இந்த வாழ்க்கை நிரந்தரமானதென்று யாருக்குமே இல்லை. காரணம், நாம் எப்பொழுதும் அபாயகரமான ஏதோ ஒரு புள்ளியைக் கடந்துதான் போய்க்கொண்டிருக்கிறோம். அதனை உணர்ந்து தான், நம்மைப் பாதுகாத்துக் கொள்ள, உடல்நலக் காப்பீட்டைச் செய்கிறோம்.
நமக்குப் பிறகு நம் குடும்பத்தினரைப் பாதுகாக்க, ஆயுள் காப்பீடு செய்கிறோம். ஆனால் உலக அளவில் ஏற்படும் பெரும் பேரழிவுகள் மற்றும் உலகத்தையோ, மனிதக் குலத்தையோ அழிக்கக்கூடிய ஆபத்துகள் பற்றி நம் கருத்து என்ன? அப்படியான பேரழிவுகளில் இருந்து நம்மையும் நம் அன்புக்குரியவர்களையும் பாதுகாக்க நம்மால் ஏதாவது செய்ய முடியுமா?
சிலர் மனித அறிவே பெரிய சக்தி என்கிறார்கள். அந்த தர்க்கம் உண்மையென்றால், உலகத்தின் முடிவு எப்படி இருக்கும் என்பதை முன்கூட்டியே அறிவதும், மனித இனத்திற்குத் தேவையான முக்கியமானவற்றைப் பாதுகாப்பதிலும் அந்த அறிவு நமக்கு உதவ வேண்டுமல்லவா?
உலகளாவிய பேரழிவின் ஆபத்துகள் பற்றிய வருடாந்திர மதிப்பீட்டைத் தயாரிக்கும் குளோபல் சேலஞ்சஸ் அறக்கட்டளை, "உலகின் முடிவு" நடக்கப் பல வழிகள் உள்ளன என்று கூறுகிறது. அந்த அறக்கட்டளையின் கூற்றுப்படி, நம் பூமி சந்திக்கக் காத்திருக்கும் எட்டு மிகப்பெரிய பேரழிவுகளைப் பற்றித் தெரிந்து கொள்வோம்.
மனிதனால் உருவாக்கப்பட்ட ஆயுதங்களால் தான், மனிதக்குலத்தின் பெரும் பகுதி அழிவும், பூமியின் பேரழிவும் ஏற்படும் என்று கூறப்பட்டுள்ளது. அணு ஆயுதங்கள் பற்றிச் சொல்லித் தெரிய வேண்டும் என்பதல்ல. 1945-ல் ஹிரோஷிமா மற்றும் நாகசாகியில் வீசப்பட்ட அணுக்குண்டுகளால் 129,000 முதல் 226,000 பேர் வரை கொல்லப்பட்டனர். இன்று அந்த அச்சுறுத்தல் பன்மடங்கு அதிகரித்துள்ளதை நாம் அனைவரும் நினைத்துப் பார்க்க வேண்டும்.
எந்தவிதமான புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் இல்லாமல் கூட, அணு ஆயுதங்கள் கிடைக்கின்ற காலகட்டத்தில் இருக்கிறோம். மேலும் சமீபத்தில் உக்ரைன்-ரஷ்ய போர் நிரூபித்தது போல, அணுகுண்டு அச்சுறுத்தல் மிகவும் என்பது மிகவும் சாதாரணமாக உள்ளது.
உயிரியல் மற்றும் இரசாயன போர் எனும் அதிநவீன கண்டுபிடிப்புகள் மற்றுமோர் அச்சுறுத்தல் ஆகும். வேண்டுமென்றே புதிதாக உருவாக்கப்பட்ட மரபணு மாற்றப்பட்ட நோய்களால் முன் அறிமுகமில்லாத ஒரு தொற்றுநோயைக் கொண்டு வரலாம். கொரோனா வைரஸ் தொற்றுநோய் அத்தகைய ஒரு நிகழ்வு என்றும் சிலர் குற்றம் சாட்டுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
காலநிலை மாற்றம் இப்போது உலகளவில் பெரிதும் கவலைக்குரிய பிரச்சினையாக இருந்தாலும், பெரும்பாலோர் இன்னும் பேரழிவைத் தூண்டும் அளவுக்கு ஆபத்தானதாக அதனைக் கருதவில்லை. இருப்பினும், இது மனிதகுலம் எதிர்கொள்ளும் மிக அடிப்படையான ஆபத்துகளில் ஒன்றாக இருக்கிறது. சமீபத்திய ஆய்வுகளின்படி, இயற்கையான காரணங்களை விட மனித செயல்பாடு பூமியின் காலநிலையை 170 மடங்கு விரைவாக மாற்றுகிறது.
உலகளாவிய சராசரி வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸுக்கு மேல் அதிகரிப்பது பேரழிவு தரும் காலநிலை மாற்றத்துடன் பொருத்திப் பார்க்கப்பட்டுள்ளது.
குளோபல் சேலஞ்சஸ் அறக்கட்டளையின் கூற்றுப்படி, புவி வெப்பமடைதலின் இந்த நிலை உலகளாவிய காலநிலை முறைகளில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தக் கூடும். வரலாற்றில் முன் எப்போதுமில்லாத நிலப்பரப்பு இழப்பு காரணமாக, மக்கள் அதிக அளவில் இடம்பெயர்வதற்கு வழிவகுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல் காரணிகள் தான் மனித வாழ்வின் அடித்தளம். மனித பொருளாதாரம் மற்றும் மனிதனால் செய்ய முடியாத பல்வேறு பணிகளை அவை மேற்கொள்கின்றன. அவை நமக்குத் தேவையான காற்று, நீர், உணவு, தங்குமிடம் போன்ற அத்தியாவசியமான ஆற்றல்களை வழங்குகின்றன.
இந்த சுற்றுச்சூழல் காரணிகள் மனித பயன்பாட்டின் ஆதிக்கத்தைத் தாங்கிக் கொண்டு ஒரு குறிப்பிட்ட காலத்திற்குத் தீங்கு விளைவிப்பதில்லை. ஆனால் ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு அப்பால், அவற்றின் அமைதியில் கடுமையான இடையூறு ஏற்படுகிறது. இதன் விளைவாகவே மிகப்பெரிய "சுற்றுச்சூழல் ஆபத்துகள்" ஏற்படுகின்றன. வருங்காலங்களில் அவை இன்னும் பெரிய அழிவுகளை ஏற்படுத்தும் அளவிற்கு மனிதனின் ஆதிக்கம் அதிகரிக்கிறதே தவிரக் குறைந்த பாடில்லை.
மிக சமீபத்தில் கூட COVID-19, தொற்றுநோய்களைப் பற்றி உலகிற்கு நிறைய கற்றுக் கொடுத்துள்ளது. கோவிட்-19 போன்ற உலகம் முழுவதும் பரவி வரும் மிகவும் கொடிய நோய்களான பேரழிவு தொற்றுநோய்கள் நம்பமுடியாத அளவிற்கு சீர்குலைக்கும் சக்தி கொண்டவையாகவே இருந்திருக்கின்றன. கடந்த காலத்தில் இதுபோன்ற உலகளாவிய தொற்றுநோய்கள் அரிதாகவே இருந்தன.
எவ்வாறாயினும், மனிதர்களுக்கு மற்றொரு புதிய தொற்று நோயின் வருகை, பெரிய அழிவை ஏற்படுத்தக்கூடிய தொற்றுநோய்கள் எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்கிற அச்சத்தைக் கொடுத்துள்ளது. இது அதிக மக்கள்தொகை கொண்ட, நகரமயமாக்கப்பட்ட மற்றும் ஒன்றோடொன்று இணைந்த சமூகத்தில் விரைவான பரவல் மற்றும் அதிக இறப்பை ஏற்படுத்தக்கூடும் என்கிற அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
செயற்கை நுண்ணறிவு மனிதர்களை விடப் புத்திசாலித்தனமானது என்பது பொதுவான கருத்தாகும். இது மனிதக்குலத்தை புதிய உயரத்திற்குக் கொண்டு செல்லும் ஆற்றலைக் கொண்டுள்ளது. ஆனால் அதில் மிகப்பெரிய ஆபத்தும் ஒளிந்திருப்பதாக நிபுணர்கள் கவலைப்படுகிறார்கள். அந்த ஆபத்து வேறொன்றுமில்லை, மனித இனத்தின் அழிவு தான்.
அவை பிரத்யேகமாக பயிற்றுவிக்கப்பட்ட பணிகளில், நவீன செயற்கை நுண்ணறிவு கருவிகள் ஏற்கனவே மனிதர்களை மீறிய ஆற்றலைக் கொண்டிருக்கின்றன. குறிப்பாகச் சொன்னால் அவற்றின் வேகத்திற்கு முன்னால் மனிதன் ஒன்றுமே இல்லை எனுமளவிற்கு.
ஒரு AI திடீரென மிருகத்தனமாக தீங்கு செய்யத் தொடங்கும் அல்லது சீரற்ற முறையில் கொலை செய்யத் தொடங்கும் என்று நிபுணர்கள் கவலைப்படவில்லை. அதே நேரத்தில், ஒரு AI திட்டம் வேண்டுமென்றே தீங்கிழைக்கும் வகையில் பயன்படுத்தப்படும் அல்லது மோசமாக வரையறுக்கப்பட்ட ஒரு பணியை நிறைவேற்றுவதில் அதிக திறன் கொண்டதாக இருக்கும் என்று நிபுணர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
ஒரு சூப்பர்-எரிமலை வெடிப்பு என்பது குறைந்தபட்சம் 400 கிமீ தூரத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தவல்லது. அது 3 மொத்தப் பொருட்களின் வெடிப்பால் வகைப்படுத்தப்படுகிறது. இத்தகைய பெரிய அளவிலான வெடிப்புகள் எதிர்காலத்தில் எந்த நேரத்திலும் நிகழலாம் என்றும் பேரழிவு விளைவுகளை ஏற்படுத்தலாம் என்றும் விஞ்ஞானிகள் எச்சரிக்கிறார்கள்.
