Maha Shivaratri : மகிமைகள் நிறைந்த மகா சிவராத்திரி - விரத காலம், பாராயணங்கள்

மகிழ்ச்சியும் மனநிம்மதியும் பெற, பாவங்கள் விலகி சோகங்கள் தீர்ந்திட, மகிமை நிறைந்த மகா சிவாராத்திரி நன் நாளில், ஈசனை வழிபட்டு நற்பேறு பெற்றிடுவோம்.
சிவன்

சிவன்

Twitter

Published on

சிவராத்திரி வழிபாடு செய்வதனால் கிட்டும் பலன்கள் பற்றி சாஸ்திரங்கள் பலவாறு புகழ்கின்றன. மாசி மாத தேய்பிறை சதுர்த்தசியான மகாசிவராத்திரி நள்ளிரவு பதினான்கு நாழிகையில் செய்யும் சிவ வழிபாடு கோடி பிரம்மஹத்தி தோஷங்களைக்கூட போக்குமளவு புனிதமானது.

விஷ்ணுவும் பிரம்மனும் “யார் பெரியவர்?” என்று போட்டியிட்டபோது, சிவன் ஜோதி வடிவாக அடிமுடி காணாதவனாக நின்ற காலமே சிவராத்திரி.

சிவ பெருமான் ஆலகால விஷத்தை உட்கொண்டதால் அவரின் உடல் மிகவும் வெப்பமாக மாறி விடுவதாக ஐதீகம். அந்த வெப்பத்தைத் தணிப்பதற்காகவே அவருக்குப் பல்வேறு வகையான பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்கிறோம்.

ஒருமுறை மகாசிவராத்திரி விரதமிருந்து, நான்கு காலபூஜையில் கலந்துகொண்டு, தங்களால் இயன்ற பொருளுதவி, தொண்டு செய்தால் பல்வேறு பலன் கிட்டுவதுடன் சிவனருளும் பெறலாம் என்று சிவாகமம் கூறுகிறது.

சிவலிங்கம்

சிவலிங்கம்

Twitter

2022 ல் சிவராத்திரி

ஒவ்வொரு வருடமும் மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தி அன்று மகா சிவராத்திரி விழா கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த வருடம் 2022 மார்ச் 1ம் தேதி அதிகாலை 2.51 மணி வரை திரியோதசி பின்பு சதுர்த்தி திதி வருவதால், மார்ச் 1ம் தேதி செவ்வாய்க் கிழமை அன்று நாள் முழுவதும் விரதமிருந்து, அன்றைய தினம் இரவில் தூங்காமல் கண் விழித்து சிவராத்திரி பூஜை மேற்கொண்டு, சிவ பெருமானுக்கு நடக்கும் அபிஷேக, அலங்கார, பூஜை ஆராதனைகளைக் கண்டு வாழ்வில் வளமும் நலமும் பெறலாம்.

சிறப்பு மிக்க, சிவராத்திரி விரதத்தைக் கடைப்பிடித்தே பாசுபதாஸ்திரம் பெற்றான் அர்ஜூனன். சிவராத்திரி விரதமிருந்து, அந்த மகிமையாலேயே, அம்பிகை இறைவனின் உடலில் சரிபாதியைப் பெற்றார். கண்ணப்ப நாயனார் தம் கண்களை சிவனாரின் திருமேனியில் இட்டு, தம் ஆத்மார்த்தமான,ஆழ்ந்த பக்தியால் முக்தி பெற்ற தினமும் சிவராத்திரியே. சிவபெருமான், மார்க்கண்டேயருக்காக, காலனை உதைத்து, காலகண்டேசுவரர் என்ற திருநாமம் பெற்றதும் சிவராத்திரி தினத்தன்றே.

மகா சிவராத்திரியும் மாத சிவராத்திரியும்

மாசி மாத மகாசிவராத்திரியைப்போல் ஒவ்வொரு மாதம் வரும் சிவராத்திரியும் போற்றப்படுகிறது.

சித்திரை மாத தேய்பிறை அஷ்டமி சிவராத்திரி உமாதேவியாலும். வைகாசி மாத வளர்பிறை அஷ்டமி சிவராத்திரி சூரியனாலும் வழிபடப்பட்டது. ஆனி மாத வளர்பிறை சதுர்த்தசி சிவராத்திரி ஈசானனாலும், ஆடி மாத தேய்பிறை சிவராத்திரி முருகனாலும் வழிபடப்பட்டது. ஆவணி மாத வளர்பிறை அஷ்டமி சிவராத்திரி சந்திரனாலும், புரட்டாசி மாத வளர்பிறை திரயோதசி சிவராத்திரி ஆதிசேஷனாலும், ஐப்பசி மாத வளர்பிறை துவாதசி சிவராத்திரி இந்திரனாலும் வழிபடப்பட்டது. தீபங்கள் சூழ்ந்த கார்த்திகை மாதத்தின் இரண்டு சப்தமி திதியும், தேய்பிறை அஷ்டமியும் சரஸ்வதியாலும், மகத்துவம் மிக்க

மார்கழி மாத இரண்டு மாத சிவராத்திரிகள் மற்றும் வளர்பிறை, தேய்பிறையில் வரும் சதுர்த்தசிகள் லட்சுமியாலும் வழிபடப்பட்டது. தை மாத வளர்பிறை திரிதியை நந்திதேவராலும், மாசி மாத வளர்பிறை சதுர்த்தசி சிவராத்திரி தேவர்களாலும், பங்குனி வளர்பிறை திரிதியை சிவராத்திரி குபேரனாலும் வழிபடப்பட்டது என்று லிங்கபுராணம் கூறுகிறது.

சிவன்

சிவன்

Twitter

விரத காலம்

முதல் கால பூஜை:

மார்ச் 1ஆம் தேதி மாலை 6.21 மணி முதல் இரவு 9.27 மணி வரை

இரண்டாம் கால பூஜை:

மார்ச் 1ஆம் இரவு 9.27 முதல் நள்ளிரவு 12.33 வரை

மூன்றாம் கால பூஜை:

மார்ச் 2ஆம் தேதி நள்ளிரவு 12:33 மணி முதல் 3.39 மணி வரை

நான்காம் கால பூஜை:

மார்ச் 2ஆம் காலை 3:39 முதல் 6:45 வரை

சிவராத்திரி விரதம் இருக்கும் அன்று, நாள் முவழுதும் எதுவும் சாப்பிடாமல் இருத்தல் நன்று. நாள் முவழுதும் உபவாசம் இருந்து மனதை சிவனின் மீது வைத்து, இரவு முழுவதும் தூங்காமல் கண் விழித்து சிவாலயங்களில் நடைபெறும் 4 ஜாம பூஜைகளிலும் பங்கேற்பது மிகச்சிறந்தது. இன்றைய ஒரு நாள் வழிபாடு ஆயிரம் நாள் சிவபூஜை செய்த பலனை அளிக்கும் என்பது அருளாளர்கள் வாக்கு. ஒரு ஜாமம் என்பது 3 மணி நேரம் ஆகும். நான்கு ஜாமப் பூஜைகள் சிவராத்திரி இரவில் நடைபெறும்; இதையே நான்கு காலப் பூஜை என்றும் அழைக்கின்றனர்;

சிவராத்திரி அன்று இரவு முழுவதும் கண் விழித்து சிவனை தரிசித்து வழிபாடு செய்ய முடியாவிட்டால் கூட, ‘லிங்கோற்பவ’ காலமாகிய இரவு 11.30 மணி முதல் 1மணி வரை உள்ள காலத்திலாவது சிவதரிசனம் செய்து வழிபடுவது சிறந்தது. இந்த நேரத்தில் தான் சிவன் ஜோதிலிங்கமாக தோன்றிய நேரமாகச் சொல்லப்படுகிறது.

சிவன்

சிவன்

Twitter

பாராயணங்கள்

மஹா சிவராத்திரி அன்று சிவபுராணம், கோளறு பதிகம், லிங்காஷ்டகம், பஞ்சாட்சர ஸ்தோத்திரம், நடராஜப் பத்து, பரமசிவன் ஸ்தோத்திரங்களைப் படிக்கலாம். பஞ்சாட்ச மந்திரம் உச்சரிப்பதால் மற்ற நாள்களில் செய்தவற்றை விட அதிக பலன் கொடுக்கக் கூடியது என்பது நிதர்சனமான உண்மை. தேவையற்ற பேச்சுக்களைத் தவிர்ப்பது நல்லது. அதுவே தேவையற்ற எண்ணங்களையும் தவிர்க்கும். வெறும் கண்விழித்தால் போதும் என்ற எண்ணத்தோடு, நண்பர்களோடு மொபைலில் அரட்டைகளோ, படங்கள் பார்ப்பதோ தவிர்க்க வேண்டும். ஒரு நாள் விரதமிருந்தால் அனைத்து பாவங்களும் போய் விடுமா? அனைத்து வரமும் கைகூடுமா என்றால், முடியும், கிடைக்கும் என்பதுதான் நம்பிக்கை. வருடத்தின் ஒரு நாள் தீபாவளிக்கு எடுத்த உடைகள் இன்றும் போதுமானதாக இருக்கிறது. ஒரு திருவிழாவிற்கு சென்ற போது வாங்கிய பொருட்கள் காலத்திற்கும் உதவியாய் இருக்கிறது. ஒரு நாள் வாங்கிய மொபைல் போன் தான், இன்றும் பயன்பாட்டில் இருக்கிறது. அப்படி, சிறப்பான ஒரு நாளில் செய்திடும் செயல்கள் எத்தகு நிறைவான பலன்களைக் கொடுக்கிறதோ, அப்படித்தான் சிறப்பான ஒரு நாளில் செய்திடும் வழிபாடே. வாங்கிய பொருட்களை மற்ற நாட்களில் சரியாக, கவனமாகப் படுத்துவது போல், பெற்ற வரத்தினை மகிழ்வாக அனுபவித்து வாழ்ந்திட, அறமான செயல்களை, மனசாட்சிக்கு விரோதமில்லாத செயல்களைச் செய்வதன் மூலம், அதைத் தக்க வைத்துக்கொள்ள முடியும். இயன்றவர்களுக்கு உதவிகள் செய்வதும், நிம்மதி, ஆரோக்கியம், பொருளாதார வளர்ச்சிகொடுப்பது, தான தர்மங்கள் செய்வது முதலியவற்றை, அவரவர் வசதிக்கேற்ப தொடர்ந்து கடைப்பிடித்து வருவதன் மூலம், அறம் நிலைக்கும். மகிழ்ச்சியும் நிம்மதியும் நீடிக்கும்.

சிவன்

தஞ்சை மாணவி தற்கொலை விவகாரம் : பிணையில் வெளியான சகாய மேரியை வரவேற்ற திமுக எம்.எல்.ஏ

மகாசிவராத்திரியன்று முறையாக விரதம் இருந்து, இரவு முழுவதும் கண்விழித்து இறைவனின் நாமத்தைச் சொல்லி வழிபடுவதால் அளவற்ற நன்மை கிடைக்கும். சிவராத்திரி வழிபாட்டினால் நீண்ட ஆயுள், நிறைந்த செல்வம், நல்ல மக்கட்பேறு பெறலாம். தீரா நோய்கள் நீங்கும்.

விரதத்தைச் சாஸ்திர சம்பிரதாயங்களில் கூறியுள்ளபடி அனுஷ்டிக்க முடியாதவர்கள், மனதில் தூய எண்ணத்துடன் , இன்று ஒரு நாள் சிவ சிந்தனையிலிருந்தால் கூட போதும்., இரவில் கண் விழித்து விரதம் இருக்க முடியாதவர்கள், பகல் முழுவதும் உபவாசம் இருந்து, மாலை தங்கள் வீட்டின் அருகில் உள்ள சிவாலயம் சென்று, முதல் கால பூஜையாவது கண்டு ஈசனருளை பெறலாம். இயன்றவர்கள் நிச்சயம் 4 கால பூஜைகள் செய்வது சிறந்தது.

சிவன்

சிவன்

Twitter

மந்திரங்கள், தேவாரம் திருவாசகம் சொல்ல தெரிய வில்லையா? இதோ வழி

சிவ சிவ என்கிலர் தீ வினை யாளர்

சிவ சிவ என்றிடத் தீவினை மாளும்

சிவ சிவ என்றிடத் தேவரும் ஆவர்

சிவ சிவ என்னச் சிவகதி தானே.

மிக எளிமையான ஆழமான அர்த்தமுள்ள, திருமூலரின் திருமந்திரம்.

9 முறை “சிவ” என்ற மகிமை கொண்ட மந்திர வார்த்தை இதில் உள்ளது. 12 முறை சொன்னால் 108 முறை “சிவ” என உச்சரித்ததாகும். மூன்று நிமிடங்களிலேயே 108 முறை சிவ நாமம் சொன்ன பலன் கிடைக்கும். அர்த்தம் தெரிந்து கொண்டு சொன்னால் இன்னும் மகிழ்வுதானே. எளிய தமிழ்தான். அதையும் தெரிந்து கொள்வோம்.

"சிவ சிவ என்கிலர் தீ வினை யாளர்"

முப்பிறவியின் தீய வினை செய்து இந்தப் பிறப்பிலும் பாவங்கள் செய்து வருபவர்கள் நாவில் சிவ சிவ என்ற சொல் வராது.

"சிவ சிவ என்றிடத் தீவினை மாளும்"

அப்படிப் பாவச் செயல்கள் செய்து வருபவர், மனம் திருந்தி, வருந்தி, சிவ சிவ என்று சொல்லிவிட்டால், அவர்கள் தீய வினைகள் எரிந்து விடும். மேலும் அவர்களைப் பாவங்கள் செய்யாமல் தடுக்கும்.

"சிவ சிவ என்றிடத் தேவரும் ஆவர்"

மேலும் பாவங்கள் செய்ய விடாமல், நன்மைகள் பல புரியச் செய்து, தேவர்கள் ஆவார்கள்.

"சிவ சிவ என்னச் சிவகதி தானே"

தேவர்கள் ஆன பிறகு, சிவ சிவ என்றே பேரானந்தத்தில் சிவத்தில் ஆன்மா ஒன்றாகக் கலந்துவிடும்.

மகிழ்ச்சியும் மனநிம்மதியும் பெற, பாவங்கள் விலகி சோகங்கள் தீர்ந்திட, மகிமை நிறைந்த மகா சிவாராத்திரி நன் நாளில், ஈசனை வழிபட்டு நற்பேறு பெற்றிடுவோம்.

சிவன்

மாசி மாதத்தின் மகத்துவம் : எவ்வளவு முக்கியத்துவம் தெரியுமா?

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com