மனிதனுக்கு இணையாக அல்லது மனிதனை விட ஆற்றல் கொண்ட உயிரினங்கள் நமது பூமிக்கு வெளியே வாழ்கின்றனவா? என்பது குறித்த தேடலானது மிக நீண்ட மறுபக்கத்தைக் கொண்டது. உலகின் பல நாடுகள் இதுகுறித்த ஆராய்ச்சிக்காகப் பல ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களைக் கொட்டி இறைத்து ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக அமெரிக்கா, சீனா, ஜப்பான், ரஷ்யா போன்ற வல்லரசு நாடுகள் இக்குறிப்பிட விசயத்திற்காக கடும் போட்டியிடுகின்றன.
இதனடிப்படையில் தான் அமெரிக்காவின் ஆய்வு நிறுவனமான UAP (Undefined Aeriel Phinomina) வெளியிட்டுள்ள ஒரு புகைப்படமானது வேற்றுகிரகவாசிகள் பற்றிய ஆய்வு மேற்கொள்வோர் மற்றும் ஆர்வலர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அந்த புகைப்படமானது சுமார் 50 வருடங்களுக்கு முன்னால் எடுக்கப்பட்டிருப்பது தான்.
1971 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் செர்ஜியோ லொய்ஷா என்கிற வான்வழி புகைப்படக் கலைஞர் கோஸ்டாரிகா மாகாணத்தில் அமைந்துள்ள நீர்மின்சார தயாரிப்பு தளத்தைப் புகைப்படம் எடுக்க முயற்சி செய்த போது, தற்செயலாக அவருடைய கேமராவில் வெள்ளி நிறத்திலான கோள வடிவ பொருளொன்று பதிவாகி இருக்கிறது. அதில் சீறிய அளவிலான அசைவு தெரியவே அதனை தன் கேமராவில் தெளிவாகத் தெரியும்படி படம் பிடித்திருக்கிறார் செர்ஜியோ.
கோஸ்டாரிகாவில் வசித்துவரும் எஸ்டஃபன் கரன்ஷா என்பவரிடம் தான் இந்த புகைப்படத்தின் மூல நகல் இருந்திருக்கிறது. அதனை கோஸ்ட்டாரிகாவின் புவியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் பணிபுரிகிற அவருடைய உறவினர் ஒருவரிடம் இருந்து பெற்றிருக்கிறார் எஸ்டஃபன். தன்னிடம் இருக்கிற அந்த புகைப்படம் குறித்து அறிந்துகொள்வதற்காக 1971-ஆம் ஆண்டு காலகட்டத்தில் புகைப்படக் கலைஞர்களாக இருந்தவர்கள் சிலரைச் சந்தித்து உரையாடியிருக்கிறார் எஸ்டஃபன்.
அதன்பிறகு தான் அந்த புகைப்படத்தின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொண்டு, அது தனக்கு மட்டுமே சொந்தமானதில்லை என்று கூறி ட்விட்டரில் பதிவு செய்திருக்கிறார்
மேலும், கருப்பு வெள்ளை நிறத்திலான அந்த புகைப்படத்தை கோஸ்டாரிகன் UFO ஆராய்ச்சியாளர்கள் ரிக்கார்டோ வில்செஸ், டாக்டர் ரிச்சர்ட் ஹைன்ஸ் மற்றும் டாக்டர் ஜாக் வெய்லி போன்ற பல்வேறு நிபுணர்களால் படம் பகுப்பாய்வு செய்யப்பட்டது. ஆய்வுக்குட்படுத்தி, அந்த புகைப்படம் உண்மைதான் என்றும், மார்பிங் போன்ற எந்தவிதமான எடிட் தொழிற்நுட்பங்களுக்கும் உட்படுத்தப்படவில்லை என்றும் உறுதி செய்திருக்கிறார்கள்.
இதுவரையில் ஏலியன் தொடர்பான ஆராய்ச்சிகளில் முக்கியமான மைல்கல்லாக இந்த புகைப்படத்தை UAP அறிவித்திருக்கிறது. அதுமட்டுமல்லாமல் புகைப்படத்தில் காணப்படுகிற பறக்கும் தட்டு போன்ற உருளையானது 120-220 அடி விட்டம் கொண்டதாக இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
ட்விட்டரில் எஸ்டஃபன் பதிவிட்ட நாளிலிருந்து இது இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியிருக்கிறது. சமீபத்தில் அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் கூட ஏலியன்கள் இருப்பை அறிய விண்வெளிக்கு நிர்வாண புகைப்படங்களை அனுப்ப இருப்பதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp