Sex Strike : உள்நாட்டு போர்களை நிறுத்திய பெண்களின் செக்ஸ் நிறுத்தம் - ஓர் ஆச்சர்ய வரலாறு!

ஆப்ரிக்க நாடுகளில் உள்நாட்டு கலவரங்களால் வன்முறைகள் அதிகரித்து உயிர்கள் பலியாக்கப்பட்டு அமைதி குலைந்த போது பெண்கள் எடுத்த ஆயுதம் தான் இந்த செக்ஸ் நிறுத்தம். இது எப்படி வொர்க் அவுட் ஆனது எனக் காணலாம்...
Leymah Gbowee
Leymah GboweeTwitter
Published on

2003ம் ஆண்டு லைபீரியாவில் Sex Strike நடந்தது. அது ஒரு உள்நாட்டுக் கலவரத்தை நிறுத்துமளவு வீரியமானதாக இருந்தது. என்னது Sex Strike ஆ? அப்படின்னா? எனக் கேட்கிறீர்களா...


வேலை நிறுத்தம் அல்லது ஸ்ட்ரைக் நம்மால் அடிக்கடி கேட்கப்படும் வார்த்தை தான். கல்லூரி மாணவர்கள், அட்டோ ஓட்டுநர் சங்கம், லாரி ஓட்டுநர்கள், வணிகர்கள், அரசு மருத்துவர்கள் எனப் பலர் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவர். அதே போல ஒரு நாட்டின் பெண்கள் அனைவரும் இணைந்து தங்கள் கணவர்களுடன் பாலுறவு கொள்வதை நிறுத்தியது தான் செக்ஸ் ஸ்ட்ரைக்.

எலன் ஜான்சன் சர்லீஃப்
எலன் ஜான்சன் சர்லீஃப்Twitter

லைபீரிய அதிபரின் சர்வாதிகார போக்கை எதிர்த்துப் பல குழுக்களாக போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்ட போராட்டங்களும் அடங்கும். இது லைபீரியாவின் இரண்டாவது உள் நாட்டுப் போர் என அழைக்கப்படுகிறது. இதனால் லட்சக்கணக்கில் மக்கள் கொல்லப்பட்டனர்.

போரிலும் வன்முறையிலும் ஈடுபடும் ஆண்களால் சொல்லி மாளாத பிரச்னைகளைச் பெண்கள் சந்திக்க நேரிட்டது. கிராமங்கள் கொள்ளையடிக்கப்பட்டன. வீடுகள் கொளுத்தப்பட்டது. பாலியல் வன்கொடுமைகள் அரங்கேறின. இதனால் கொதித்தெழுந்த பெண்கள் தங்களது போராட்டத்தை அறிவித்தனர். லேமா போவி ( Leymah Gbowee ) எனும் பெண் சமூக செயற்பாட்டாளர் அனைத்துப் பெண்களையும் ஒருங்கிணைத்தார்.

படிப்படியாக தங்கள் வாழ்வை இழந்த பெண்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர். பெண்களின் போராட்டத்துக்கு நாடெங்கிலும் அங்கீகாரம் கிடைத்தது. அவர்கள் கூடி அமைதிக்கான போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டனர். "பெண்களுக்கு அமைதி வேண்டும்" என்பது தான் அவர்களின் கோஷமாக இருந்தது. அந்த கோஷத்தை மக்களும் முழங்கினர் ஆனால் அதிகார தரப்பில் அமைதிக்கான முன்னெடுப்புகள் குறைவாகவே இருந்தது.

Leymah Gbowee
ஈரான் : உச்சத்தில் வறுமை, பாலியல் தொழில் செய்யும் பெண்கள் - கண்ணீர் சிந்த வைக்கும் நிலைமை

இதனால் பெண்கள் இணைந்து செக்ஸ் ஸ்ட்ரைக்கை அறிவித்தனர். செக்ஸ் ஸ்ட்ரைக் உலக அளவில் கவனம் பெற்றது. அதிபர் தேர்தல் நடத்த ஒத்துக் கொண்டார். 2006ம் ஆண்டு நடந்த தேர்தலில் பெண்கள் சார்பாக நின்ற எலன் ஜான்சன் சர்லீஃப் வெற்றி பெற்றார். அவர்தான் லைபீரியாவின் முதல் பெண் ஜனாதிபதி.

லேமா போவி மற்றூம் எலன் ஜான்சன் சர்லீஃப் ஆகியோருக்கு பின்னாட்களில் நோபல் பரிசு வழங்கப்பட்டது.

Leymah Gbowee
உக்ரைன் : "பாலியல் வன்கொடுமையை ரஷ்ய வீரர்கள் போர் ஆயுதமாக பயன்படுத்துகின்றனர்"
ரைலா ஒடிகாவின் இடா ஒடிகா
ரைலா ஒடிகாவின் இடா ஒடிகாTwitter

2007 ம் ஆண்டு கென்யாவில் தேர்தல் முடிந்தது முதலே குடியரசுத் தலைவர் கிபாகி மற்றும் பிரதமர் ரைலா ஒடிகா இடையே மோதல் தொடர்ந்தது. அதிகாரத்தைப் பிரித்துக்கொள்வதில் ஏற்பட்ட இந்த பிரச்னை நாட்டில் கலவரங்களாக வெடித்து 1500 பேருக்கு மேல் உயிரிழந்தனர். லட்சக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து தவித்தனர்.

இதனால் அந்த நாட்டுப் பெண்கள் உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சியைப் படுக்கையறையிலிருந்து தொடங்கினர். பெண் வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு மற்றும் பெண்கள் வளர்ச்சி அமைப்புகள் இணைந்து இதனைத் தொடங்கினர். கென்ய பிரதமரின் மனைவியே நேரடியாக செக்ஸ் ஸ்ட்ரைக்கை அறிவித்தார்.

கலவரங்கள் குறையத்தொடங்கின. இறுதியில் பிரதமரும் குடியரசுத் தலைவரும் அதிகார பகிர்வு ஒப்பந்தத்துக்குத் தலையசைத்து நாடு அமைதியானது. கென்ய பெண்களின் இந்த முயற்சிகள் உலகெங்கிலும் பரவலாகப் பேசப்பட்டது.

இந்த செக்ஸ் நிறுத்தத்தின் வெற்றிகள் வெறும் ஆண்களுக்கு செக்ஸ் தடைபட்டதால் மட்டும் கிடைக்கப்பெற்றதல்ல பெண்களின் உறுதியான போராட்டமே முக்கிய காரணம் எனக் கூறியிருக்கிறார்கள் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்.

Leymah Gbowee
ரோஷினி நாடார் : இந்தியாவின் பெரும் பெண் பணக்காரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்த தமிழச்சி

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.


Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.


Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com


Follow us on:

Newssensetn: https://www.newssensetn.com/

Nalam360 : https://www.newssensetn.com/health

Newsnow: https://www.newssensetn.com/wow-news

Tamilflashnewsapp: https://www.newssensetn.com/tamilnadu

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com