சுறாக்கள் நாம் வாழ்கிற இந்த பூமியில் குறைந்தது 450 மில்லியன் ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்றன. சுமார் 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு கிரெட்டேசியஸின் காலத்தில், நானோவியன் டைனோசர்களை அழித்த பேரழிவு உட்பட "மிகப்பெரிய ஐந்து" அழிவுகளிலிருந்து சுறாக்கள் தப்பிப் பிழைத்திருக்கின்றன.
சூழலைப் பொறுத்தவரை, சுறாக்கள், சுமார் 240 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய டைனோசர்களை விட மூத்த உயிரினமாகக் கருதப்படுகிறது. மரங்கள் கூட 390 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தான் பூமியில் உருவாகியிருக்கிறது என்பதே இதில் ஆச்சரியம்.
வெப்பநிலை அதிகரிக்கும் போது அளவு சுருங்குவது போன்ற சுற்றுச்சூழல் நிலைமைகளுக்குப் பதிலளிக்கும் வகையில் சுறாக்கள் அவற்றின் உடலியலை மாற்றியமைக்கும் திறன் கொண்டவை. இந்த திறன் தான், வேகமாக மாறிவரும் சூழலியல் மாற்றங்களுக்கு விரைவாக சுறாக்கள் தங்களைத் தகவமைத்துக் கொள்ள உதவுகிறது.
இவை, ஸ்கேட்கள், ரேய்ஸ் மற்றும் கைமேரா ஆகியவற்றின் நெருங்கிய உறவினர்கள் ஆகும். இவை அனைத்தும் காண்டிரிக்திஸ் எனப்படும் மீன்களின் குழுவைச் சேர்ந்தவை, அவற்றின் எலும்புக்கூட்டின் பெரும்பகுதி எலும்பை விடக் குருத்தெலும்புகளால் ஆனது. ஸ்கேட்களில் மரபணு வெளிப்பாடு ஆய்வுகள் செய்யப்பட்டபோது, அவை வசிக்கும் நீர் வெப்பநிலையில் பல டிகிரி மாறும்போது, உடலைத் தகவமைக்கும் திறன் குறித்துக் கண்டறியப்பட்டது.
எடுத்துக்காட்டாக, கனடாவில் உள்ள செயின்ட் லாரன்ஸ் வளைகுடாவின் தெற்குப் பகுதியில் வசிக்கும் ”விண்டர் ஸ்கேட்” (லுகோராஜா ஓசெல்லட்டா) மீன்கள், 18 டிகிரி பாரன்ஹீட் (10 டிகிரி செல்சியஸ்) அதிகரிக்கும் நீரின் வெப்பநிலையை சமாளிக்க தங்களுடைய உடலை "வியத்தகு முறையில் மாற்றியமைத்தன". இவ்வாறாகக் கடந்த 7000 ஆண்டுகளில் 45% தங்களுடைய உடலை அவை மாற்றியிருப்பதாக, ராயல் சொசைட்டி ஓபன் சயின்ஸ் இதழின் 2016 ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
பரிணாம அடிப்படையில், 7,000 ஆண்டுகள் என்பது ஒரு குறுகிய கால அளவாகும். இது விஞ்ஞானிகளை, விண்ட்டர் ஸ்கேட்-களின் அளவு விரைவாக மாறுவதற்கு எபிஜெனெடிக் எதிர்வினை என்று நினைக்க வழிவகுத்தது. இதில் மரபணு வெளிப்பாடு சுற்றுச்சூழல் காரணிகளால் மாற்றப்படுகிறது. மாறாக இயற்கையான தேர்வு படிப்படியாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறது.
கடல் உயிரியல் பேராசிரியரும், கலிபோர்னியா ஸ்டேட் யுனிவர்சிட்டி லாங் பீச்சில் உள்ள சுறா ஆய்வகத்தின் இயக்குநருமான கிறிஸ்டோபர் லோவ் என்பவர், “சில சுறாக்கள் மிகப் பெரிய மரபணுக்களைக் கொண்டிருப்பதில் தனித்தன்மை வாய்ந்தவை.
ஒருவேளை அந்த மரபணுக்கள் தேவை, இப்போது பயனற்றதாக இருக்கலாம். ஆனால், கடந்த கால தட்பவெப்ப நிலைகளைப் பொறுத்துக்கொள்ள அவர்களுக்கு உதவியது அந்த மமரபணுக்கள் பெரிதும் உதவியிருக்கின்றன” என்று தெரிவித்தார்.
மேலும், “சுறாக்களை உள்ளடக்கிய குருத்தெலும்பு மீன் குழுவின் துணைப்பிரிவான எலாஸ்மோப்ராஞ்சியின் பல இனங்கள் நன்னீர் மற்றும் உப்பு நீர் சூழல்களுக்கு இடையில் வாழ்க் கூடியவை. இது ஒரு பெரிய உடலியல் சவால். Carcharhinus leucas என்பது மிகவும் பிரபலமான சுறாக்களில் ஒன்றாகும். இது புதிய மற்றும் உப்பு நீர் வாழும் திறன் கொண்டது. உலக வெப்பநிலை மாறும்போதோ அல்லது பனிக்கட்டிகள் உருகுவதால் பெருங்கடல்களுக்குள் அதிக அளவு புதிய நீர் நுழையும்போதோ, இந்த திறன் சுறா இனங்களுக்கு உதவக்கூடும்” என்றார்.
எனவே தான், ஒட்டுமொத்த கடல் சுற்றுச்சூழல் அமைப்பில் சுறாக்களின் பங்கைக் குறைத்து மதிப்பிட முடியாது. பல சுறாக்கள், வேட்டையாடுபவர்களாக இருப்பதால், உணவுச் சங்கிலியில் குறைவாக உள்ள உயிரினங்களின் நிலைத்தன்மையைக் கட்டுப்படுத்துவதில் அவை முக்கியப் பங்கு வகிக்கின்றன. வேட்டையாடும் மீன்கள், பிளாங்க்டனை விட மிகக் குறைவான எண்ணிக்கையில் உள்ளன. ஆனால் அவை அதிக அளவு அழிவை ஏற்படுத்துகின்றன. எனவே, சுறாக்கள், வேட்டையாடும் மீன்களை உண்கின்றன.”
"கடந்த காலங்களில் காலநிலை மாற்றங்களைச் சுறாக்கள் நன்றாக சமாளித்து நிலைத்து நின்றன. ஆனால் இன்று உலகின் சுறாக்கள் மற்றும் ரேய்ஸ்களுக்கு மிகப்பெரிய சவாலாக இருப்பது அதிகப்படியான மீன்பிடித்தல்" என்று நெய்லர் கூறினார். காரணம், "இந்த விலங்குகளிடத்தில், தண்ணீரிலிருந்து மீன் பிடிக்கப்படுவதை எதிர்த்துப் போராடுவதற்கு எந்த புத்திசாலித்தனமான தந்திரங்களும் இல்லை." என்று அவர் கூறினார்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust