நிலவின் மண்ணில் செடி வளர்த்த விஞ்ஞானிகள் - ஓர் அட்டகாச சம்பவம்

1969 -ல் முதன் முதலாக நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவின் மீது கால் பதித்தார். அன்று முதல் நிலவின் மீதான பார்வை மாறியிருக்கிறது. அது நிலவின் மண்ணில் செடி வளர்ப்பது வரை வந்து நிற்கிறது.
செடி
செடிTwitter

நிலவின் மணலில் செடி வளர்த்துச் சாதித்துள்ளனர் அமெரிக்க விஞ்ஞானிகள். வரலாற்றில் முதன் முதலாகப் பூமிக்கு வெளியிலிருந்து எடுத்துவரப்பட்ட மண்ணில் செடி முளைக்க வைக்கப்பட்டுள்ளது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது.

நிலவின் மீது மனிதனுக்கு இருக்கும் ஈர்ப்பு கதைகளிலும் காவியங்களில் அதிகமாக வெளிப்படுவதைக் காணலாம். நிலவு மனிதன் அதிகம் விரும்பும் பொருட்களில் ஒன்றாக இருந்தது, 1969 -ல் முதன் முதலாக நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவின் மீது கால் பதித்தார். அன்று முதல் நிலவின் மீதான பார்வை மாறியிருக்கிறது. அது நிலவின் மண்ணில் செடி வளர்ப்பது வரை வந்து நிற்கிறது.

நிலா
நிலாTwitter

நாசா மற்றும் புளோரிடா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இணைந்து நிலவின் மண்ணில் செடி வளர்க்கும் ஆய்வை மேற்கொண்டுள்ளனர். அதற்காக அப்பல்லோ 11, 12 மற்றும் 17 மிஷன்களில் சேகரிக்கப்பட்ட மண் மாதிரிகளைப் பயன்படுத்தியிருக்கின்றனர். இந்த ஆய்வில் அரபிடோப்சிஸ் என்ற தாவர விதையை விதைத்துள்ளனர் விஞ்ஞானிகள். இது கடுகு வகையைச் சார்ந்த செடி எனத் தெரிகிறது. ஒவ்வொரு செடிக்கும் ஒவ்வொரு கிராம் நிலவின் மண் மாதிரி கொடுக்கப்பட்டுள்ளது. அதில் விதையை விதைத்து, தண்ணீர் தெளித்துப் பாதுகாத்துள்ளனர் விஞ்ஞானிகள். இரண்டு நாட்களில் அந்த மண்ணில் விதைக்கப்பட்ட விதைகள் செடிகளாக முளைத்துள்ளன. இது மனித இனத்தின் அறிவியல் வரலாற்றில் மிக முக்கிய ஆய்வாகக் கருதப்படுகிறது.

செடி
மோனலிசா முதல் எறும்புகள் அவரை : உங்களை வியக்க வைக்கும் 50 உண்மைகள்

நிலவு அல்லது மற்ற கிரகங்களில் வசிப்பது, விண்வெளி வாழ்க்கை குறித்த புதிய ஆய்வுகளுக்கான கதவுகளை இந்த ஆய்வு திறந்துவிட்டிருக்கிறது.

செடி
250 மில்லியன் ஆண்டுகள் பழமையான உயிரினம் : புதை படிமம் கண்டுபிடிப்பு - ஆச்சர்ய தகவல்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com