ஏறக்குறைய 74,000 ஆண்டுகளுக்கு முன்பு, இந்தோனேசியாவில் உள்ள டோபா சூப்பர் எரிமலை வெடித்து, பல பில்லியன் டன் தூசி மற்றும் சல்பர் டை ஆக்சைடை வளிமண்டலத்தில் பரவியது. மனித வரலாற்றில் மிகப்பெரிய வெகுஜன அழிவை ஏற்படுத்தியதன் மூலம் டோபா நமது இனத்தை அழிவின் விளிம்பிற்குக் கொண்டு வந்ததாக விஞ்ஞானிகள் சிலர் கூறுகின்றனர்.
அமெரிக்காவில் உள்ள எல்லோஸ்டோன் உள்ளிட்ட பல இடங்களை விஞ்ஞானிகள் கண்காணித்து வருகின்றனர். காரணம், இவை எதிர்கால சூப்பர் எரிமலை வெடிப்பின் வருங்கால தளங்களாகக் கருதப்படுகின்றன.
டைனோசர்களின் கொடூரமான அழிவை நாம் எப்படி மறக்க முடியும்? அப்படியான அழிவு நமக்கும் நிகழலாம் என்கிற உண்மையை நம்மால் முற்றிலுமாக புறக்கணிக்க முடியுமா?
பூமிக்கு அருகில் உள்ள மிகப்பெரிய சிறுகோள்கள் (சுமார் 1கிமீ விட்டம் கொண்டவை) உலகளாவிய புவியியல் மற்றும் தட்பவெப்ப நிலைகளை சீர்குலைக்கும் சக்தி கொண்டவையாக இருக்கக் கூடும். அவை எதிர்பாராத விதமாகப் பூமியின் உயிரினங்களை அழித்துவிடும் திறன் கொண்டவையாக இருக்கலாம்.
இந்த சிறுகோள்களின் திடீர் தாக்குதலில் இருந்து பூமியைப் பாதுகாப்பதற்காகப் பல அரசு மற்றும் தனியார் ஏஜென்சிகள் அபாயங்களைக் கண்டறிந்து அவற்றைச் சமாளிப்பதற்கான உத்தியை உருவாக்குவதில் அயராது உழைத்து வருகின்றன. இருப்பினும், உண்மை என்னவெனில் சிறுகோள்களின் மூலம் பேரழிவு ஏற்படக் கூடிய ஆபத்து மிகப்பெரியதாகவே உள்ளது.
எதிர்காலம் நிச்சயமற்றது. பேரழிவாக மாறக்கூடிய நிறைய ஆபத்துகளுடன் அது காத்திருப்பதாக அந்த அமைப்பு கூறுகிறது. எடுத்துக்காட்டுகளாக மிகவும் சமீபத்தில் வளர்ந்து வரும் நானோ-தொழில்நுட்பத்தின் காரணமாக மிகப்பெரிய கருந்துளைகள் நமது கிரகத்திற்கு அருகில் ஒன்று உருவாகும் சாத்தியம் உள்ளதாகக் குறிப்பிடுகிறார்கள்.
மேற்கண்ட கூற்றைச் சாதாரணமாகக் கொண்டால் 1900 ஆம் ஆண்டில், முதல் அணுகுண்டு வெடிப்பதற்கு நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு, அணுசக்தி உலகளாவிய பேரழிவின் முதன்மையான காரணங்களில் ஒன்றாக இருக்கும் என்று மிகச் சிலரே முன்னறிவித்திருக்க முடியுமல்லவா? அதேபோல, கோவிட் பெருந்தொற்றையும் நாம் கூறலாம். ஒரு வைரஸ் மில்லியன் கணக்கானவர்களைக் கொல்லும், ஒரு வருடத்திற்கும் மேலாக நம் அனைவரையும் நம் வீடுகளில் அடைத்து வைக்கும் என்று யாராவது கணித்திருக்க முடியுமா?
இப்படி நம் கற்பனைக்கும் எட்டாத பல்வேறு ஆபத்துகள் எதிர்காலத்தின் படிப்புகளில் புதைந்திருக்கக் கூடும். ஆனால் அவை குறியீட்டு எங்களால் கூற முடியாதென்று சேலஞ்சர்ஸ் அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust