உக்ரைன் வானில் பறக்கும் தட்டுகள் : ரஷ்யாவின் சதியா? அமெரிக்க ராணுவம் எச்சரிக்கை

இது வேற்றுக்கிரக வாசிகளது பறக்கும் தட்டுக்களாக இருக்குமோ என்று கண்டறிய தாங்கள் ஒரு தேடும் பணியை மேற்கொள்ள இருப்பதாக அந்த அகாடமி தெரிவித்திருக்கிறது.
UFOs
UFOs Twitter
Published on

உக்ரேனிய வானத்தில் வேற்றுக் கிரக வாசிகளின் பறக்கும் தட்டு பறந்தததா?உக்ரைன் நாட்டின் தலைநகரில் கீவ் முதன்மை வானியல் கண்காணிப்பகம், தேசிய அறிவியல் அகாடமியோடு இணைந்து ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது.

அதன்படி இந்நிறுவனங்களின் நிபுணர்கள் வானில் அடையாளம் தெரியாத பெரிய பொருட்கள் பறப்பதை உறுதி செய்திருக்கிறார்கள்.இருப்பினும் அமெரிக்காவின் இராணுவத் தலைமையகமான பென்டகன் உக்ரைனில் பறக்கும் இந்த அடையாளம் தெரியாத பொருட்கள் சீனா மற்றும் ரஷ்யாவின் இராணுவத் தொழில்நுட்பம் சார்ந்ததாக இருக்கலாம் என்று ஊகிப்பதாக நீண்டகாலமாக எச்சரித்துள்ளது.

UFO
UFOCanva

தற்போது உக்ரைன் நிபுணர்கள் கூறியிருக்கும் இந்த அடையாளம் தெரியாத பொருட்களை பென்டகன் இதுவரை ஆதாரப்பூர்வமாக மறுக்கவில்லை. உக்ரைனின் இந்தக் கண்டுபிடிப்பு குறிப்பிடத்தக்கது. போரின் போது கூட அறிவியல் ஆய்வுகள் எப்படி முன்னேறியிருக்கிறது என்பதை இந்த தகவல் தெரிவிக்கிறது. மேலும் இந்த பொருட்கள் குறித்து விரிவான விளக்கத்தையும் உக்ரைன் விஞ்ஞானிகள் அளித்திருக்கிறார்கள். 

நிபுணர்களின் ஆய்வின் படி அந்த அடையாளம் தெரியாத பொருட்கள் எங்கும் பறக்கின்றன. இவற்றை கணிசமான எண்ணிக்கையில் பார்த்ததாகவும் அவற்றின் அடையாளம் மற்றும் மூலம் தெரியவில்லை என்றும் நிபுணர்களின் ஆய்வறிக்கை கூறுகிறது. “அடையாளம் தெரியாத வான் நிகழ்வுகள்" என்பதுதான் உக்ரைன் நிபுணர்கள் வெளியிட்டிருக்கும் ஆய்வின் தலைப்பு. கீவ் மற்றும் வினாரிவ்கா எனும் கீவ் நகரின் தெற்கே உள்ள கிராமத்தில் தேசிய வானியல் அகாடமியின் ஆய்வகத் தரவுகளின் படி இந்த அடையாளம் தெரியாத பொருட்கள் பறப்பது பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.

UFOs
'ஏலியன் சிக்னலாக இருக்கலாம்' : சர்ச்சையான சீன ஆய்வு - என்ன, எங்கே?

இது வேற்றுக்கிரக வாசிகளது பறக்கும் தட்டுக்களாக இருக்குமோ என்று கண்டறிய தாங்கள் ஒரு தேடும் பணியை மேற்கொள்ள இருப்பதாக அந்த அகாடமி தெரிவித்திருக்கிறது.

ஆராய்ச்சியாளர்கள் தாங்கள் கண்ட நிகழ்வை இரண்டு குழுக்களாகப் பிரித்தனர். அதன் பெயர்கள் காஸ்மிக்ஸ் மற்றும் பாண்டம்ஸ். காஸ்மிக்ஸ் என்பது வானத்தின் பின்னணியை விட பிரகாசமாக இருக்கும் ஒளிரும் பொருட்கள்.

இந்தப் பொருட்கள் ஸ்விப்ட், ஃபால்கன், கழுகு என்று பறவைகளின் பெயரில் அழைக்கப்படுகின்றன. பேண்டம்கள் என்பது இருண்ட பொருட்களாகும். இந்தப் பொருட்கள் ராக்கெட்டுகள், ஏவுகணைகள் அல்லது போரில் பயன்படுத்தப்படும் வேறு சில ஆயதங்கள் என்று கூறுவது மிகவும் எளிமைப்படுத்தப்பட்ட விளக்கமாகும். இந்தப் பொருட்கள் என்ன என்பது இதுவரை தெளிவாகத் தெரியவில்லை என்றே விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

UFOs
ஏலியன் போல மாற பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்ட ரஷ்ய இராணுவ வீரர்
 aliens
aliensNewsSense

 அமெரிக்கக் கப்பற்படை விமானிகளால் இந்த அடையாளம் தெரியாத பொருட்கள் பலமுறை பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. தற்போது உக்ரைனில் அவை தென்பட்டிருப்பதால், அது குறித்த விவாதத்தை மக்களிடத்தில் மீண்டும் எழுப்பியிருக்கிறது. அமெரிக்க காங்கிரசுக்கு இது குறித்த விசாரணையில் பதிலளித்த பென்டகன், இதை முறையாக விசாரிக்க இருப்பதாகக் கூறியிருக்கிறது.

அந்த விசாரணைக்கு அமெரிக்க பாராளுமன்றம் அனுமதி அளித்ததை ஒட்டி பென்டகன் ஏஏஆர்ஓ எனும் திட்டத்தை அடையாளம் தெரியாத பொருட்களைக் கண்டுபிடிக்கத் துவங்கியிருக்கிறது. பெண்டகனின் இந்த புதிய நிறுவனமானது யூஎஃப்ஓ எனப்படும் வேற்றுக்கிரகவாசிகளை கண்டுபிடிப்பதற்கும், அவை மனிதனால் உருவாக்கப்பட்டவையல்ல என்பதையும் ஆய்வு செய்து கண்டுபிடிக்கும். அமெரிக்க செனட்டின் அறிக்கையின் படி இத்தகைய அடையாளம் தெரியாத பொருட்களின் நிகழவும் அச்சுறுத்தலும் அதிவேகமாக வளர்ந்து வருகிறது. 

UFOs
ஏலியன் : 32 ஆண்டுகளுக்கு பிறகு வெளியான தெளிவான UFO புகைப்படம் - உடையுமா மர்மங்கள்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com