திருநெல்வேலி முதல் திருவனந்தபுரம் வரை - வியப்பளிக்கும் 8 இந்தியக் கோவில்கள்

இந்தியர்களின் கட்டடக்கலை திறமைகள் பண்டைய கோவில்களிலே பெரும்பாலும் வெளிப்பட்டிருக்கும். அவற்றில் சில கோவில்கள் பல மர்மங்களை தங்களுக்குள் புதைத்து வைத்திருக்கும். அப்படிப்பட்ட ஆச்சரியமளிக்கும் கோவில்களை இங்குக் காணலாம்.
இந்தியக் கோவில்கள்
இந்தியக் கோவில்கள்Twitter

காமக்யா கோவில் (Kamakhya Temple)

அசாமில் உள்ள கௌகாத்தி நகரில் `நீல் பர்வதம்' என்னும் மலைமீது அமைந்திருக்கிறது காமாக்யா கோயில். சக்திதேவியின் சக்தி பீடங்களில் மிகவும் முக்கியமான தலம் இது. காமக்யா கோயில் (Kamakhya Temple) மிகவும் வித்தியாசமாக பெண் உறுப்பை கடவுளாக வணங்கும் அதிசயிக்கத்தக்க சிறப்பு வாய்ந்தது.

வருடத்தில் மூன்று நாட்கள் அம்மன் மாதவிலக்கு அடைவதாக கூறி மூன்று நாட்கள் கோயிலை மூடி வைக்கப்படும் வழக்கம் இங்கு உள்ளது.

காமக்யா கோவில் (Kamakhya Temple)
காமக்யா கோவில் (Kamakhya Temple) Twitter

தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் (Brihadishvara Temple)

தஞ்சைப் பெரியகோயில் கட்டடக்கலை, சிற்பக்கலை, ஓவியக் கலை என்று பல்வேறு சிறப்புகளைக் கொண்டிருக்கிறது. 216 அடி உயரம் கொண்ட விமானக் கோபுரம் மற்றும் அதன் கட்டுமான அமைப்புகளை உலகப் பொறியியல் வல்லுநர்கள் பார்த்து வியக்கிறார்கள்.

மரம், இரும்பு போன்ற பொருள்களைப் பயன்படுத்தாமல் முழுக்க முழுக்கக் கற்களை மட்டுமே கொண்டு கட்டப்பட்டது இந்தக் கோயில். இவை எல்லாவற்றையும் கடந்து கோபுர விமானத்தின் உட்புறம், ஒரு டம்ளரைக் கவிழ்த்து வைத்திருப்பது போன்ற உள்கூடாகக் காட்சியளிக்கும். கற்களை ஒன்றோடு இணைத்து, நுட்பமான முறையில் கட்டப்பட்டிருக்கிறது இக்கோயில். நுழைவு வாயிலில் உள்ள 45 அடி உயரம் கொண்ட நிலைக்கால்கள் ஒரே கல்லால் கட்டப்பட்டவை.

தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் (Brihadishvara Temple)
தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் (Brihadishvara Temple) Canva

ஸ்தம்பேஷ்வர் மகாதேவ் ஆலயம் அல்லது மறையும் கோவில்

குஜராத்தில் இருக்கும் இந்த கோவில் கடலில் அலைகள் அதிகரிக்கும் போது முழுவதுமாக மறைந்து விடும். சிவாலயமான இந்த கோயில் ஒருபுறம் அரேபிய கடலையும், மறுபுறம் காம்பே விரிகுடாவையும் கொண்டுள்ளதால், குறைந்த அலைகளின் போது மட்டுமே இந்த கோயிலுக்கு பக்தர்கள் வருகை தர முடியும், மேலும் அதிக அலைகளின் போது கோயில் கடலில் மூழ்கிவிடும்.

மறைந்து தோன்றுவதால் இது மறையும் கோவில் எனப்படுகிறது.

ஸ்தம்பேஷ்வர் மகாதேவ் ஆலயம் அல்லது மறையும் கோவில்
ஸ்தம்பேஷ்வர் மகாதேவ் ஆலயம் அல்லது மறையும் கோவில் Twitter

வாரணாசி சிவன் கோவில்

உத்தரபிரதேசத்தின் வாரணாசியில் மணிகர்னிகா காட் என்ற இடத்தில் அமைந்துள்ள ரத்னேஷ்வர் கோயில் தரையிலிருந்து 9 டிகிரி சாய்ந்து காணப்படுகிறது. அத்துடன் இந்த கோவிலின் சாய்ந்த பகுதி கங்கையில் மூழ்கியிருக்கிறது. கோவிலால் அதன் சொந்த எடையைத் தாங்க முடியாமல் இப்படி ஆகியிருக்கும் எனக் கூறப்படுகிறது.

வாரணாசி சிவன் கோவில்
வாரணாசி சிவன் கோவில் Canva
இந்தியக் கோவில்கள்
ஐராதீஸ்வரர் கோவில் : 'காட்சிப்பிழை சிற்பம்' 900 ஆண்டுகளுக்கு முன் சோழர்கள் கட்டிய அதிசயம்

எல்லோரா கைலாசநாதர் கோவில்

பாறையை குடைந்து உருவாக்கப்பட்ட இந்து கோவில்களில் இது தான் பெரியது. நவீன கருவிகள் இல்லாமல் இந்த அளவு நேர்த்தியாக பாறைகளை செதுக்க முடியாது எனக் கூறப்படுகிறது. ஆனால் அந்தக் காலத்திலேயே இதனை மிகச் சிறப்பாக செதுக்கியிருக்கின்றனர்.

எல்லோரா கைலாசநாதர் கோவில்
எல்லோரா கைலாசநாதர் கோவில் Canva

பத்மநாபசுவாமி கோவில்

கேரளாவின் திருவனந்த புரத்தில் இருக்கிறது இந்த கோவில். இந்தியாவில் பணக்கார கோவில்களில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது. கடந்த 2011ம் ஆண்டு இங்கிருந்து பல பில்லியன் டாலர் மதிப்புள்ள புதையல்கள் கிடைத்தன.

நாம் மலைத்துப் போகும் அளவுக்குப் பொக்கிஷங்கள் இருப்பதாக கருதப்படும் பாதாள சுரங்கங்கள் அங்கு உள்ளன. அந்த கோவிலில் A முதல் F வரை 6 ரகசிய அறைகள் உள்ளன. அவற்றில் 5 திறக்கப்பட்டதில் 1 லட்சம் கோடி அளவிலான பொருட்கள் கிடைத்ததாக கூறப்படுகிறது.

அந்த கோயில் பாதாள சுரங்கத்தில் உள்ள பி அறையில் இதனை விட பல மடங்கு பொக்கிஷங்கள் இருக்கும் என்று நம்பப்படுகிறது.

அந்த பி அறையை தான் திறக்கக் கூடாது என 2011ஆம் ஆண்டு வழங்கிய தீர்ப்பில் குறிப்பிட்டு இருந்தது உச்ச நீதிமன்றம் .

பத்மநாபசுவாமி கோவில்
பத்மநாபசுவாமி கோவில் Twitter
இந்தியக் கோவில்கள்
தாஜ் மஹால் முதல் குதுப்மினார் வரை - சர்ச்சையாகும் முகலாயர் கால நினைவிடங்கள்

வீரபத்ரர் கோவில்

ஆந்திராவில் உள்ள இந்த கோவில் அதன் கட்டிடக்கலைக்காக பெயர்பெற்றது. இந்த கோவிலில் நடனமாடும் அரங்கில் 70 தூண்கள் உள்ளது. அதில் ஒரு தூண் மட்டும் அந்தரத்தில் தொங்குவது தான் இந்த கோவிலின் சிறப்பு. அதாவது தரையுடன் தொடர்பில்லாமல் இருக்கும் இந்த தூண் கூரையில் மட்டும் ஒட்டியிருக்கும். இது ஏன் என இதுவரையில் கண்டறியப்படவில்லை.

வீரபத்ரர் கோவில்
வீரபத்ரர் கோவில் Twitter

நெல்லையப்பர் கோவில்

தமிழகத்திலிருக்கும் பழமையான சிவாலயங்களில் ஒன்று திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில். இங்கு இருக்கும் இசைத்தூண்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ஒலி ஏற்படுத்தக்கூடியவை.

Musical Pillar
Musical PillarCanva
இந்தியக் கோவில்கள்
எலும்புகூடுகளின் ஏரி டு இரட்டையர் கிராமம் - இந்தியாவின் மர்ம இடங்களுக்கு செல்ல ரெடியா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com