகவாசிகள் பற்றிய வதந்திகளையும் விவாதங்களையும் மீண்டும் தூண்டியிருக்கிறது.
Mysterious blue light
Mysterious blue lightTwitter
Published on

சமீபத்திய காலங்களில், உலகெங்கிலும் உள்ள பல இடங்களில் வானத்தில் சில விசித்திரமான நிகழ்வுகள் நடைபெற்ற வண்ணம் உள்ளன. அந்த வரிசையில், நியூசிலாந்து வானில் ஒளிர்ந்த அந்த விசித்திரமான ஒளியும் சேர்ந்திருக்கிறது. ஸ்டீவர்ட் தீவு மற்றும் ரகியுராவில் உள்ள நட்சத்திரப் பார்வை வழிகாட்டியான அலஸ்டெய்ர் பர்ன்ஸ் என்பவர், ”திடீரென்று வானத்தின் இருளில் ஒரு பெரிய நீல சுழல் தோன்றியதாகவும், தீவின் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்கள் அதைப் பார்த்ததாகவும்” தி கார்டியன் பத்திரிக்கையிடம் தெரிவித்திருக்கிறார்.

"அது ஒரு மகத்தான சுழல் விண்மீன் மண்டலத்தைப் போலத் தோற்றமளித்தது. வானத்தில் மிதந்தபடியே குறுக்கும் நெடுக்குமாக நகர்ந்து கொண்டிருந்தது” என்று பர்ன்ஸ் தி கார்டியனிடம் கூறினார்.

Flying saucers
Flying saucersCanva

இந்த நிகழ்வு வேகமாக பல்வேறு வானியல் குழுக்களில் விவாதத்திற்கான தலைப்பாக மாறியது. மேலும், பறக்கும் தட்டுகளின் சாத்தியக்கூறுகள் மற்றும் அன்னிய படையெடுப்புகளைப் பற்றிய கோட்பாடுகள் குறித்த பேச்சுக்கள் தொடங்கின.

"பூமியின் சுற்றுப்பாதைக்குக் கருந்துளையில் இருந்து ஒரு முன்னறிவிப்பு" என்று ஒரு நட்சத்திர கண்காணிப்பாளர் ஒருவர் கூறினார். இன்னொருவர், ”ஏலியன்கள் மீண்டும் வந்துவிட்டன” என்று கூறினார்.

Mysterious blue light
ஏலியன்ஸ் பூமியில் இருக்கிறார்கள் : அதிர்ச்சியை கிளப்பும் பேராசிரியர் - என்ன நடக்கிறது?
UFO
UFOCanva

இருப்பினும், ஆக்லாந்து பல்கலைக்கழகத்தின் இயற்பியல் பேராசிரியர் ரிச்சர்ட் ஈஸ்டர் மிகவும் எளிமையாக, “இந்த சுழல் ஒளியானது ஒரு ராக்கெட் மூலம் உருவாக்கப்பட்டிருக்கலாம்” என்று கார்டியன் பத்திரிக்கையிடம் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், "உந்துசக்தியைப் பின்புறமாக வெளியேற்றும்போது, முக்கியமாக அங்கே நீர் மற்றும் கார்பன் டை ஆக்சைடு உள்ளது. இது சூரிய ஒளியினால் ஒளிரும் ஒரு மேகத்தை விண்வெளியில் உருவாக்குகிறது.

செயற்கைக்கோளின் சுற்றுப்பாதை மற்றும் சூரியனுடன் ஒப்பிடும்போது நாம் அமர்ந்திருக்கும் விதம் போன்ற விஷயங்களின் காரணத்தால் தென் தீவிலிருந்து பார்க்கும் போது அந்த மேகங்கள் அசத்தலான ஒளியோடு காட்சியளித்திருக்கும்” என்றார்.

Mysterious blue light
ஏலியன்ஸ் பூமி மீது படையெடுக்குமா? ஆராய்ச்சியாளர் கூறும் புதிய தகவல்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com