ஏலியன் போல மாற பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்ட ரஷ்ய இராணுவ வீரர்

25 வயது இளைஞரான கிரில் தெரேஷின் மருத்துவர்களின் மரண அபாய எச்சரிக்கையையும் கடந்து பல அறுவை சிகிச்சைகளைச் செய்து ஏலியன் போல மாறியதாக வீடியோ ஒன்றில் கூறியுள்ளார்.
கிரில் தெரேஷின்
கிரில் தெரேஷின்Twitter

ரஷ்யாவைச் சேர்ந்த இராணுவ வீரர் பெட்ரோலிய ஜெல்லியைப் பயன்படுத்தி தனது கைகளில் அதிகம் சதை இருப்பது போல பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளார். இதனால் அவர் போலி பாப்பாய் என அழைக்கப்படுகிறார். அத்துடன் ஏலியன் போலத் தோற்றமளிப்பதற்காகப் பல அறுவை சிகிச்சைகளைச் செய்துள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாகப் பல அறுவை சிகிச்சைகளைச் செய்து வந்த அவர் தற்போது ஏலியன் போலத் தெரிவதற்கான முழு சிகிச்சைகளையும் செய்துவிட்டதாக வீடியோ ஒன்றில் கூறியுள்ளார்.

25 வயது இளைஞரான கிரில் தெரேஷின் மருத்துவர்களின் மரண அபாய எச்சரிக்கையையும் கடந்து இந்த சிகிச்சையைச் செய்துகொண்டார். அவரது கன்னம் மற்றும் உதட்டில் சதைகளை அதிகப்படுத்தியிருக்கிறார். கீழ் தாடை மற்றும் நெற்றியை இழைத்து ஏலியன் போன்ற உருவத்தைப் பெற்றிருக்கிறார்.

கிரில் தெரேஷின்
Aliens : 100 ஆண்டுகளாய் வேற்றுகிரகவாசிகளுடன் பேச முயலும் மனித குலம் - முழுமையான வரலாறு

சமீபத்திய வீடியோ ஒன்றில் தனது முக அமைப்பைக் காட்டியவர், “நான் ஒரு அழகான ஆண்” என்று பேசியுள்ளார். அத்துடன் “நான் டீனேஜராக இருக்கும் போது UFOக்களைப் பார்த்தேன். அதனால் நான் அவற்றை நம்புகிறேன். ஏலியன் இருப்பது எனக்குத் தெரியும். அவர்கள் தான் மிகச் சக்திவாய்ந்தவர்கள். நான் அவர்களுடன் சேருவது போல உணர்கிறேன்” எனப் பேசியிருக்கிறார்.

Ex-Russian soldier
Ex-Russian soldier Twitter

சாரா எனும் அழகுக்கலை நிபுணர் இந்த சிகிச்சைகளைச் செய்திருக்கிறார். இதற்காக கிரில் தெரேஷின் இந்திய மதிப்பில் 3,52,523 ரூபாய் செலவு செய்திருக்கிறார். ஏலியன் முகத்தின் மூலம் இவர் டிக்டாக்கில் பிரபலமாக இருக்கிறார். இவரது கைகள் பாப்பாய் கார்டூன் போல இருப்பதனால் இவரை போலி பாப்பாய் என அழைக்கின்றனர் நெட்டிசன்கள்.

கிரில் தெரேஷின்
Alien : மனிதக்குலத்தை வேற்றுகிரகவாசிகள் ஏன் பார்வையிடவில்லை?

இதேப் போல அந்தோனி லோஃப்ரெடோ எனும் பிரஞ் இளைஞர் கடந்த ஆண்டு தனது மேல் உதட்டை நீக்கி ஏலியன் போல மாறியுள்ளார். லண்டனைச் சேர்ந்த கிரேஸ் எனும் டாட்டூ கலைஞர் தனது உடலில் மாற்றங்களைச் செய்து ஏலியன் போலத் தோற்றமளிக்கிறார். இது போன்ற சம்பவங்களும் நிகழும் அளவு மனிதர்களுக்கு ஏலியன்கள் மீது நம்பிக்கை இருப்பது ஆச்சரியமளிக்கும் ஒன்றாக இருக்கிறது.

கிரில் தெரேஷின்
ஏலியன் வீடியோவை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு காட்டிய அமெரிக்க ராணுவம்

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com