இமாச்சல பிரதேசம் மாநிலத்தில் பார்வதி பள்ளத்தாக்கு அருகில் இருக்கிற்து கசோல். இதற்கு இந்தியாவின் டெல் அவிவ் என்ற பெயரும் உண்டு (டெல் அவிவ் இஸ்ரேலில் உள்ள நகரம்).
இமாச்சலில் இருக்கும் மற்றொரு கிராமமான தரம்கோட் மினி இஸ்ரேல் என்று அழைக்கப்படுகிறது. கடந்த சில தசாப்தங்களாக இஸ்ரேலில் இருந்து இங்கு பெருமளவில் சுற்றுலாப்பயணிகள் வந்து செல்கின்றனர்.
இஸ்ரேலில் குடிமக்கள் அனைவருக்கும் இரண்டு ஆண்டுகள் கட்டாய இராணுவ பயிற்சி வழங்கப்படுகிறது. இராணுவ பயிற்சியை முடிக்கும் இளைஞர்கள் நேராக கசோலுக்கு சுற்றுலா வருகின்றனர்.
இப்படி வரும் இளைஞர்கள் இங்கு தனி குழுவாக தங்குகின்றனர். உள்ளூர் மக்களுடன் பெரிதாக ஒட்டுவதில்லை. அதே வேளையில் கிராம மக்களுக்கும் இவர்களால் எந்த இடையூறும் கிடையாது.
இந்தியாவின் மிக அழகான கிராமங்களுள் ஒன்று குல்லு மாவட்டத்தில் உள்ள கசோல். இந்த இயற்கை வனப்பு மிக்க பகுதியில் மன அமைதிக்காக இஸ்ரேலியர்கள் வருவதாக கருதப்படுகிறது.
யூத மதத்தவர்கள் கூடும் சபாத் வீடு ஒன்றும் 10 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு கட்டப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது 500 இஸ்ரேலியகள் கசோலை சுற்றிப்பார்க்க வருகின்றனர்.
குல்லு மாவட்டத்தில் 1500க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் நிரந்தரமாக தங்கியுள்ளனர். இவர்கள் பனிக்காலத்தில் கோவா அல்லது வேறு பகுதிக்கு சென்றுவிட்டு கோடைக்காலத்தைக் கழிக்க கசோலுக்கு திரும்புகின்றனர்.
கசோலில் இருந்து 13 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது தரம்கோட். இது காடி மேய்ப்பர் இன மக்கள் வாழும் பகுதி.
இஸ்ரேலியர்கள் இங்கு அதிகம் வருவதனால் கஃபேக்கள், உணவகங்கள், யோகா மையங்கள் மற்றும் பரிசுக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன.
அதுமட்டுமல்லாமல் இங்குள்ள மக்களும் ஓரளவு ஹீப்ரூ பேசக் கற்றுக்கொண்டுள்ளனர். இங்கு அடையாளங்களும் பெயர் பலகைகளும் கூட ஹீப்ரூ மொழியில் எழுதப்பட்டிருக்கின்றன.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust