இரும்பு, வைர மழை பெய்யும் அதிசய கோள்கள் - சில ஆச்சர்ய தகவல்கள்

கோர்னெல் பல்கலைக்கழகத்தின் எக்ஸோஜெம்ஸ் ஆராய்ச்சியில் நமது சூரிய குடும்பத்தை தாண்டியும் சில அற்புதமான,வித்தியாசமான கோள்கள் இருப்பதாக ஆராச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்
Galaxy
GalaxyTwitter
Published on

நம் சூரிய குடும்பத்தைத் தாண்டி பிரபஞ்சத்தில் இருக்கும் வித்தியாசமான, அற்புதமான கோள்கள்

1. WASP-103b என்கிற கோள் அதன் மையக் நட்சத்திரத்துக்கு மிக அருகில் உள்ளது

2. இரட்டை நட்சத்திர அமைப்பான பி சென்சுரி (b Centauri) மற்றும் அதன் மிகப் பெரிய கோளான பி செஞ்சுரி பி.

3. ஒரு வெள்ளை டுவார்ஃப் (dwarf) நட்சத்திரத்தை வியாழன் போன்ற கோள் ஒன்று சுற்றி வருகிறது. ஒரு நட்சத்திரம், காலப் போக்கில் அமைப்பு ரீதியில் ஏற்படும் மிகப் பெரிய மாற்றங்களைத் தான் ஸ்டெல்லர் எவல்யூஷன் என்கிறோம். அப்படி ஒரு மாற்றம் நிகழ்ந்த போது அக்கோள் அதைத் தாக்குபிடித்தது, ஆனால் அம்மாற்றத்தால் நட்சத்திரம் இறந்துவிட்டது.

4. WASP-76b கோள் இரவு நேரத்தில் வானத்தில் இருந்து இரும்பு மழை பொழிவதைப் போல காட்சியளிக்கும்

5. வானியல் வல்லுநர்கள், மனிதர்கள் வாழ்வதற்கு ஏதுவான புதிய ரக கோள்களைக் கண்டுபிடித்துள்ளனர். அதை ஹைசியன் (HYcean) என்றழைக்கின்றனர். வெப்பமான, பெருங்கடல்களால் சூழப்பட்ட அக்கிரகங்களின் வளிமண்டலத்தில் ஹைட்ரஜன் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது.

6. பூமியில் இருந்து சுமார் 35 ஒளி ஆண்டுகள் தொலைவில் இருக்கும் கோள்கள் குடும்பத்தில் L 98-59b என ஒரு கோள் இருக்கிறது. அதன் நிறை அளவு வீனஸில் பாதிதான்.

7. எக்ஸோபிளேனட் என்றழைக்கப்படும் வாயு நிறைந்த புறக்கோள்கள் இரண்டு, சூரியனைப் போன்ற HD 152843 நட்சத்திரத்தைச் சுற்றி வருகின்றன.

8. பூமியில் இருந்து சுமார் 90 ஒளி ஆண்டுகள் தொலைவில் நெப்டியூன் போல ஒரு கோள் இருக்கிறது. அதன் பெயர் TOI-1231 b.

9. ப்ராக்ஸிமா சென்சுரி பி (Proxima Centauri b) என்கிற கோளில் இருந்து பார்க்கும் போது ப்ராக்ஸிமா செஞ்சுரி நட்சத்திரத்திலிருந்து ஒளிப் பிழப்பு வெடித்து வெளியேறுவது போல காட்சியளிக்கும்

10. பூமி அளவுக்கு மையப் பகுதி கொண்ட எக்ஸோபிளேனெட் ஒன்றின் வளிமண்டலம் போன்ற காற்றடுக்கை இழந்த பிறகு, அதே போல ஒரு காற்றடுக்கை அக்கோள் உருவாக்கிக் கொள்கிறது. அது ஹைட்ரஜன், மீத்தேன், ஹைட்ரஜன் சைனேட் போன்ற நச்சுத்தன்மை நிறைந்த வாயுக்களால் உருவானது. அந்த புதிய வளிமண்டலம், மெலிதான மேற்புகளைக் கொண்ட தகடுகளின் கீழ் இருக்கும் எரிமலைகளில் வெடிப்பு ஏற்படுவதால், கோளின் மீதும் வெடிப்புகள் தென்படுகின்றன.

Galaxy
GalaxyTwitter

11. TRAPPIST - 1 கோள் அமைப்பில் உள்ள ஏழு கோள்களின் அடர்த்தி அளவுகள் கிட்டதட்ட ஒரே மாதிரியாக இருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. எனவே அதன் உள்ளடக்கங்களும் ஒன்றாக இருக்க வாய்ப்பு இருக்கிறது.

12. TOI - 178 என்கிற கோள் அமைப்பின் தொலைதூரக் கோள் ஒன்றும் பால்வெளியில் இருக்கிறது

13. இதுவரை நம் பால்வெளியில் கண்டுபிடிக்கப்பட்டதிலேயே மிகவும் பழமையான மற்றும் உலோகங்கள் குறைவாக இருக்கக் கூடிய கோள் அமைப்பு TOI - 561b. வானியல் வல்லுநர்கள் ஒரு சூப்பர் எர்த்தையும், ஒரு நட்சத்திரத்தை சுற்றி வரும் இரு கோள்களையும் கண்டுபிடித்தனர்.

14. HD106906 b என்றழைக்கப்படும் மிகப் பெரிய மற்றும் தொலைதூரத்தில் இருக்கும் புறகோள், ஒரு முறை தன்னுடைய இரட்டை மைய நட்சத்திரங்களைச் சுற்றி வர 15,000 பூமி ஆண்டுகள் ஆகும். இதன் சுற்றுவட்டப் பாதை நீள்வட்டமாக இருக்கும்.

15. நாம் இருக்கும் பால்வெளியில், எந்த வித இலக்குமின்றி, எந்த ஒரு நட்சத்திரத்தையும் மையப் புள்ளியாகக் கொண்டு சுற்றாமல் தன் போக்கில் திரியும் ஒரு கோளை மைக்ரோலென்சிங் முறையில் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

16. WASP-189 b என்கிற புறகோள் தன்னுடைய மையப் புள்ளி நட்சத்திரத்தை சுற்றி வரும். அதில் மையப் புள்ளி நட்சத்திரம் நீல நிறத்தில் இருக்கும். காரணம், அது நம் சூரியனை விட சுமார் 2,000 டிகிரி வெப்பம் அதிகமாக இருக்கிறது.

17. WD 1856 b என்கிற வியாழன் கோள் அளவுள்ள புற கோள், ஒரு இறந்த நட்சத்திரத்தை 1.5 நாட்களில் சுற்றி வருகிறது. இப்படி புறகோள் ஒரு இறந்த நட்சத்திரத்தைச் (வெள்ளை டுவார்ஃப் நட்சத்திரம்) சுற்றி வருவது இதுவே முதல்முறை.

18. கார்பன் அதிகப்படியாக இருக்கும் கோளில், நீரால் அதை வைரங்கள் நிறைந்த கிரகமாக மாற்றமுடியும். அக்கோளின் உட்புறத்தில் வைரம் மற்றும் சிலிகா முக்கிய தாதுப் பொருட்களாக இருக்கும். அதன் மையப் பகுதி அடர் நீல நிறத்தில் இருக்கும் அதற்குக் காரணம் இரும்பு - கார்பன் கலவைதான்.

19. ஓர் இளம் சூரியன் போன்ற நட்சத்திரத்தை இரு பிரம்மாண்ட வாயு நிறைந்த புறகோள்கள் சுற்றி வருகின்றன. இப்படத்தை SPHERE என்கிற கருவி கொண்டு படம்பிடித்துள்ளனர்.

20. நெப்டியூன் அளவிலுள்ள கோள் ஒன்று நெப்டியூனியன் பாலைவனப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Galaxy
GalaxyTwitter
Galaxy
37,000 கி.மீ. வேகத்தில் பூமியை நோக்கி வரும் எரிகல் - நமக்கு ஆபத்தா? திக் திக் நிமிடங்கள்

21. சூப்பர் பூமி வகையைச் சேர்ந்த பல கோள்களைக் கொண்ட கோள் அமைப்பு Gliese 887 என்கிற இறக்கும் நிலையில் உள்ள சிவப்பு நட்சத்திரத்தை சுற்றி வருகிறது

22. புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள AU Mic b என்கிற புறகோள் நெப்டியூன் கிரகத்தின் அளவுக்கு உள்ளது.

23. ப்ராக்சிமா பி என்கிற கோளின் பரப்பு கற்பனையில் வரையப்பட்டிருக்கிறது. இந்த கோள் தனது ப்ராக்ஸிமா செஞ்சுரி என்கிற சிவப்பு நிறத்திலுள்ள இறக்கும் தருவாயிலுள்ள நட்சத்திரத்தை சுற்றி வருகிறது. ப்ராக்சிமா செஞ்சுரி தான் நம் சூரிய குடும்பத்துக்கு மிக அருகில் இருக்கும் நட்சத்திரம். ப்ராக்சிமா பி கோள் பூமியை விட அதிக நிறை கொண்டது.

24. Kepler - 88 என்கிற கோள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒரு பெரிய புறகோள் மற்றும் இரு சிறிய கோள்கள் கெப்ளர் 88 நட்சத்திரத்தை சுற்றி வருகின்றன. இது சுமார் 1,200 ஒளியாண்டு தொலைவில் அமைந்துள்ளது.

25. Kepler-1649c புறகோள் தன் சிவப்பு நிற டுவார்ஃப் நட்சத்திரத்தை சுற்றி வருகிறது.

26. சனி கோளில் உள்ள வளையத்தைப் போல, வளையம் கொண்ட கோள் ஒன்று அதன் மைய நட்சத்திரத்தைக் கடந்து செல்லும் போது எப்படி இருக்கும் என்றும் கற்பனையில் வரையப்பட்டிருக்கிறது.

27. மேலும் KIC-7340288 b எங்கிற கோள் கண்டறியப்பட்டுள்ளது. 17 புதிய கோள்களின் அளவு இளஞ்சிவப்பு நிறத்தில் வரையப்பட்டு. செவ்வாய், பூமி, நெப்டியூன் கோள்களுக்கு வண்ணம் தீட்டப்பட்டுள்ளது. இதை பச்சை நிறத்தில் எடுத்துக்காட்டியுள்ளனர்

28. K2-18b-யை அமண்டா ஸ்மித் என்பவர் வரைந்துள்ளார்.

29. ஒரு மிகப் பெரிய கோள், ஒரு இளம் நட்சத்திரத்தை சுற்றி வருகிறது. இந்த கோள் வியாழனைவிட சுமார் 10 மடங்கு பெரிதாகவும், அதன் சுற்றுவட்டப் பாதை, பூமி சூரியனைச் சுற்றி வரும் பாதையை விட சுமார் 600 மடங்கு பெரிதாகவும் இருக்கிறது.

30. KELT-9 கோள் அமைப்பில் உள்ள மைய நட்சத்திரம், அதிவேகமாக சுழலும் ஏ ரக நட்சத்திரம். அது நம் சூரியனை விட 2.5 மடங்கு பெரியது மற்றும் நம் சூரியனை விட இரு மடங்கு வெப்பமானது. KELT-9b கோளின் வெப்பநிலை 7,800 டிகிரி ஃபாரன்ஹீட் இருக்கும். சூரியனை விட 2,000 டிகிரி மட்டும் வெப்பநிலை குறைவு.

Galaxy
GalaxyTwitter

31. புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ள ப்ராக்சிமா சி சூப்பர் எர்த் கோள் தன் மைய நட்சத்திரத்தைச் சுற்றி வர சுமார் 5.2 புவியாண்டுகள் ஆகும். இந்த கோள் அமைப்பில் கடந்த 2016ஆம் ஆண்டு ப்ராக்சிமா பி என்கிற கோளும் கண்டுபிடிக்கப்பட்டது.

32. GJ180d என்கிற பூமிக்கு மிக அருகில் இருக்கும் சூப்பர் எர்த் கோள். இங்கு உயிரினங்கள் வாழும் சூழல் நிலவலாம் என்று கூறப்படுகிறது.

33. WASP - 12b என்கிற கோள் அடுத்த 30 லட்சம் ஆண்டுகளில் மரணிக்கவிருக்கிறது. தன் மரணப் படுக்கையில், மைய நட்சத்திரத்தைச் சுற்றிச் சுழன்று திரிகிறது.

34. TOI 700 d என்கிற கோள் தான் நாசாவின் TESS திட்டத்தின் கீழ் கண்டுபிடிக்கப்பட்ட முதல் பூமி அளவுள்ள வாழ்வதற்கான சாத்தியக் கூறுகள் கொண்ட புறகோள்.

36. TOI 1338 b என்கிற கோள் அதன் இரு மைய நட்சத்திரங்களைச் சுற்றி வரும். இதுவும் நாசாவின் டெஸ் திட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கோள்

36. ஒரு ஈரமான புறகோள் ஆக்சிஜன் வளிமண்டலத்தோடு, ஒரு சிவப்பு நிறமுள்ள எம் ரக டுவார்ஃப் நட்சத்திரத்தைச் சுற்றிவருகிறது

37. ஒரு காய்ந்த, ஆக்சிஜனை வளிமண்டலத்தில் கொண்டுள்ள புறகோள், சிவப்பு நிறமுள்ள எம் டுவார்ஃப் நட்சத்திரத்தைச் சுற்றிவருகிறது.

38. Kepler 51 கோள் அமைப்பில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் சூப்பர் பஃப் போன்ற வடிவத்தால் இதை காட்டன் கேண்டி புறகோள் என்றும் அழைப்பர். அந்த அளவுக்கு அது இலகுவாக இருக்கும்.

39.ஒரு புறகோளை இரு நிலவு சிற்றி வருகிறது. அக்கோள் ஒரு சிவப்பு நிற டுவார்ஃப் நட்சத்திரத்தைச் சுற்றி வருகிறது.

40.பைனரி நட்சத்திர அமைப்பில், இரு புறகோள்கள் ஒன்றோடொன்று மோதிக் கொள்வது போன்ற படம்.

Galaxy
GalaxyTwitter

41. விண்வெளியின் உறைபனியாக இருக்கும் நட்சத்திர அமைப்பில் நெப்டியூனைப் போலிருக்கும் ஒரு புறகோள். புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட பல்வேறு வாயுக்களால் நிறைந்த பெரிய கோள் போல காட்சியளிக்கும் இது பூமியில் இருந்து 11 ஒளியாண்டுகள் தொலைவில் இருக்கும். நட்சத்திரத்தைச் சுற்றி வர சுமார் 20 ஆண்டுகள் ஆகலாம்.

42. நம் சூரிய குடும்பத்தில் இருக்கும் சூரியனோடு, மற்றொரு கோள் அமைப்பின் சூரியனாகத் திகழும் GJ 3512 உட்பட, பல்வேறு சிவப்பு நிற டுவார்ஃப் நட்சத்திரங்கள் மற்றும் கோள்கள் அடங்கும்.

43. K2 - 18b என்கிற புறகோள், தன்னுடைய மைய நட்சத்திரத்தை சுற்றி வருகிறது. இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட சூப்பர் எர்த் ரக கோள்களின் வளிமண்டலத்தில் நீராவி இருப்பதாகக் கூறப்படும் ஒரே புறகோள் இது தான். அங்கு சரியான தட்ப வெப்பநிலை இருந்தால் உயிர் வாழக் கூடிய சாத்தியக்கூறுகள் இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

44. புறகோளைச் சுற்றி வரும் நிலவை எக்ஸோமூன் என்பர். அப்படி ஒரு எக்ஸோமுன் எந்த கோளைச் சுற்றி வந்ததோ, அதே பெரிய வாயு கோளால் இழுக்கப்படும் போது, நிலவு தன் நிறையை இழந்துவிடுகிறது

45. HR 5183 b என்கிற புறகோளின் சுற்றுவட்டப் பாதையை நம் சூரிய குடும்பத்துக்குள் பொருத்திப் பார்த்தால், அது நம் சூரிய குடும்பத்தின் எரிகல் பகுதியிலிருந்து, நம் சூரிய குடும்பத்தில் எட்டாவது கோளான நெப்டியூன் கோளின் சுற்று வட்டப் பாதை வரை செல்லும்.

46. சுமார் 2 கோடி ஆண்டுகள் பழமையான இரு பிரம்மாண்ட கோள்கள் பீடா பிக்டோரிஸ் என்கிற நட்சத்திரத்தை சுற்றி வருகின்றன. அந்த நட்சத்திரத்தைச் சுற்றி தூசி & வாயுக்களால் நிறைந்த வளையம் போன்ற அமைப்பு இருக்கும்

47. சூப்பர் எர்த் கோளான GJ 357 d எப்படி இருக்கும் என கற்பனையில் வரையப்பட்டு இருக்கிறது. இக்கோள் பூமியில் இருந்து 31 ஒளியாண்டுகள் தொலைவில் அமைந்துள்ளது.

48. PDS 70 c என்கிற புறகோளைச் சுற்றி ஒரு வளையம் போன்ற அமைப்பு உருவாகி இருப்பதை ஒரு கலைஞர் படமாக வரைந்துள்ளார். இந்த கோள் சுமார் 370 ஒளியாண்டு தொலைவில் ஒரு நட்சத்திர அமைப்பில் உள்ளது.

49. இரு வாயு நிறைந்த புறகோள்கள் PDS 70 என்கிற இளம் நட்சத்திரத்தைச் சுற்றி வருகிந்றன. அதோடு இந்த இரு புறக்கோள்களும் தங்களைச் சுற்றியுள்ள வளையங்களில் இருக்கும் பொருட்களைக் கொண்டு தொடர்ந்து வளர்ந்து வருகின்றன.

Galaxy
GalaxyTwitter

50. நாசாவின் டெஸ் திட்டத்தில், பூமியின் அளவில் கண்டுபிடிக்கப்பட்ட முதல் கோள் HD 21749c. அதோடு HD 21749b சிறிய வெப்பமான நெப்டியூன் போன்ற கோளும் கண்டுபிடிக்கப்பட்டது.

51. ஒரு வெப்பமான சனி கோள் தன் மைய நட்சத்திரத்தைக் கடந்து செல்வது போன்ற படத்தையும் சேகரித்துள்ளனர்.

52. நாசாவின் டெஸ் திட்ட செயற்கைக் கோள் நட்சத்திரங்கள் மற்றும் கோள் அமைப்புகளுக்கு மத்தியில் இருப்பது போல் ஒரு படத்தை நாசா கொட்டார்ட் ஸ்பேஸ் ஃப்ளைட் சென்டர் & கார்னெல் பல்கலைக்கழகம் சேகரித்துள்ளது.

53. ஆப்டிகல் இன்டர்ஃபெரோமெட்ரி (Optical Interferometry) என்கிற முறையைப் பயன்படுத்தி முதன்முதலில் ஒரு சூப்பர் தொலைநோக்கி உருவாக்கப்பட்டது. அதன் மூலம் முதன்முதலில் ஒரு புறக்கோள் குறித்த விஷயங்கள் ஆராயப்பட்டன. புறகோள் வளிமண்டலத்தில் உள்ள மேகங்களில் இரும்பு மற்றும் சிலிகாட் சுழன்று கோள் முழுக்க புயல் வீசுவதைப் பார்க்க முடிந்ததாகக் கூறியுள்ளது சி என் என்.

54. Barnard star b என்கிற சூப்பர் எர்த் கோள், Barnard's star என்கிற நட்சத்திரத்தை சுற்றி வருகிறது. அக்கோளின் பரப்பு கற்பனையில் இங்கு வரையப்பட்டுள்ளது. இது 6 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளது.

55. K2 - 288Bb என்கிற புறகோள் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது 226 ஒளியாண்டுகளுக்கு அப்பால் உள்ள, நெப்டியூனில் பாதியளவு கொண்ட கோள். இது எம் ரகத்தைச் சேர்ந்த இரு நட்சத்திரங்களை 31.3 நாளுக்கு ஒருமுறை சுற்றி வருகிறது.

56. HAT - P - 11b என்கிற புறகோள் ஒன்றுள்ளது. இந்த கோளின் வளிமண்டலத்தில் ஹீலியம் உள்ளது, அது ஒரு இளஞ்சிவப்பு நிற டுவார்ஃப் நட்சத்திரத்தால் எரிக்கப்படுகிறது. அது சூரியனை விட சிறியது தான், ஆனால் சூரியனை விட அதிக ஆற்றலோடு செயல்படுகிறது.

57. சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட HD 26965 சூப்பர் எர்த் ரக கோள் ஸ்டார் டிரக்கில் வரும் வல்கம் கிரகத்தோடு ஒப்பிடப்படுகிறது.

58. TRAPPIST - 1 என்கிற டுவார்ஃப் நட்சத்திரத்தை பூமியைப் போல 7 கோள்கள் சுற்றி வருகின்றன.

59. நம் சூரிய குடும்பத்தில் உள்ளது போலவே Kepler - 90 கோள் அமைப்பில் எட்டு கோள்கள் ஒரு நட்சத்திரத்தைச் சுற்றி வருகின்றன. அது பூமியில் இருந்து 2,500 ஒளியாண்டுகளுக்கு அப்பால் உள்ளது.

60. Ross 128 b என்கிற புறகோள், தன்னுடைய சிவப்பு டுவார்ஃப் நட்சத்திரத்தைச் சுற்றி வருகிறது. இது நம் சூரிய குடும்பத்திலிருந்து 11 ஒளியாண்டுகள் தொலைவில் இருக்கிறது.

Galaxy
GalaxyTwitter
Galaxy
விண்வெளியில் ஓர் அற்புத சொகுசு ஹோட்டல்; 2025ல் திறக்க முடிவு - என்ன சிறப்பம்சம் தெரியுமா?

61. WASP - 121b என்கிற கோள் 880 ஒளியாண்டுகளுக்கு அப்பால் இருக்கும் வியாழனைப் போன்ற பெரிய சூடான கோள். சொல்லப் போனால் வியாழன் கோளைவிட அதிக நிறை மற்றும் விட்டம் கொண்ட கோளிது. இத்தனை பிரமாண்ட கோளே, அதனுடைய மைய நட்சத்திரத்துக்கு அருகில் சென்றால் அதன் ஈர்ப்பு விசையால் அழிந்துவிடும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

62. நாசாவின் கெப்லர் தொலைநோக்கி அணி, 219 கோள்களைக் கண்டுபிடித்துள்ளது. அதில் 10 கோள்கள் பூமி அளவுக்கு, அதன் மைய நட்சத்திரத்திடமிருந்து அதிக வெப்பம், அதிக குளிர்ச்சி இல்லாத பகுதியில் இருக்கின்றன.

63. மைனஸ் 400 டிகிரி ஃபேரன்ஷீட் வெப்பநிலை கொண்ட பனிப் பந்து போன்ற கோள்தான் OGLE - 2016 - BLG - 1195Lb. இது மிக மங்களான ஒரு நட்சத்திரத்தைச் சுற்றிச் சுழன்று கொண்டிருக்கிறது. இது பூமியிலிருந்து 13,000 ஒளியாண்டுகளுக்கு அப்பால் இருக்கிறது.

64. LHS 1140b என்கிற கோள், நீர் இருக்க சாத்தியக் கூறுகள் இருக்கும் கோள்களில் ஒன்று. அது LHS 1140 என்கிற சிறிய மிக மங்களான சிவப்பு நட்சத்திரத்தைச் சுற்றி வருகிறது. இதன் நிறை பூமியை விட சுமார் 6.6 மடங்கு அதிகம்.

65. TRAPPIST - 1f என்கிற கோள் TRAPPIST - 1 என்கிற தன் மைய நட்சத்திரத்தைச் சுற்றி வருகிறது. இக்கோள் தன் நட்சத்திரமிடமிருந்து பூமியைப் போல சரியான தொலைவில் அமைந்திருப்பதால் நீர் இருப்பதற்கான சாத்தியக் கூறுகள் தென்படுவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

66. பைனரி கோள் அமைப்பில் ஒரு நட்சத்திரம் இரு கோள்களுக்கு மையப் புள்ளியாகவும், மற்றொரு நட்சத்திரம் மீதமுள்ள ஒரு கோளுக்கு மையப் புள்ளியாகவும் திகழ்வதாகப் படம் வரையப்பட்டுள்ளது.

67. ப்ராக்ஸிமா பி என்கிற கோள் தான் நம் சூரிய குடும்பத்துக்கு மிக அருகிலுள்ள நட்சத்திரம்.

68. TRAPPIST - 1b & 1c ஆகிய இரு கோள்கள் தங்களுடைய மைய நட்சத்திரத்தைக் கடக்கும்.

69. பூமியில் இருந்து சுமார் 320 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள HD 131399 கோள் அமைப்பில் மூன்று நட்சத்திரங்கள் மைய நட்சத்திரங்களாக உள்ளன. 160 லட்சம் ஆண்டுகள் வயதான கோள் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள புறகோள்களிலேயே மிக இளமையானது என்பது குறிப்பிடத்தக்கது.

