UFO போன்ற ஒரு பொருள் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் கிடப்பதை அந்த புகைப்படம் காட்டுகிறது. இது மார்ஷியன் ஆட்டோமொபைலா? (Martian Automobile) அல்லது இண்டர்கலெக்டிக் டிரான்ஸிட் பேடா? (Intergalactic Transit Pod) என்று சரியாக தெரியவில்லை.
அது உண்மையில் ஒரு UFO ஆகவோ அல்லது ஏலியன்களுடைய வன்பொருளாகவோ இருந்திருந்தால் மிகச்சிறந்த விஷயமாக இருந்திருக்கும். ஆனால், படத்தில் உள்ள பொருள் மனிதனுக்குச் சொந்தமானது என்று அறியப்பட்டிருக்கிறது.
ஆம், பிப்ரவரி 2021 இல் பெர்செவரன்ஸ் ரோவர் விண்வெளி ஏஜென்சியின் நாசாவுக்குச் சொந்தமான ஒரு நொறுங்கிய விண்கலத்தின் ஒரு பகுதி தான் அந்த படத்தில் காணப்படுகிற “பேக்ஷெல்” ஆகும். பெர்ஸெவரன்ஸ் ரோவரின் ரோபோ ஹெலிகாப்டர் அந்த புகைப்படங்களை எடுப்பதற்காக செவ்வாய் கிரகத்தில் ஒரு வருடம் செலவிட்டிருக்கிறது.
நாசாவில் பணிபுரியும் பொறியாளர் இயன் கிளார்க் கூறுகையில், “கிடைத்த அந்த படங்கள் வேற்றுலக அதிர்வுகளை வெளிப்படுத்துகின்றன" என்றார்.
“அந்த புகைப்படத்தில் இருப்பது வெறும் விண்வெளி கழிவுதான் என்று சொல்லிவிட முடியாது. உடைந்த அந்த விண்கலத்தின் எச்சங்களை பகுப்பாய்வு செய்வதன் மூலம் செவ்வாய் கிரகத்திற்கான நாசாவின் அடுத்த பயணத்திற்கு நாசா தங்களை தயார்படுத்திக் கொள்ளலாம்” என்று நியூ யார்க் டைம்ஸ் பத்திரிக்கை கூறியது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust