மாசிமகம்

மாசிமகம்

Twitter

மாசி மாதத்தின் மகத்துவம் : எவ்வளவு முக்கியத்துவம் தெரியுமா?

மகத்துவங்கள் நிறைந்த இம்மாதத்தில் சிவராத்திரி, மாசிமகம், ஹோலிப்பண்டிகை போன்ற விழாக்களும், ஜயா ஏகாதசி, ஷட்திலா ஏகாதசி, மகாவிஷ்ணு வழிபாடு, மாசி சங்கடஹர சதுர்த்தி வழிபாடு, காரடையான நோன்பு போன்ற வழிபாட்டு முறைகளும், நீர்நிலைகளில் புனித நீராடலும் மேற்கொள்ளப்படுகின்றன.
Published on

மாசிமாதத்தில் பௌர்ணமியை ஒட்டி வரும் மக நட்சத்திரத்தில் மக்கள் கடல், ஆறு, நதி உள்ளிட்ட நீர்நிலைகளில் புனித நீராடுவர். அது மாசிமகம் என்றும், 12 வருடத்திற்கு ஒரு முறை மகாமகம் எனவும் கொண்டாடப்படுகிறது. கோவில்களில் உற்சவ மூர்த்தியுடன் மக்களும் நீர்நிலைகளில் மூழ்கி வழிபாடு நடத்தும் நிகழ்ச்சியான தீர்த்தவாரியும் மிகச் சிறப்பாக நடைபெறும். புனித நீராட்டு வழிபாடு மூலம் மக்கள் தங்களின் பாவங்கள் நீங்கியும், வாழ்வின் எல்லா வளங்களும் கிடைக்கப்பெற வேண்டி நீராடி வழிபடுவார்கள். இன்று மாசி மகம். இந்த 2022வது வருடம், 17/02/2022 மாசி 5ம் தேதி, பௌர்ணமி முடிந்து பிரதமை திதியில் மாசிமகம் வருகிறது.

மகத்துவங்கள் நிறைந்த இம்மாதத்தில் சிவராத்திரி, மாசிமகம், ஹோலிப்பண்டிகை போன்ற விழாக்களும், ஜயா ஏகாதசி, ஷட்திலா ஏகாதசி, மகாவிஷ்ணு வழிபாடு, மாசி சங்கடஹர சதுர்த்தி வழிபாடு, காரடையான நோன்பு போன்ற வழிபாட்டு முறைகளும், நீர்நிலைகளில் புனித நீராடலும் மேற்கொள்ளப்படுகின்றன. பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பகோணத்தில் மகாமகத்திருவிழா வெகு சிறப்பாக நடைபெறுவது நாம் அனைவரும் அறிந்ததே. வட இந்தியாவில் கும்பமேளா என்ற பெயரில் நடைபெறுகிறது. தை அமாவாசை போன்ற நாட்களில் மட்டுமல்லாது, மாசி மகம் அன்றும் முன்னோர்களுக்கு சிரார்த்தம் அளிப்பார்கள்.

மாசிமகம்

தஞ்சையில் அவசியம் பார்க்க வேண்டிய 10 இடங்கள்

மாசிமகம்

மாசிமகம்

Twitter

தீர்த்தமும் பலனும்

மகாமகக் குளத்தில் இருக்கும் ஒவ்வொரு தீர்த்தமும் ஒவ்வொரு பலன் தர வல்லது.

1. இந்திர தீர்த்தம் - மோட்சம் அளிக்கும்.

2. அக்னி தீர்த்தம்- பிரம்மஹத்தி தோஷம் நீங்கும்.

3. யமதீர்த்தம் - மரண பயம் போக்கும்.

4. நிருதி தீர்த்தம் - பேய், பூதம் போன்ற தேவையற்ற பயங்கள் நீங்கும்.

5. வருண தீர்த்தம் - ஆயுள் விருத்தி உண்டாகும்.

6. குபேர தீர்த்தம் - சகல செல்வங்களும் உண்டாகும்.

7. வாயு தீர்த்தம் - நோய்கள் அகலும்.

8. ஈசான தீர்த்தம் - சிவனடி சேர்க்கும்.

9. பிரம்ம தீர்த்தம் - இறந்த முன்னோரைச் சாந்தப்படுத்தும்.

10. கங்கை தீர்த்தம் - கயிலைப் பதவி அளிக்கும்.

11. யமுனை தீர்த்தம் - பொருள் சேர்க்கை உண்டாகும்.

12. சரஸ்வதி தீர்த்தம் - ஞானம் உண்டாகும்.

13. நர்மதை தீர்த்தம் - உடல் வலிமை உண்டாகும்.

14. கோதாவரி தீர்த்தம் - எண்ணியது நடக்கும்.

15. காவிரி தீர்த்தம் - புத்தியை மேம்படுத்தும்.

16. குமரி தீர்த்தம் - வளர்ப்புப் பிராணிகளுக்குப் பலன்களைக் கொடுக்கும்.

17. பயோஷ்னி தீர்த்தம் - கோலாகலம் அளிக்கும்.

18. சரயு தீர்த்தம் - மனக் கவலை தீர்க்கும்.

19. தேவ தீர்த்தம் - சகல பாவங்களும் போக்கி, தேவேந்திர பதவி தரும்.

20. அறுபத்தாறு கோடி தீர்த்தம் - துன்பம் நீங்கி இன்பம் கூடும்.

மாசிமகம்

நெல்லையில் அவசியம் பார்க்க வேண்டிய 12 இடங்கள் | Visual Stories

மாசிமகம்

மாசிமகம்

Twitter

பல்லாயிரம் ஆண்டுகள் முன்பே மாசிமகம்

சித்திரை திருவிழா எத்தனை முக்கியத்துவம் வாய்ந்ததோ, அதே போல மாசித்திருவிழாக்களும் முக்கியமாக மாசி மக திருவிழாக்கள் பற்றியும் பல நூற்றாண்டுகளுக்கு முன்பாகவே கொண்டாடப்படு வருகிறது. சங்ககால இலக்கியங்களிலும், செப்பேடுகளிலும், கல்வெட்டுகளிலும் கூட, மாசிமக விழா சிறப்பாக நடைபெற்றதற்கான ஆதாரங்கள் காணப்படுகின்றன.

மதுரைக் காஞ்சியின் ஆசிரியர் மாங்குக்டு மருவானார் ஏழாம் நாள் இறுதியில் நீராடல் விழா அமைந்தது பற்றிக் குறிப்பிட்டுள்ளார். திருஞானசம்பந்தர் தன்னுடைய மயிலாப்பூர் பதிகத்தில் கபாலீஸ்வரரின் மாசி மகக் கடலாடு விழாவைப் பற்றிக் கூறியுள்ளார்.பல நூற்றாண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட சங்க கால பாடல்களில் கூட மாசிமகம் பற்றிய சிறப்புகள் உள்ளன. சங்க கால பாடலான புறநானூற்றில் சங்ககால பாண்டிய மன்னன் முந்நீர் விழாவின் நெடியோன் என்று அழைக்கப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. கோக்கரு நந்தடக்கன் எனும் மன்னன் 9ம் நூற்றாண்டில் திருமாலுக்கு7 நாள் திருவிழா எடுக்கப்பட்டது குறித்தும், பங்குனி விசாகம் ஆறாடுவது குறித்தும் செப்பேட்டில் குறிப்பிட்டுள்ளார்.

மாசிமகம்

கும்பாபிஷேகம் நடக்கும் விருத்தாச்சலம் விருத்தகிரீஸ்வரர் ஆலயம் சிறப்புகள்

மாசிமகம்

மாசிமகம்

Twitter

திருமணத்திற்கு தை மாதமா? மாசிமாதமா?

தை பிறந்தால் வழி பிறப்பது போல மாசி பிறந்தாலே மகத்தான வாழ்வு அமையும் என்பதும் உண்மை. மாசி மாதத்தில், சக்தி சிவத்தோடு ஐக்கியமாவதால் இம்மாதத்தில் திருமணம் நடத்தப் பெற்ற தம்பதியர்கள் நீண்ட ஆயுளோடு நிறைந்த திருமண வாழ்வினைப் பெறுவர்.மாசிக் கயிறு பாசி படியும் என்ற பழமொழி இதனையே உணர்த்துகிறது. திருமணமான பெண்கள் இம்மாதத்தில் தாலிக் கயிற்றினை மாற்றிக் கொள்கின்றனர். அது மட்டுமில்லாமல் மாசி மாதத்தில் புதுமனைப் புகுவிழாவினை மேற்கொண்டால், அந்த வீட்டில் வசந்தம் வீசும், குடும்ப ஒற்றுமையும் மகிழ்வும் நிறையும் என்பது நம்பிக்கை.

மாசி மாதத்தில் அவதரித்தவர்கள்

அறுபத்து மூவர்களில், காரி நாயனார், எறிபத்தநாயனார், கோசெங்கட்சோழ நாயனார் ஆகியோர்களின் குருபூஜை இம்மாதத்தில் நடைபெறுகிறது.

பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான குலசேகர ஆழ்வார் இம்மாதத்தில் புனர்பூச நட்சத்திரத்தில் அவதரித்தார்.

அதுமட்டுமின்றி, தந்தைக்கு முருகன் மந்திர உபதேசம் செய்த நாளும் மாசிமகமே. வராக அவதாரம் எடுத்து பெருமாள் உலகைக்காத்ததும் இந்த மாசி மகத்தன்றே. சிறப்புகள் வாய்ந்த இந்த மாசிமகத்திரு நாள் அன்று, புனித நீராடியும், முன்னோர்களை வழிபட்டும், இறைவனைக் கொண்டாடியும், இயன்றோருக்கு உதவியும் வாழ்வில் நலமும் வளமும் பெறுவோம்.

logo
Newssense
newssense.vikatan.com