மும்பையை பாதுகாக்கும் ’மும்பா தேவி’ கோயில் பற்றி தெரியுமா?

இந்த கோயில் அதன் மத முக்கியத்துவத்திற்கு அப்பால், ஒரு பிரபலமான சுற்றுலா தலமாக உள்ளது. மும்பையின் வரலாற்று மற்றும் கலாச்சார அடையாளங்களை ஆராய பார்வையாளர்களை ஈர்க்கிறது.
Mumba Devi Temple, the guardian of Mumbai: Interesting facts
Mumba Devi Temple, the guardian of Mumbai: Interesting factsTwitter

மும்பையின் மையப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மும்பா தேவி கோயில் நகரின் முக்கிய மத ஈர்ப்புகளில் ஒன்றாகும். மும்பையின் பாதுகாவலர் என்றும் அழைக்கப்படும் இந்த புனித தலம் பல புராணக் கதைகளை கொண்டுள்ளது.

மும்பா தேவி கோயில் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களைப் பார்ப்போம்.

மும்பா தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த கோவில் 16 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. மும்பை அதன் பெயர் மும்பா தேவியிலிருந்து பெறப்பட்டதாக கருதப்படுகிறது. "மும்பை" என்பது "மும்பா" தெய்வத்தின் மாறுபாடு ஆகும். இதற்கு முன்பு மும்பை பம்பாய் என்று அழைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த கோயிலின் கட்டிடக்கலை, சிற்பங்களுடன் கூடிய பாரம்பரிய இந்து கோயில் வடிவமைப்பை தழுவி இருக்கிறது. தனித்துவமான கருங்கல்லால் வடிவமைக்கப்பட்டுள்ள மும்பா தேவி சிலை, ஆபரணங்கள் மற்றும் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

ஆண்டு முழுவதும், இந்த கோயில் கொண்டாட்டங்களுடன் உயிர்ப்பிக்கிறது. குறிப்பாக நவராத்திரியின் போது, ஒன்பது இரவுகள் திருவிழா நடைபெறுகிறது. இசை, நடனம் என திருவிழா களைக்கட்டுகிறது.

இந்த கோயில் அதன் மத முக்கியத்துவத்திற்கு அப்பால், ஒரு பிரபலமான சுற்றுலா தலமாக உள்ளது. மும்பையின் வரலாற்று மற்றும் கலாச்சார அடையாளங்களை ஆராய பார்வையாளர்களை ஈர்க்கிறது. பரபரப்பான நிலப்பரப்புக்கு மத்தியில் கோவிலின் அழகால் சுற்றுலாப் பயணிகள் ஈர்க்கப்படுகிறார்கள்.

Mumba Devi Temple, the guardian of Mumbai: Interesting facts
தினமும் ஒரு லட்சம் பேருக்கு இலவசமாக உணவு வழங்கும் இந்திய கோயில் - எங்கு இருக்கிறது?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com