டைனோசர் அழிவு : புதிய சிறுகோள் விழுந்த தடம் கண்டுபிடிப்பு - குழப்பத்தில் விஞ்ஞானிகள்?

கினியா நாட்டிலிருக்கும் இந்த பள்ளத்திற்குக் காரணமான சிறுகோளானது, டைனோசர்களை அழித்த கோள்களுடன் தொடர்புடைய ஒன்றா? இல்லையா?
டைனோசர்
டைனோசர்NewsSense
Published on

மேற்கு ஆபிரிக்காவில் உள்ள கினியா கடற்கரையிலிருந்து சுமார் 400 கிமீ தொலைவில் ஒரு புதிய சிறுகோள் ஒன்று விழுந்த பள்ளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது டைனோசர்கள் இறந்ததற்கும், இந்த சிறுகோள் பள்ளத்திற்கும் தொடர்பு இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

இந்த சிறுகோள் கடலுக்குள் விழுந்த காரணத்தால், கடலுக்கு அடியில் சுமார் 300 மீட்டருக்கும் அதிகமான விட்டம் கொண்ட ஒரு பள்ளத்தை உருவாக்கியது என்று ஜோதிடர்கள் நம்புகின்றனர்.

நிலத்தடியில் உள்ள பாறை மற்றும் வண்டலின் வெவ்வேறு அடுக்குகளை ஆய்வு செய்து எண்ணெய் மற்றும் எரிவாயு இருப்பு குறித்த தகவல்கள் ஆய்வாளர்களால் அடிக்கடி பதிவு செய்யப்படுவது வழக்கம்.

Dinosaur
DinosaurTwitter

அந்த வகையில், ஹெரியட்-வாட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் உயிஸ்டீன் நிக்கல்சன் என்பவர், பூமியில் கடந்த கால காலநிலை மாற்றங்களை நன்கு புரிந்துகொள்வதற்காக நில அதிர்வு ஆய்வுத் தரவை பகுப்பாய்வு செய்யும் போது மறைக்கப்பட்ட இந்த இடத்தைக் கண்டறிந்தார்.

நிக்கல்சன் ஒரு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், "நாதிரின் வடிவம் ஒரு சிறுகோள் தாக்கத்தைக் கண்டறியும். இது ஒரு மையப் பகுதியைச் சுற்றி உயர்ந்த ஒரு விளிம்பைப் பெற்றுள்ளது, பின்னர் வெளிப்புறமாக விரியும் குப்பைகளின் அடுக்குகளைக் கொண்டுள்ளது” என்று தெரிவித்தார்.

Dinosaur
DinosaurTwitter

66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு மெக்சிகோ வளைகுடாவில் ஒரு சிறுகோள் மோதியபோது, அதன் பாதிப்பில் டைனோசர்கள் இனமே மொத்தமாக அழிந்து போனது. மேலும் இந்த குறிப்பிட்ட ஆய்வு, அந்த பயங்கரமான நாளில் ஒன்றுக்கு மேற்பட்ட விண்வெளி பாறைகளால் பூமி மீது குண்டு வீசப்பட்டிருக்கலாமோ? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

மெக்சிகோ வளைகுடாவில் தூசி நிறைந்த பொருட்களுடன் வானில் எறிந்து, பள்ளத்தை உருவாக்கிய சிறுகோள் சுமார், 12 கிமீ பரப்பிலிருந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது.

டைனோசர்
உணவகத்திற்கு சென்றவருக்கு கிடைத்த அதிசய பொருள் - டைனோசர் கால்தடமா? ஆராய்ச்சி சொல்வதென்ன?

அரிசோனா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் வெரோனிகா ப்ரே என்பவர் இதுகுறித்து கூறுகையில், "எங்கள் ஆராய்ச்சியின் முடிவில் 500-800 மீ பரப்பளவு தண்ணீரில் 400 மீ அகலமுள்ள சிறுகோள் மோதியதால் ஏற்பட்டதாகக் கூறுகின்றன."

இந்த பள்ளத்திற்குக் காரணமான சிறுகோளானது, டைனோசர்களை அழித்த கோள்களுடன் தொடர்புடைய ஒன்றா? இல்லையா? என்பது குறித்து மேற்கு ஆபிரிக்காவில் உள்ள ஆய்வகம் ஒன்றில் சோதனைகள் நடந்து வருவதாக, பேராசிரியர் சீன் குலிக் தெரிவித்துள்ளார்.

டைனோசர்
சீனாவில் 4300 ஆண்டுகளுக்கு முந்தைய டைனோசர் கால்தடங்கள் - அதிர வைக்கும் தகவல்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com