நியூசிலாந்து: அழிந்துவிட்டதாக நினைத்த Takahe பறவைகளை மீண்டும் வந்தது எப்படி?

1.8 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய காலக்கட்டத்தில் இந்த பறவைகள் வாழ்ந்ததற்கான புதைப்படிம ஆதாரங்கள் இருக்கின்றன. கடந்த 1898ம் ஆண்டு இந்த பறவைகள் முற்றிலுமாக அழிந்துவிட்டதாக கருதப்பட்டது.
நியூசிலாந்து: அழிந்துவிட்டதாக நினைத்த Takahe பறவைகளை மீண்டும் வந்தது எப்படி?
நியூசிலாந்து: அழிந்துவிட்டதாக நினைத்த Takahe பறவைகளை மீண்டும் வந்தது எப்படி?Takahe / Canva
Published on

பறக்க முடியாத அளவில் பெரியதாக இருக்கும் பறவை டகாஹே. இது பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இருந்தே இந்த பறவைகள் வாழ்ந்து வருகின்றன.

சில தசாப்தங்களுக்கு முன்பு முற்றிலுமாக மறைந்துவிட்டதாக கருதப்பட்ட இந்த பறவையினர் மீண்டு நியூசிலாந்தின் காடுகளுக்குத் திரும்பியுள்ளது.

இது உயிரியலாளர்கள் மத்தியில் பெரும் சாதனையாகப் பார்க்கப்படுகிறது. இவை மீண்டும் தங்களது பூர்வீக நிலமான நியூசிலாந்து தெற்கு தீவில் உள்ள அல்பைன் பள்ளத்தாக்குகளுக்கு திரும்பியுள்ளன. இங்குள்ள வகாதிப்பு ஏரிக்கு இந்த பறவைகள் கொண்டுவரப்பட்டுள்ளன.

டகாஹே பறவைகள் 50 செ.மீவரை உயரமானதாக இருக்கும். நியூசிலாந்தில் சுற்றுசூழலில் இவை இன்றியமையாத இடத்தைப் பெற்றுள்ளன.

பிலிசிடோன்சினே காலம் எனப்படும் 1.8 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய காலக்கட்டத்தில் இந்த பறவைகள் வாழ்ந்ததற்கான புதைப்படிம ஆதாரங்கள் இருக்கின்றன.

கடந்த 1898ம் ஆண்டு இந்த பறவைகள் முற்றிலுமாக அழிந்துவிட்டதாக கருதப்பட்டது. நியூசிலாந்தில் ஆங்கிலேயர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட எலிகள், பூனைகள் மற்றும் மரநாய் போன்ற வேட்டை உயிரினங்களால் நியூசிலாந்தின் சொத்துகளாக இருந்த இதுபோன்ற அதிசயப் பறவைகள் அழிவை சந்தித்தன.

அதிர்ஷ்டவசமாக 1948ம் ஆண்டு இந்தப் பறவைகள் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டன. அது முதல் மிகவும் பாதுகாப்பாக இவற்றைக் கண்காணித்து வருகின்றனர். ஆண்டுக்கு 8 விழுக்காடு வீதம் இவற்றின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

நியூசிலாந்து: அழிந்துவிட்டதாக நினைத்த Takahe பறவைகளை மீண்டும் வந்தது எப்படி?
Ostrich Tribe: பறவை கால்களுடைய அதிசய மனிதர்கள் - இந்த ஜிம்பாப்வே பழங்குடியினரின் கதை என்ன?

டகாஹே பறவைகளைக் காக்க பல ஆக்கப்பூர்வமான யுத்திகளை மேற்கொண்டனர். முட்டைகளை பிற விலங்களிடம் இருந்து காப்பதற்காக தனியாக எடுத்துவந்து இன்குபேட்டரில் வைத்து பொறிக்க வைத்தனர்.

டகாஹே பறவைகளின் கால்களைப் போல சிகப்பு நிற சாக்ஸ்களை அணிந்துகொண்டு குட்டிகளை வளர்த்தனர். படிப்படியாக சரணாலயங்கள், தேசிய பூங்காக்களுக்கு அவற்றை மீண்டும் அறிமுகப்படுத்தினர்.

நியூசிலாந்து: அழிந்துவிட்டதாக நினைத்த Takahe பறவைகளை மீண்டும் வந்தது எப்படி?
கிவி : கோழி அளவுள்ள பறவைகள் ஈ.மு அளவு முட்டையிடுமா? பறக்காத பறவை குறித்த சுவாரஸ்ய தகவல்கள்

மறுபக்கம் எலிகள், மரநாய், போன்ற வேட்டை விலங்குகளை அழிப்பதிலும் நியூசிலாந்து அரசு தீவிரம் காட்டி வருகிறது. 2050ல் வேட்டை உயிரினங்கள் இல்லாத நியூசிலாந்தை உருவாக்குவதை இலக்காக கொண்டுள்ளனர்.

இதன் மூலம் டகாஹே, கிவி போன்ற நியூசிலாந்தின் அறிய உயிரினங்களைப் பாதுகாக்க விரும்புகின்றனர்.

நியூசிலாந்து: அழிந்துவிட்டதாக நினைத்த Takahe பறவைகளை மீண்டும் வந்தது எப்படி?
நியூசிலாந்து: எலிகளுக்கு எதிராக போரைத் தொடங்கிய நாடு - நெகிழ வைக்கும் காரணம்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com