தேனீக்களில் இருந்து மின்சாரம் தயாரிக்க முடியுமா? ஆய்வுகள் சொல்வது என்ன?

பிரிட்டனைச் சேர்ந்த பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தில், சுற்றுச்சூழலில் உள்ள நிலையான மின்சாரப் புலங்களை இந்த பூமியில் வாழும் பல உயிரினங்கள் எப்படிப் பயன்படுத்துகின்றன என ஓர் ஆய்வை மேற்கொண்டனர்.
honey bee
honey bee Twitter
Published on

மனிதர்கள் பயன்படுத்தும் தேன், தேனீக்களால் சேமிக்கப்படும் கூடுகளில் இருந்து எடுக்கப்படுகிறது என்பதை நாம் அறிவோம். ஆனால் தேனீக்கள் கூட்டமாகப் பறந்தால் அது மின்சாரத்தை உண்டாக்கும், அப்படி உண்டாகும் மின்சாரத்தின் அளவு ஒரு இடி மின்னல் அளவுக்கு சக்தி வாய்ந்ததாகக் கூட இருக்கலாம் என்பதை அறிவீர்களா..? தேனீக்கள் கூட்டமாகப் பறக்கும் போது மின்சாரம் எப்படி உண்டாகிறது? வாருங்கள் பார்ப்போம்.

பிரிட்டனைச் சேர்ந்த பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தில், சுற்றுச்சூழலில் உள்ள நிலையான மின்சாரப் புலங்களை இந்த பூமியில் வாழும் பல உயிரினங்கள் எப்படிப் பயன்படுத்துகின்றன என ஓர் ஆய்வை மேற்கொண்டனர்.

ஒரு மலரில் கூட மின்சாரப் புலங்கள் இருக்கும். அதை தேனிக்களால் உணர முடியும். ஒரு மலரில் ஒரு தேனீ அமர்ந்து தேனை உறிஞ்சிக் கொண்டது என்றால் அந்த மலரின் மின்சாரப் புலம் மாறிவிடும். அதை வைத்து தேனீக்கள் மலர்களில் தேன் இருக்கிறதா இல்லையா? ஏற்கனவே ஏதாவது தேனீ அம்மலரில் இருந்த தேனை உறிஞ்சிக் கொண்டதா? என்பதை உணர்ந்து கொள்ளும் என ஆய்வுக் குழுவைச் சேர்ந்த உயிரியலாளர் எல்லார்ட் ஹன்டிங் (Ellard Hunting) சி என் என் ஊடகத்திடம் கூறியுள்ளார்.

ஸ்வார்மிங் என்றால் என்ன?

பூச்சிகள் கூட்டமாகப் பறக்கும் நிகழ்வை ஸ்வார்மிங் (Swarming) என ஆங்கிலத்தில் அழைக்கிறார்கள். ஆனால் தேனீக்கள் தன் கூட்டை விட்டு வெளியேறும் போது அல்லது புதிய தேன் கூட்டை அமைக்கும் போது நெருக்கமாகப் பறப்பதை honeybee swarm என்கிறார்கள். இப்படி தேனீக்கள் மிக நெருக்கமாகப் பறக்கும் போது மின்சாரம் உண்டாகிறது. இது குறித்து ஐ சயின்ஸ் என்கிற அறிவியல் சஞ்சிகையில் (Magazine) கட்டுரை வெளியாகியுள்ளது.

பருவநிலையில் பெரிய மாற்றம் ஏற்படும் போது (குளிரில் இருந்து மழை காலத்துக்கோ, கோடையிலிருந்து பனிக்காலத்துக்கு மாறுவதை உதாரணமாகக் கூறலாம்) தேனீக்கள் இப்படி புதிய கூட்டை உருவாக்குகின்றன என்கிறது இந்தியா டைம்ஸ் கட்டுரை ஒன்று.

honey bee
Applet : 17 ஆம் நூற்றாண்டில் காணாமல் போன போர்க்கப்பல் கண்டுபிடிப்பு!

தன்னிச்சையாகக் கண்டுபிடிக்கப்பட்டது:

பிரிஸ்டல் பல்கலைக்கழகத்துக்கு அருகே வானிலை குறித்து ஆய்வு செய்து கொண்டிருந்த போது, மின் புலங்களையும் ஓர் அளவையாக வைத்திருந்தார்கள்.

அப்போது எந்தவித புயலுக்கான சமிக்ஞைகள் இல்லாத போதும், வளிமண்டலத்தில் உள்ள மின் புலங்களில் பெரிய மாற்றம் ஏற்பட்டது. அப்போது அருகில் அபில் மெல்லிஃபெரா (Apis mellifera) என்கிற தேனீ இனம் கூட்டமாகப் பறப்பதை கவனித்திருக்கிறார்கள்.

பொதுவாக தேனீக்கள் பறக்கும் போது, மின்சாரம் உண்டாகும், ஆனால் அதை எவரும் அளவிட்டது இல்லை. அப்படியே அளவிட்டு இருந்தாலும், இத்தனை அதிக அளவுக்கு மின்சாரம் உருவானதாக எவரும் குறிப்பிடவில்லை என்கிறார் உயிரியலாளர் ஹன்டிங்.

எப்படி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது?

தேனீக்களின் கூடுகள் இருக்கும் இடங்களுக்கு அருகில் மின்சாரப் புலங்களை அளவிடும் கருவிகள், காணொளி கேமராக்கள் என எல்லாம் பொருத்தப்பட்டன. அக்கருவிகளுக்கு அருகிலேயே சுமார் 3 தேனீ கூட்டங்கள் கிட்டத்தட்ட 3 நிமிடங்களுக்கு பறந்தது பதிவு செய்யப்பட்டது.

இதில் ஒரு மீட்டருக்கு 100 வோல்ட் முதல் 1000 வோல்ட் வரை மின்சாரம் உருவானதை மின்சாரப் புலங்கள் அளவிடும் கருவிகளில் பதிவாயின. அதோடு, தேனீக்கள் ஸ்வார்மிங் செய்யும் போது எத்தனை நெருக்கமாக இருக்கின்றனவோ, அந்த அளவுக்கு அதிகமாக மின்சாரம் உண்டாவதையும் அக்குழு கண்டுபிடித்தது.

இனி தேனீக்கள் கூட்டமாகப் பறக்கும் போது இந்த செய்தி உங்கள் நினைவுக்கு வரும்தானே!

honey bee
"இந்த சத்தம் டென்ஷன், Stress-ஐ குறைக்கும்" - ஆய்வு செல்லும் ஆஹா தகவல்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com