பால்வெளியில் நான்கு வேற்று கிரகவாசிகளின் நாகரீகங்கள் இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர் ஒருவர் கூறியுள்ளார். மேலும், அவற்றில் ஏதேனும் ஒரு கூட்டம் பூமி மீது படையெடுக்கலாம் என்றும் கூறி பரபரப்பைக் கிளப்பியிருக்கிறார். ‘வைஸ் நியூஸ்’ அறிக்கையின்படி, ஸ்பெயினில் உள்ள விகோ பல்கலைக்கழகத்தில் PhD மாணவர் ஆல்பர்டோ கபல்லெரோ, "தீங்கு விளைவிக்கும் வேற்று கிரக நாகரிகங்களின் பரவலை மதிப்பிட்டுள்ளார்.
"தீங்கிழைக்கும் வேற்று கிரக நாகரிகங்களின் பரவலை மதிப்பிடுதல்" என்ற தலைப்பிலான தன்னுடைய ஆய்வுக் கட்டுரையில், விரோதமான வேற்று கிரக நாகரிகங்களின் பரவலை மதிப்பிடுவதற்கு அவர் முயற்சித்துள்ளார். இருப்பினும், அவருடைய கூற்றுகளுக்கு "சில வரம்புகள்" இருப்பதாகவும் அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.
உலக வரலாற்றில், கடந்த நூற்றாண்டுகளில் நடத்தப்பட்ட படையெடுப்புகள், அவற்றில் சம்பந்தப்பட்ட நாடுகளின் இராணுவ திறன் மற்றும் ஆற்றல், உலகளாவிய நுகர்வு வளர்ச்சி விகிதம் ஆகியவற்றின் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாக கபல்லெரோ குறிப்பிட்டிருக்கிறார்.
Arxiv இதழில் வெளியிடப்பட்ட இன்னொரு மீளாய்வு செய்யப்படாத ஆராய்ச்சிக் கட்டுரையில், “நிலையான விலகல்களின் வரம்புகள், ஒரு நாகரிகத்தின் வேற்று கிரக படையெடுப்பிற்கான வாய்ப்புகளை அறிவதற்குப் பயன்படுத்தப்படுகின்றன” என்று கால்பெர்ரோ குறிப்பிட்டிருக்கிறார்.
அப்படிப் பெறப்பட்ட நிகழ்தகவானது "ஒரு கிரகத்தை அழிக்கும் சிறுகோளின் நிகழ்தகவு தாக்கத்தை விட இரண்டு வரிசைகள் குறைவாக உள்ளதென்று முடிவுகள் காட்டுவதாகவும் கூறினார்.
வேற்று கிரக நாகரீகத்திற்கு ஒரு செய்தியை அனுப்ப விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர். வேற்றுகிரக வாசிகள் குறித்த உறுதியான ஆதாரம் இல்லாவிட்டாலும், அதிகரித்து வரும் ஏலியன்களின் அறிகுறிகள் குறித்து அறிந்து கொள்ள அமெரிக்க அரசாங்கம் தீவிரமாக உள்ளது.
இருப்பினும் கபல்லெரோ தனது ஆய்வறிக்கையில், ”தீவிர விண்மீன் வானொலி செய்திகளை அருகிலுள்ள வாழக்கூடிய கிரகங்களுக்கு அனுப்புவது பற்றிய சர்வதேச விவாதத்திற்கு ஒரு தொடக்கப் புள்ளியாக செயல்படும்” என்று கூறினார்.
"நமக்குத் தெரிந்த வாழ்க்கையின் அடிப்படையில் மட்டுமே இந்த ஆய்வறிக்கையை உருவாக்கியுள்ளேன். வேற்றுகிரகவாசிகளின் எண்ணம் நமக்குத் தெரியாது. ஏலியன்கள் வேறுபட்ட இரசாயன கலவை கொண்ட மூளையைக் கொண்டிருக்கலாம். மேலும் அவர்களிடம் பச்சாதாபம் இல்லாமல் இருக்கலாம் அல்லது மனநோய் சார்ந்த நடத்தைகள் அதிகமாக இருக்கலாம்" என்று கபல்லெரோ வைஸ் இதழுக்கு அளித்த நேர்காணலில் கூறியுள்ளார்.
"எனது இந்த ஆய்வறிக்கை வரம்புகளைக் கொண்டுள்ளது. ஏனெனில் வேற்றுகிரகவாசிகள் எப்படி இருப்பார்கள் என்பது எங்களுக்குத் தெரியாது" என்று அவர் மேலும் கூறினார்.
இது போன்ற நிகழ்வு 100 மில்லியன் ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் என்று அவர் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். கடந்த 50 ஆண்டுகளில் மற்ற நாடுகளில் மனித படையெடுப்புகளை ஆய்வு செய்து, அதில் நமக்குத் தெரிந்தவற்றைக் கொண்டே அந்த ஆஅயவறிக்கை தயாரிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த மாத தொடக்கத்தில் சர்வதேச ஆஸ்ட்ரோபயாலஜி இதழில் கபல்லெரோ ஒரு ஆய்வை எழுதினார். அதில், 1977 ஆம் ஆண்டு ரேடியோ தொலைநோக்கி மூலம் முதன்முதலில் கண்டறியப்பட்ட "WoW signal" ஐ அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust