மாயோங் : மாயங்களின் தலை நகருக்கு சுற்றுலா செல்லத் தயாரா?

மயோங் கிராமத்தில் இருக்கும் மக்கள் ஆயுர்வேத மருத்துவத்தில் கைதேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. இது ஒருபக்கம் இருந்தாலும் அவர்களின் மூடநம்பிக்கைகள் இன்னொருபக்கம் செழித்திருக்கின்றன.
Black Magic
Black MagicTwitter
Published on

அசாம் மாநிலத்தில் பிரம்மபுத்ரா நதிக்கரையில் இருக்கிறது மயோங் கிராமம். இது இந்தியாவின் மந்திரவாத தலைநகரம் என அழைக்கப்படுகிறது.

இங்கு வசிக்கும் மக்கள் இன்றும் பில்லி சூனியம், ஏவல் உள்ளிட்ட பல மூட நம்பிக்கைகளைப் பயிற்சி செய்து வருகின்றனர். இங்குப் பல நரபலி கொடுக்கும் கருவிகள், நீளமான வாள் முதலிய பொருட்கள் கிடைத்திருக்கின்றன. இவ்வளவு பயங்கரமான மயோங் நகருக்கும் பல சுற்றுலாப் பயணிகள் வந்தவண்ணம் இருப்பது ஏன் தெரியுமா?

Black Magic

mayong
mayongTravel

மயோங் கிராமத்தில் இருக்கும் மக்கள் ஆயுர்வேத மருத்துவத்தில் கைதேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. இது ஒருபக்கம் இருந்தாலும் அவர்களின் மூடநம்பிக்கைகள் இன்னொருபக்கம் செழித்திருக்கின்றன. ஒரு மந்திரத்தை ஓதிய படி மரத்தை வெட்டினால் தூரத்திலிருக்கும் ஒருத்தருக்கு ஏற்பட்டிருக்கும் நோயைக் கூட சரி செய்ய முடியும் என்பது அந்த மக்களின் நம்பிக்கை. இது கிட்டதட்ட பில்லிசூனியத்தைப் போன்றது. ஆனால் இவர்கள் மாயாஜாலங்களை நல்லவற்றுக்குப் பயன்படுத்துவதாகக் கூறுகின்றனர்.


இந்த மாயாஜாலங்கள் தலைமுறை தலைமுறையாக அங்குள்ள மக்களுக்குக் கற்றுக்கொடுக்கப்பட்டு வருகிறது. பஞ்சாப், ஹரியானா, மேற்கு வங்கம் மற்றும் அவை சுற்றியுள்ள இடங்களிலிருந்து மக்கள் சூனியம் கற்றுக்கொள்ள மயோங்கிற்கு வருகிறார்கள்.

Black Magic
அட்வென்சர் ஹனிமூன் செல்ல வேண்டுமா? இந்த காடுகளை ட்ரை பண்ணுங்க | Travel

மயோங்கை சுற்றியிருக்கும் மர்ம கதைகள்

மயோங் மற்றும் அதனைச் சுற்றியிருக்கும் கிராமங்களில் மனிதர்கள் காற்றோடு காற்றாகக் கலப்பது குறித்த கதைகள் பேசப்படுகின்றன. சூரா பெஸ் எனும் மந்திரவாதியின் லூகி மந்திரத்தை உச்சரிப்பதன் மூலம் காற்றோடு காற்றாக மாறிவிடலாம் என நம்புகிறார்கள் மயோங் மக்கள். மனிதர்கள் மந்திரவாதத்தால் வேறொரு விலங்காக மாறுவது குறித்தும், மாந்திரீகத்தால் குணப்படுத்தப்படும் நோய்கள் குறித்தும் பேசுகிறார்கள்.

Black Magic
Travel : இயற்கை எழில் கொஞ்சும் தமிழகத்தின் 5 சுற்றுலா தலங்கள் - இவற்றைத் தெரியுமா?
ஏடு
ஏடுTwitter

மகாபாரதத்திலும் மயோங் கிராமம் குறிப்பிடப்பட்டிருக்கிறது. கசாரி இராஜ்யத்தின் தலைமையாக இருந்த கடோத்கஜா இந்த இடத்திலிருந்தே மந்திர சக்திகளைப் பெற்று, பின்னர் மகாபாரதப் போரில் பங்கேற்றதாகக் கூறப்படுகிறது.

சுற்றுலாப் பயணிகள்

இவற்றையெல்லாம் கடந்து சுற்றுலாப்பயணிகள் இங்கு அதிகமாக வருவதற்குக் காரணம் பொபிதோரா சரணாலயம் தான். இந்த சரணாலயத்தில் இந்திய யானைகளைக் காணலாம். அற்புதமான காண்டாமிருகங்கள் இங்கு வசிக்கின்றன. மயோங் இந்த காட்டுப்பகுதியை ஒட்டியிருப்பது கூடுதல் சிறப்பாக அமைகிறது.

Black Magic
செங்கிஸ்கான் கல்லறை : உலகை நடுங்க வைத்த ஒரு மர்ம வரலாறு - அட்டகாச தகவல்

அத்துடன் மயோங் அருங்காட்சியகம் அனைவரும் பார்க்க வேண்டிய ஒரு இடம். அந்த மக்களின் கலாச்சாரம், பாரம்பரியம் முன்னோர்களை அங்கு அறிந்துகொள்ளலாம்.

2002 -ல் திறந்து வைக்கப்பட்ட அந்த அருங்காட்சியகத்தில் சூனியம் மற்றும் ஆயுர்வேதம் பற்றிய புத்தகங்கள் உட்பட ஏராளமான தொல்பொருள் நினைவுச்சின்னங்கள் மற்றும் கலைப்பொருட்கள் இருக்கின்றன.

Black Magic
செங்கிஸ்கான் கல்லறை : உலகை நடுங்க வைத்த ஒரு மர்ம வரலாறு - அட்டகாச தகவல்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com