ஆடி வெள்ளியின் சிறப்புகள் என்ன? வழிபடவேண்டிய அம்மன் கோயில்கள் என்ன?

ஆடிக்கூழை தேடிக்குடி என்று சொல்வார்கள். நிச்சயம் இன்றைய நாளில் தேடிக்குடிப்பது மட்டுமில்லாமல் கொடுக்கவும் செய்வோம். பெறுவதிலும் கொடுப்பதில் கிடைக்கும் பேரானந்தம் உணர்வீர்கள். பலருக்கும் நோய் வராமல் காத்த புண்ணியமும் வந்து சேரும்
அம்மன்
அம்மன்canva

அருள் தரும் ஆடி வெள்ளி

ஆடி அமாவாசை, ஆடிப்பூரம், நாக பஞ்சமி, ஆடிப்பெருக்கு, வரலக்ஷ்மி விரதம், ஆடித்தபசு, ஹயக்ரீவர் ஜெயந்தி, மகா சங்கட ஹர சதுர்த்தி, கோகுலாஷ்டமி மற்றும் ஆடிக்கிருத்திகை இப்படி இன்னும் பல சிறப்புகள் கொண்டிருந்தாலும், ஆடிவெள்ளிக்கிழமை என்றாலே தனிச்சிறப்புதான்

ஆடி மாதத்தை சக்தி மாதம் என்றும் பண்டைய ஜோதிட நூல்கள் குறிப்பிட்டுள்ளன. எனவே இந்த மாதத்தில் விதை விதைப்பதை முன்னோர்கள் மேற்கொண்டனர். ஆடிப் பட்டம் தேடி விதை என்ற பழமொழி உருவானதற்கும் இதுவே காரணம். உத்தராயண காலத்தில் சூரியனிலிருந்து வெளிப்படும் கதிர்களை விட, தக்ஷணாயண காலத்தில் (ஆடி) சூரியனின் ஒளிக் கதிர்கள் விவசாயத்திற்கு உகந்ததாக இருக்கும்.

ஆடி மாதத்தில், சூரிய பகவான் கடக ராசியில் சஞ்சரிக்கிறார். கடக ராசி என்பது, சந்திர பகவானின் ஆட்சி வீடு. சிவ அம்சமான சூரியன், சக்தி அம்சமான சந்திரனின் ஆட்சி கிரகத்தில் சஞ்சாரம் செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் சந்திரனின் ஆளுமை கூடுகிறது. சிவனை விட சக்திக்கே வல்லமை அதிகமாக ஆடி மாதத்தில் போற்றப்படுவது இந்த காரணத்தினால்தான்.. ஆஷாட மாதம் என்றும் இந்த ஆடி மாதம் கூறப்படுகிறது. ஆடி மாதத்தில் அம்மனுக்கு உகந்த வேப்பிலை, எலுமிச்சம்பழம், கூழ் ஆகியவை அம்மனுக்கு அர்ப்பணிக்கப்படுகின்றன.

ஆடிக்கூழ் தேடிக் கொடு

இந்த பருவ நாட்களில் உஷ்ணம் கூடி இருக்கும். அம்மனுக்கு படைத்த ஆடிக்கூழை சாப்பிடும் பொழுது, கூழானது, உஷ்ணத்தைக் குறைத்து, உடலை சீரான வெப்ப நிலையில் வைக்கும். எலுமிச்சம்பழத்திற்கு நோய் எதிர்ப்பு சக்தி உண்டு என்பது நாம் அறிந்ததே. . வேப்பிலையைப்பற்றியும் அனைவரும் நன்கு அறிவோம். தீய சக்திகளையும், உடலுக்குக் கேடு விளைவிக்கும் பாக்டீரியாக்களையும் அழிக்கும் சக்தி அந்த மருத்துவ குணம் கொண்ட வேப்பிலையை அம்மனின் பூஜைக்கு பயன்படுத்துகிறார்கள்.

ஆடிக்கூழை தேடிக்குடி என்று சொல்வார்கள். நிச்சயம் இன்றைய நாளில் தேடிக்குடிப்பது மட்டுமில்லாமல் கொடுக்கவும் செய்வோம். பெறுவதிலும் கொடுப்பதில் கிடைக்கும் பேரானந்தம் உணர்வீர்கள். பலருக்கும் நோய் வராமல் காத்த புண்ணியமும் வந்து சேரும். இந்த மாதங்களில் வரும் வெள்ளிக்கிழமைகளில் பெண்கள் விரதம் இருந்து வீடுகளிலும், கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் செய்வார்கள்..

ஆடிவெள்ளியில் அற்புத அம்மன்கள்

எல்லா ஊர்களிலும் உள்ள பெண்தெய்வங்களும் சக்தி வாய்ந்ததாகவும் சிறப்பு வாய்ந்ததாகவும் இருந்தாலும், சில ஊர்களில் வித்தியாசமான வழிபாடும், குறிப்பிட்ட காரணத்திற்காக வேண்டியதை அருளும் சக்தியும் அமையப்பெற்றுள்ளது தனிச்சிறப்பாகும்.

* காரைக்குடி, முத்துப்பட்டினம், மீனாட்சிபுரம் என்ற ஊரில் முத்துமாரியம்மனுக்கு மக்கள் தக்காளிப்பழத்தைக் காணிக்கை ஆக்குவதை வழிபாடாக வைத்திருக்கின்றனர். தக்காளிப்பழச்சாற்றால் அம்மனுக்கு அபிஷேகம் செய்வது இங்கு சிறப்பானதாகும்

அம்மன்
கோனார்க் கோவில் சூரியக் கோயில் சிறப்புகள் என்ன? - அட்டகாச தகவல்கள்

* கரூர் மகா மாரியம்மனை வழிபட, நீண்ட நாள் வழக்கு தீரும், வியாபார சிக்கல்கள் நீக்கும். காணாமல் போன பொருட்கள் திரும்ப கிடைக்க அருள்கிறாள் கரூர் மகா மாரியம்மன்


* தேனி – பெரிய குளத்தில் உள்ள கெளமாரி அம்மனுக்கு பக்தர்கள், தங்களின் விவசாயம் செழிக்க.. தானியங்கள், காய்கறிகள், பழங்களை சமர்ப்பிப்பது வழக்கம்


* கோவையில் குடிகொண்டு அருளும் தண்டு மாரியம்மன், குடும்ப வளம் பெருகவும், தீராத நோய்களை தீர்த்தும், பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறாள்

* ஊட்டியில் மகாகாளி, மகாமாரி இருவரும் ஒரே கருவறையில் அருள்கின்றனர்

* கருத்து வேறுபாட்டால் பிரிந்த தம்பதியினர் அல்லது வீடுகளில் கணவன் மனைவிக்குள் சண்டை சச்சரவு வந்து கொண்டே இருந்தால், கும்பகோணம் அருகில் உள்ள திருச்சத்தி முற்றம் எனும் கோவிலில் உள்ள அம்மனை தரிசிக்க, நற்புரிதலும் அன்பும் ஏற்படும். இந்த ஆலயத்தில் அம்மன் சிவ லிங்கத்தை கட்டித்தழுவியபடி காட்சி தருகிறாள்.


* ஆடிமாதம் வெள்ளிக்கிழமை நெல்லையப்பர் காந்திமதி ஆலயத்தில் அம்மனுக்கு நடைபெறும் வளைகாப்பு வைபவம் மிகவும் சிறப்பானதாகும். அம்மனின் வயிற்றுப் பகுதியில் ஊரவைத்த பயறுவகைகளைக் கட்டுவார்கள். கர்ப்பிணி போலக் காட்சி தருவாள் அம்பிகை. இக்காட்சியினை கண்டு வணங்கிட, புத்திர பேறு கிடைக்கும் என்பது நம்பிக்கை.

* மயிலாப்பூரின் பேசும் தெய்வமாக விளங்கும் முண்டக கண்ணி அம்மனுக்கு ஆடி மாதம் முழுவதுமே திருவிழாதான். அம்மனுக்கு மேற்கூரையாகத் தென்னங்கீற்றால் ஆன கூரையே வேயப்பட்டு, இன்றும் எளியோர்க்கும் பெரியோர்க்கும் பாரபட்சமின்றி அருள்கிறாள் முண்டக கண்ணி அம்மன்.

* தீய சக்திகளால் பாதிக்கப்பட்டு மன நிலை சரியில்லாதவர்கள் திருவக்கரை வக்கிர காளி அம்மனை வழிபட, குணமாகி, வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ்வாங்கு வாழ்வர். ஆதித்திய சோழர், பராந்தக சோழர்,செம்பியன் மாதேவி, கண்டராதித்த சோழர், என பலரும் வழிபட்டு அம்மனின் அருள்பெற்று, பலநிவந்தம் அளித்து கட்டிய கோவில் இது

* வீரபாண்டி கெளமாரி அம்மன் தேனி மாவட்டம் முல்லை ஆறு பகுதியில் வீற்று அருள் பாலிக்கிறாள். மதுரை வீர பாண்டியனுக்கு கண் பார்வை அருளிய தேவி. கண்பார்வை சரியாக வேண்டுவோர் வீரபாண்டி கெளமாரி அம்மனை நாடி பார்வையும் வாழ்வும் சிறக்கும் என்பதில் ஐயமில்லை.

சிறப்பு வாய்ந்த ஆடி மாதத்தில் நாடிச்சென்றாலே, அருளைத் தேடி தருவாள் அம்பிகை. அகம் குளிர அம்பிகையை வழிபட்டு, அறமான தான தர்ம உதவிகளையும் செய்து, அருளும் நிறைவும் சூழ வாதிடுவோம். அடியெடுத்து வைப்போம் ஆடிவெள்ளியில் அம்மனை நோக்கி !

எழுத்து : ஆர்ஜேகோபாலன்

அம்மன்
பொன்னியின் செல்வன் : திருமழபாடி வைத்தியநாதசாமி கோயிலின் சிறப்புகள் என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com