உலகின் ஆபத்தான இந்த விமான நிலையங்கள் குறித்து தெரியுமா?

டேபிள் டாப் ரன்வேக்களில் டேக் ஆஃப் மற்றும் லேண்டிங் இரண்டுமே சவாலானது. சற்று முன்னால் இறக்கினால் ஒரு விளிம்பிலும் சரியான நேரத்தில் நிறுத்தாவிட்டால் மற்றொரு விளிம்பிலும் சரிந்து விழக்கூடும்.
Table Top Runway
Table Top RunwayCanva

விமானங்களில் பறப்பதற்கான குறைந்த பட்சம் 6.5 விழுக்காடு மக்கள் பயப்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. விமான பயணம் சவாலாகும் போது இந்த பயம் இன்னும் அதிகரிக்கும். குறிப்பிட்ட விமான நிலையங்கள் அப்படி பல மடங்கு அதிகரித்து விமானத்துக்குள்ளாகவே பக்திப்பாடல்கள் பாடவைக்கும். அவைதான் டேபிள் டாப் ரன்வேக்கள் இருக்கும் விமான நிலையங்கள்.

நம் பூமியின் சமதளமற்ற பகுதிகளில் குறிப்பாக மலைப் பிரதேசங்களில் இந்த டேபிள் டாப் ரன்வேக்கள் இருக்கும். அப்படி என்ன அந்த ரன்வேக்களில் சிறப்பு எனப் பார்ப்போம்.

டேபிள் டாப் ரன்வே

ஒரு மலைப் பிரதேசத்தில் விமானத்தை இறக்குவது அத்தனை சுலபமல்ல. மலை பிரதேசங்களின் சீரற்ற காலநிலையை விட அதிக தொல்லை கொடுக்கக்கூடியவை அங்கிருக்கும் டேபிள் டாப் ரன்வேக்கள் தான்.

டேபிள் டாப் ரன்வேக்களை எளிதாக அதன் பெயரிலிருந்தே புரிந்துகொள்ள முடியும். ஒரு டேபிளின் மேல் ஒரு விமானம் தரையிரங்குவதாக கருதினால், அதன் இரு புறமும் விளிம்புகளுக்கு நடுவினில் சரியாக இறக்க வேண்டும்.

Table Top Runway
Table Top RunwayTwitter

ஒரு மலைப் பிரதேசத்தின் ஒரு பகுதியை மட்டும் சமன்படுத்தி அதில் ஓடுதளம் அமைக்கும் போது அது டேபிள் டாப் ரன்வே எனப்படுகிறது. இங்கு ஒரே ஒரு ஓடுதளம் மட்டுமே இருக்கும்.

மலைப்பிரதேசங்களில் மட்டுமல்லாமல் தீவுகளிலும், சமதளமற்ற பகுதிகளிலும் டேபிள் டாப் ரன்வேக்கள் இருக்கும். அதாவது எல்லா டேபிள் ராப் ரன்வேக்களும் மலைப்பிரதேசங்களில் இருப்பதில்லை. ஆனால் எல்லாமும் ஆபத்தானதாகவே இருக்கிறது.

ஏன் இவை ஆபத்தானவை?

டேபிள் டாப் ரன்வேக்களில் டேக் ஆஃப் மற்றும் லேண்டிங் இரண்டுமே சவாலானது. சற்று முன்னால் இறக்கினால் ஒரு விளிம்பிலும் சரியான நேரத்தில் நிறுத்தாவிட்டால் மற்றொரு விளிம்பிலும் சரிந்து விழக்கூடும். கொஞ்சம் அதிக தூரம் சென்று டேக் ஆஃப் செய்தாலும் மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும். இதனால் தான் இது மிகக் கடினமானது.

flight
flightTwitter

இத்துடன் டேபிள் டாப் ரன்வேக்கள் அனைத்தும் வசதியான நீளத்தில் இருப்பதில்லை. கேரளா மாநிலம் கோழிக்கோடு பகுதியில் இருக்கும் டேபிள் டாப் ரன்வேயின் நீளம் 2,700 மீட்டர் தான். ஆனால் டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் ஒரு ரன்வேயின் நீளம் 4,430 மீட்டர். அத்துடன் டேபிள் டாப் ரன்வே இருக்கும் பகுதிகளில் துல்லியமாக விபத்துக்கான அறிகுறிகளை எடுத்துக் கூறுவதற்கான வாய்ப்புகள் குறைவு என்றும் கூறப்படுகிறது.

Table Top Runway
விமான விபத்து : 33 ஆயிரம் அடி உயரத்திலிருந்து விழுந்து உயிர் பிழைத்த பெண் - ஆச்சரிய தகவல்

மேலும், மலைப்பிரதேசங்களில் விமானி இறங்கும் போது ரன்வே திடீரென முடிந்துவிடுவதனால் அதன் எல்லையைப் பார்க்க முடியாது. இதனால் காட்சி பிழை ஏற்பட்டு ஓடுதளத்தின் நீளத்தைச் சரியாகக் கணிக்க முடியாமல் போகலாம்.

டேபிள் டாப் ரன்வே விபத்துக்கு துரதிருஷ்டவசமாகச் சமீபத்தில் நடந்த கோழிக்கோடு விபத்து ஒரு பொருத்தமான எடுத்துக்காட்டு. மிகச் சிறிதாக இருந்த ஓடுதளத்தில் சரியாக நிறுத்தப்படாமல் 35 அடி சென்று கீழே சாய்ந்து விழுந்தது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸின் போயிங் 737 - 800 விமானம். மங்களூரில் இருக்கும் டேபிள் டாப் நிலையத்திலும் கடந்த 2010ம் ஆண்டு விபத்து ஏற்பட்டது. அப்போதும் விமானம் ரன்வேயைத் தாண்டிச் சென்றதே விபத்துக்குக் காரணம் எனச் சொல்லப்பட்டது.

pilot
pilotTwitter

விபத்துகளைத் தடுப்பது எப்படி?

2010ம் ஆண்டு முதலே டேபிள் டாப் விமான நிலையங்களில் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. அனுபவம் வாய்ந்த ஓட்டுநர்களால் மட்டுமே இந்த நிலையங்களில் சரியாக தரையிறங்க முடியும். அனுபவம் வாய்ந்த விமானிகள் மட்டுமே டேபிள் டாப் ரன்வேயில் விபத்துகளைத் தடுக்கும் ஒரே கருவி.

Table Top Runway
காணாமல் போன விமானம் 37 ஆண்டுகளுக்கு பின் தரையிறங்கியதா? - டைம் ட்ராவல்
கோழிக்கோடு
கோழிக்கோடு Twitter


இந்தியாவிலுள்ள டேபிள் டாப் விமான நிலையங்கள்

கர்நாடகாவில் மங்களூர் விமான நிலையம் உள்ளது. இங்குக் கடந்த 2010ம் ஆண்டு விபத்து நடந்தது.

கேரளா மாநிலத்தில் கோழிக்கோடு விமான நிலையம் உள்ளது. இங்குக் கடந்த 2020ம் ஆண்டு விபத்து நடந்தது.

இவைத்தவிர, இமாச்சலப்பிரதேசத்தில் சிம்லா, சிக்கிம் மாநிலத்தில் பக்கியோங், மிசோரம் மாநிலத்தில் லெங்புய் ஆகிய இடங்களில் டேபிள் டாப் விமான நிலையங்கள் உள்ளது.

Table Top Runway
டெல்லி விமான நிலையம் : துபாயை பின்னுக்கு தள்ளிய இந்தியா - ஓர் சாதனை


முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com