பொன்னியின் செல்வன் : திருமழபாடி வைத்தியநாதசாமி கோயிலின் சிறப்புகள் என்ன?

செம்பியன் மாதேவியின் அரண்மனை முற்றத்திலும் சபா மண்டபத்திலும் சிற்பிகளின் கூட்டமும் தேவாரப் பாடகர்களின் கோஷ்டியும் எப்போதும் கூடியிருப்பது வழக்கம். தூரத் தேசங்களிலிருந்து சிவனடியார்களும் தமிழ்ப் புலவர்களும் வருவார்கள். அடிக்கடி வந்து பரிசில்கள் பெற்றுப் போவார்கள்.
திருமழபாடி வைத்தியநாதசாமி  கோயில்
திருமழபாடி வைத்தியநாதசாமி கோயில்Newssense

"சுந்தரமூர்த்தி சுவாமிகள் சோழ நாட்டு ஸ்தலங்களுக்கு யாத்திரை செய்து கொண்டிருந்த சமயத்தில் ஒரு நதியைக் கடக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. நதியைத் தாண்டி அதற்கும் அப்பால் செல்லத் தொடங்கினார். அப்போது ஒரு குரல் கணீரென்று கேட்டது, 'சுந்தரம்! என்னை மறந்தாயோ!'

சுந்தரமூர்த்தி திடுக்கிட்டார் அது தம்மை ஆட்கொண்ட இறைவனுடைய குரல் என்பதை உணர்ந்தார் சுந்தரமூர்த்தி.. பக்கத்தில் இருந்த சீடர்களைப் பார்த்துக் கேட்டார். "இங்கே அருகில் எங்கேயாவது சிவன் கோயில் இருக்கிறதா?" என்று வினவினார்

"ஆம், சுவாமி! அந்தக் கொன்னை மரங்களின் மறைவில் மழபாடி கிராமத்துச் சிவன் கோயில் இருக்கிறது!" என்று உடன் வந்த சீடர்கள் சொன்னார்கள்.

திருமழபாடி வைத்தியநாதசாமி  கோயில்
பொன்னியின் செல்வன் தெரியும் சாண்டில்யனின் இந்த 9 வரலாற்று காவியங்கள் தெரியுமா?

உடனே சுந்தரமூர்த்தி அந்த இடத்திற்குச் சென்றார்; பூத்துக் குலுங்கிய கொன்னை மரங்களின் மறைவில் ஒரு சிறிய கோவில் இருந்தது. சுந்தரமூர்த்தி அங்கே சென்று சுவாமி தரிசனம் செய்துவிட்டு மனமுருகிப் பாடினார். அன்றொரு நாள் தன்னைத் தடுத்தாட்கொண்டது போல், இன்றைக்குத் தன்னைக் கூப்பிட்டு அருள்புரிந்த கருணைத் திறனை வியந்துபோனார் சுந்தரமூர்த்தி சுவாமிகள்.

'சுவாமி! தங்களை நான் மறந்து விடுவேனா? என்ன கேள்வி கேட்டீர்கள்? தங்களை மறந்துவிட்டு வேறு யாரை நினைப்பேன்?' என்று கேள்விகள் மட்டும் மனதிற்குள் ஓடிக்கொண்டே இருந்தது.

பொன்னார் மேனியனே! புலித் தோலை அரைக்கசைத்து

மின்னார் செஞ்சடைமேல் மிளிர் கொன்றை அணிந்தவனே!

மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே!

என்னே உன்னையல்லால் இனி யாரை நினைக்கேனே?

என்று பாடினார்; தாயே! இன்னும் அந்தக் கோயில் சிறிய கோயிலாகக் கொன்னை மரங்களின் மறைவிலேயே இருக்கின்றது. அதற்குத்தான் உடனே திருப்பணி ஆரம்பிக்க வேண்டும் என்று கோருகிறோம்." என்று மழபாடிக்காரர் கூறினார்.

"அப்படியே ஆகட்டும்!" என்றார் செம்பியன் மாதேவி

மேற்கூறியது பொன்னியின் செல்வனில் வரும் பகுதி. எத்தனை சிறப்பு மிக்க ஆலயங்களைக் கட்டுவது மட்டுமல்லாமல், புதுப்பித்தும் பாதுகாத்தும் வந்திருக்கிறார்கள் என்பதற்கு இது ஒரு சான்று.

செம்பியன் மாதேவியின் அரண்மனை முற்றத்திலும் சபா மண்டபத்திலும் சிற்பிகளின் கூட்டமும் தேவாரப் பாடகர்களின் கோஷ்டியும் எப்போதும் கூடியிருப்பது வழக்கம். தூரத் தேசங்களிலிருந்து சிவனடியார்களும் தமிழ்ப் புலவர்களும் வருவார்கள். அடிக்கடி வந்து பரிசில்கள் பெற்றுப் போவார்கள். இது வழக்கமான ஒன்று. சிவ பூஜைப் பிரசாதம் கொண்டு வரும் அர்ச்சகர்களின் கூட்டமும் இருந்து கொண்டே இருக்கும்.