70. Kepler-1647b என்கிற கோளின் நிறை மற்றும் அளவு அனைத்தும் கிட்டத்தட்ட வியாழன் கோளைப் போன்றே உள்ளது. ஆனால் வியாழன் கோளை விட கொஞ்சம் வெப்பம் அதிகம். இக்கோள் தன் மைய நட்சத்திரத்திலிருந்து சரியான தொலைவில் இருக்கிறது.

Galaxy
GalaxyTwitter

71. HD - 106906b என்கிற வாயுக்களால் நிறைந்த கோள், வியாழனை விட சுமார் 11 மடங்கு பெரியது. இக்கோள் அதன் கோள் அமைப்பின் மத்தியில் உருவானதாக நம்பப்படுகிறது.

72. Kepler - 10b என்கிற கோள், நம் சூரிய மண்டலத்தில் புதன் கோள் சூரியனுக்கு அருகில் இருப்பதை விட சுமார் 20 மடங்கு தன் மைய நட்சத்திரத்தோடு நெருக்கமாக இருக்கிறது. எனவே இக்கோளின் பகல் நேரத்தில் வெப்பநிலை 1,300 டிகிரி செல்ஷியலைத் தாண்டலாம். அது பூமியில் எரிமலை லாவாவின் வெப்பநிலையை விட அதிகம்.

73. HD - 188753 என்கிற கோளமைப்பில் வியாழனைப் போன்ற இந்த கோளுக்கு 3 சூரியன்கள் இருக்கின்றன. இது பூமியில் இருந்து 149 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளது. இதன் முக்கிய சூரியன் நம் சூரியனை நிறைய ஒத்து இருக்கிறது.

74. Kepler - 421b என்கிற புறகோள் தன் மைய நட்சத்திரத்தை 704 நாட்களுக்கு ஒரு முறை சுற்றி வருகிறது. பூமியில் இருந்து 1,000 ஒளியாண்டுகள் தொலைவில் இருக்கும் இந்த கோள் லிரா விண்மீன் கூட்டத்தைச் சேர்ந்தது.

75. பூமியைப் போல சுமார் 3 மடங்கு பெரிய கோள்கள் இரண்டை வானியல் வல்லுநர்கள் சைனஸ் (Cygnus) விண்மீன் கூட்டத்தில் கண்டுபிடித்தனர். இது பூமியில் இருந்து 3,000 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளது.

76. ஒருகோளைச் சுற்றி இரண்டு நிலவு இருப்பது போலவும், அது தன் மைய நட்சத்திரத்தில் இருந்து சரியான தொலைவில் இருப்பது போலவும் வரையப்பட்டுள்ளது.

77. Kepler - 186f என்கிற கோள்தான் பூமியின் அளவோடு ஒத்த கோளாக கண்டுபிடிக்கப்பட்டது. இக்கோள் தன் மைய நட்சத்திரத்திடமிருந்து சரியான தொலைவில் உள்ளது.

78. Kepler - 69c என்கிற சூப்பர் எர்த் ரக கோள் வெள்ளி கோளைப் போல காட்சியளிக்கும். இக்கோள் பூமியில் இருந்து 2,700 ஒளியாண்டுகள் தொலைவில் சைனஸ் விண்மீன் கூட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.

79. Kepler - 444 கோள் அமைப்பு நம் பால்வெளி 200 கோடி ஆண்டுகளாக இருக்கும் போது உருவானது. ஐந்து கோள்களைக் கொண்ட இக்குடும்பத்தில் உள்ள கோள்கள் புதன் அளவுக்கு சிறியதாகவும், வெள்ளி அளவுக்கு பெரியதையும் இருக்கும். 10 நாட்களுக்குள் அக்கோள்கள் தங்களின் மைய நட்சத்திரத்தைச் சுற்றி வந்துவிடுகின்றன.

80. Kepler - 452b என்கிற கோள் பூமியை விட சுமார் 60% பெரியது. இரண்டுமே ஜி2 ரக நட்சத்திரத்தை சுற்றி வருகின்றன. Kepler - 452b-ன் மைய நட்சத்திரம், நம் சூரியனை விட 1.5 பில்லியன் ஆண்டுகள் வயதானது. அதன் வயது 6 பில்லியன் ஆண்டுகள்.

Galaxy
நிலவின் மண்ணில் செடி வளர்த்த விஞ்ஞானிகள் - ஓர் அட்டகாச சம்பவம்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com