நம் காலத்துக்கு பல்லாண்டு முன்பு வாழ்ந்த டைனோசர்கள் பற்றித் தெரிந்துகொள்வது நமக்கு எப்போதுமே ஆர்வமான ஒன்றாக இருக்கும்.
ஏனெனில் அழிந்து போன அந்த உயிரினத்திடம் மனிதர்கள் கற்கவேண்டிய பாடங்கள் ஏராளம்.
டைனோசர்கள் பற்றிய சமீபத்திய கண்டுப்பிடிப்புகளில் ஒன்று முக்கியமானதாக கருதப்பட்டு வருகிறது.
இந்தியாவின் மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள தார் பகுதி நர்மதா பள்ளத்தாக்கில் அமைந்திருக்கிறது. இந்த பகுதியில் டிடானாசர் என்ற டைனோசரின் 256 முட்டைகள் மற்றும் 92 கூடுகளின் படிமங்களை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
டிடனாசர் ஒரு தாவர உண்ணி வகை டைனோசராகும். இதுவரைக் கண்டறியப்பட்ட டைனோசர்களிலேயே மிகப் பெரியது இதுதான்.
இந்த கண்டுபிடிப்பின் படி, பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நர்மதா பள்ளத்தாக்கானது டைனோசர்கள் குஞ்சு பொரிக்கும் இடமாக இருந்திருக்கும் எனக் கண்டறிந்துள்ளனர்.
இதேபோல மத்தியபிரதேசத்தின் ஜபல்பூர், குஜராத்தின் பலசினோர் உள்ளிட்ட இடங்களிலும் டைனோசர்களின் கூடுகள் கிடைத்திருக்கின்றன.
இப்போது மத்தியபிரதேசத்தின் நடந்து வரும் ஆராய்ச்சியை கொல்கத்தாவில் உள்ள மோகன்பூர், போபால், மற்றும் டெல்லி இந்தியன் அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் உள்ள அகழாய்வாளர்கள் இணைந்து நடத்தி வருகின்றனர்.
ஆராய்ச்சியாளர் திமான், டிடனோசர்கள் நர்மதா பள்ளத்தாக்குக்கு வந்து முட்டைகள் இட்டுச் சென்றிருக்கலாம். நாங்கள் காண்டுபிடித்தவற்றில் சில முட்டைகள் பொரித்தவவை. சில பொரிக்காத முட்டைகள்.
இதுவரை எந்த எலும்பு துண்டுகளும் கிடைக்கப்படவில்லை. மேலும் ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டியது அவசியம்.
அங்கிருந்த ஒவ்வொரு கூட்டிலும் 20 முட்டைகள் இருந்தனவாம். அவை ஒவ்வொன்றும் மிகவும் நெருக்கமாக அரை அடி இடைவெளியிலேயே இருந்துள்ளன.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust