அரியவகை மீன்
அரியவகை மீன்Instagram

இணையத்தில் வைரலாகும் பேபி டிராகன்; நெட்டிசன்களின் கற்பனையும், உண்மையும்

புகைப்படத்தைப் பார்த்த நெட்டிசன்கள் மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளனர். பலர் இது புதிதாகப் பிறந்த டிராகனாக இருக்கும் எனக் கருத்து தெரிவித்தனர். அவரது புகைப்படம் 22000க்கு மேற்பட்ட லைக்களும் பல கமெண்களும் பெற்றது.
Published on

ரஷ்யாவைச் சேர்ந்த மீனவர் அரிய வகை உயிரினம் ஒன்றைக் கண்டறிந்துள்ளார். கடலின் ஆழத்துக்குச் சென்ற அவர் குதிரையின் முகமும், நீளமான காதுகளும் பெரிய கண்களும் கொண்ட உயிரினத்தைக்கண்டறிந்தார். சீன திருவிழாக்களில் காணப்படும் டிராகன் போன்று இருந்தது அந்த மீன். அதனை எடுத்து வந்த அவர் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட அந்த புகைப்படம் வைரலானது.


புகைப்படத்தைப் பார்த்த நெட்டிசன்கள் மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளனர். பலர் இது புதிதாகப் பிறந்த டிராகனாக இருக்கும் எனக் கருத்து தெரிவித்தனர். அவரது புகைப்படம் 22000க்கு மேற்பட்ட லைக்களும் பல கமெண்களும் பெற்றது.

இது ஒரு பேபி டிராகன் போன்ற கமெண்ட்களுக்கு “இது என்ன வகை மீன் எனத் தெரியவில்லை” எனப் பதிலளித்திருந்தார் ரஷ்ய மீனவர்.

அரியவகை மீன்
“இனி மனிதர்களே தேவையில்லை, வருகிறது ரோபோ டாக்சி” - எலன் மஸ்க் அறிவிப்பு

இந்த புகைப்படம் வைரலாக, இது என்ன மீன் எனத் தெரியவந்துள்ளது. கடலின் ஆழத்தில் மிக அரிதாகக் காணப்படும் இந்த மீன் சுறா வகையைச் சேர்ந்தது. இதனை “பேய் சுறா (ghost shark)” என்கிறார்கள் ஆய்வாளர்கள். இதனை சிமோரா என்றும் அழைக்கின்றனர்.

ஆழ்கடலில் நாம் இதுவரை கண்டறியாத பல உயிரினங்கள் வசிக்கின்றன என்பது உண்மையே. ஆனால் விசித்திரமாக காணப்படும் அனைத்தையும் டிராகன், டைனோசோர், கற்பனை அல்லது இதிகாசத்தில் வரும் உயிரினங்கள் என்று கிளப்பிவிடுவதை நெட்டிசன்கள் தார்மீக கடமையாகக் கொண்டு செயல்படுகின்றனர்.

அரியவகை மீன்
50 வார்த்தைகள் வரை 'பேசும் காளான்கள்' - வியக்க வைக்கும் ஆய்வு
logo
Newssense
newssense.vikatan.com