திருமழபாடி வைத்தியநாதசாமி  கோயில்
பொன்னியின் செல்வன்: ஜெயமோகன் எழுதிய 12 முக்கிய நாவல்கள்

அன்று ஒரு நாள் அரண்மனையில் திருமுதுகுன்றம் (விருத்தாசலம்), தென்குரங்காடுதுறை, திருமழபாடி முதலிய ஊர்களிலிருந்து சிற்பிகளும் சிவபக்தர்களும் வந்து அவரவர்கள் ஊர்களில் கோயில்களில் கருங்கல் திருப்பணி செய்வதற்கு மகாராணியின் உதவியைக் கோரினார்கள். கோயில்களை எந்தெந்த ஊர்களில் என்ன முறையில் கட்ட உத்தேசம் என்பதற்குச் சித்திரங்களும் பொம்மைக் கோயில்களும் கொண்டு வந்திருந்தார்கள்.

முதல் இரண்டு கோயில்களின் திருப்பணியைச் செய்ய உதவி அளிப்பதாகச் சொல்லிவிட்டு, "மழபாடியா? எந்த மழபாடி?" என்று பெரிய பிராட்டி கேட்டார். அதற்கு மழபாடியார் கூறிய கோவில்தான் இந்த வைத்திய நாத ஸ்வாமி திருக்கோவில்.

திருமழபாடி வைத்தியநாதசாமி  கோயில்
பொன்னியின் செல்வன் : பழையாறை கோவிலின் சிறப்புகள் என்ன?

திருமழபாடி – வைத்திய நாத ஸ்வாமி திருக்கோவில் :

ஆலய சிறப்புகள் :

இறைவன் பெயர் : வைத்திய நாத ஸ்வாமி , வஜ்ரஸ்தம்பநாதர், வயிரத்தூண் நாதர்,

இறைவியார் : அழகம்மை, சுந்தராம்பிகை, பாலாம்பிகை

தல மரம் : - பனை மரம்

தீர்த்தம் : - கொள்ளிடம், லட்சுமி, சிவகங்கை தீர்த்தம்

சோழர்கள்
சோழர்கள்Twitter

வழிபட்டோர் : அகத்தியர், இந்திரன், புருஷாமிருகம், பிரம்மா, சிலாத முனிவர் , மார்க்கண்டேயர், செப்பேசர் என்கிற திருநந்திதேவர் ,திருமால், பராசரர், வசிஷ்டர்

  • சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகியோர் பாடல் பெற்ற ஸ்தலம்

  • சுந்தரரை குரல் கொடுத்து அழைத்துத் தன் மேல் பாடல் பாட வைத்த சிவபெருமான் வீற்றிருக்கும் சிவஸ்தலம் மழபாடி.

  • கிழக்கு நோக்கிய இவ்வாலயம் 7 நிலைகளையுடைய இராஜகோபுரத்துடன் காட்சி தருகிறது.

  • இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

  • இத்தலத்தில்தான் நந்திக்கு திருமணம் நடைபெற்றது.

  • சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 54 வது தேவாரத்தலம் ஆகும்.

  • இங்குள்ள பிரம்மனுக்கு எதிரில் நான்கு வேதங்களும் நான்கு நந்திகளாக அமர்ந்துள்ளன.

திருமழபாடி வைத்தியநாதசாமி  கோயில்
பொன்னியின் செல்வன் : அருள்மொழியா? அருண்மொழியா? - மகுடேஸ்வரன் சொல்வது என்ன?
  • இராஜேந்திரன் காலத்தில் கட்டப்பட்டவை நூற்றுக்கால் மண்டபம், சோமாஸ்கந்த மண்டபம் ஆகியவை பதின்மூன்றாம் நூற்றாண்டைச் சார்ந்தவையாகும்.

  • இந்திரன், திருமால் ஆகியோர் வழிபட்ட சிறப்புடையது இத்தலம்.

  • மூலவர் வயிரத்தூண் நாதர் சிவலிங்கத் திருமேனி புருஷாமிருகத்தால் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபடப் பட்டது என்பது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்..

  • மார்க்கண்டேய முனிவர், வைகாசி விசாகத்தில் மழுவேந்தியா கோலத்தில் காட்சி தருகிறார். இத்தலத்திற்கு மழுவாடி என்ற பெயரும் உண்டு.

  • ஆலய நாயகி சுந்தராம்பிகை எனும் அழகம்மை சருமநோய்களைப் போக்கும் வரப்பிரசாதியாகவும், கருணையும் அன்பும் கொண்ட தாயாகவும் அருள் பாலிக்கிறாள்.

  • இந்த தலம் திருவையாற்றில் இருந்து வடமேற்கே 13 கி.மி. தொலைவில் இருக்கிறது. திருச்சியிலிருந்து புள்ளம்பாடி வழியாக பேருந்து வசதி உள்ளது.

    அரியலூர் - திருவையாறு சாலையில் கீழப்பழுவூர் வந்து அங்கிருந்து பிரியும் சாலையில் சென்றும் மழபாடி வரலாம். தஞ்சாவூரில் இருந்து திருவையாறு, திருமானூர் வழியாக இந்த திருத்தலத்திற்குச் செல்லலாம்.

திருமழபாடி வைத்தியநாதசாமி  கோயில்
பொன்னியின் செல்வன் - இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி - என்ன இப்படி ஒரு தொடர்பா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com