Asian Games: 20 ஓவரில் 314 ரன்கள், 9 பந்துகளில் 50 - யுவராஜ் சிங் சாதனை முறியடித்தது யார்?

20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 314 ரன்கள் குவித்தனர். இந்த போட்டி மூலம் பல சாதனைகளை முறியடித்து சரித்திரம் படைத்துள்ளது நேபாளம் அணி
Asian Games: 20 ஓவரில் 314 ரன்கள், 9 பந்துகளில் 50 - யுவராஜ் சிங் சாதனை முறியடித்தது யார்?
Asian Games: 20 ஓவரில் 314 ரன்கள், 9 பந்துகளில் 50 - யுவராஜ் சிங் சாதனை முறியடித்தது யார்?Twitter
Published on

ஆசிய விளையாட்டுப் போட்டிகள் சீனாவில் நடைபெற்று வருகின்றன. இதில் நேற்றைய கிரிக்கெட் போட்டியில் மங்கோலியாவுக்கு எதிராக நேபாளம் அணி பல சாதனைகளை புரிந்துள்ளது.

குறிப்பாக நேபாளம் அணியின் பேட்ஸ்மேன்கள் எதிரணியை கதிகலங்க வைத்துவிட்டனர். தெருவோர கிரிக்கெட் போட்டியில் பெரியவர்களுக்கும் பள்ளிக்குழந்தைகளுக்கும் இடையிலான போட்டி போல நடந்து முடிந்தது.

இந்த போட்டியின் முடிவில் நேபாளம் அணி பல சாதனைகளை படைத்துள்ளது. குறிப்பாக நேபாள பேட்ஸ்மேன் திபேந்திர சிங் ஐரீ இந்திய வீரர் யுவராஜ் சிங்கின் சாதனையை முறியடித்துள்ளார்.

திபேந்திர சிங் ஐரீ
திபேந்திர சிங் ஐரீ

நேற்றைய போட்டிக்கு பிறகு சர்வதேச டி20 போட்டிகளில் 300 ரன்கள் அடித்த முதல் அணி என்ற பெருமையை பெறுகிறது நேபாளம் அணி.

20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 314 ரன்கள் குவித்தனர். முன்னதாக அயர்லாந்துக்கு எதிராக ஆப்கானிஸ்தான் அடித்த 278 ரன்கள் தான் சாதனையாக இருந்தது.

குஷால் மல்லா
குஷால் மல்லா

திபேந்திர சிங் ஐரீ 9 பந்துகளுக்கு 50 ரன்கள் அடித்து அதிவேகமான அரை சதம் விளாசிய பேட்டர் என்ற பெருமையை பெற்றுள்ளார். முன்னதாக இந்தியன் வீரர் யுவராஜ் சிங் 12 பந்துகளுக்கு 50 ரன்கள் அடித்ததுதான் சாதனையாக இருந்தது. 2007 டி20 உலகக் கோப்பையில் இந்த சாதனையை அவர் படைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Asian Games: 20 ஓவரில் 314 ரன்கள், 9 பந்துகளில் 50 - யுவராஜ் சிங் சாதனை முறியடித்தது யார்?
Asian Games: அருணாச்சல பிரதேச வீரர்களை தடை செய்த சீனா, எதிர்க்கும் இந்தியா - என்ன நடந்தது?

மற்றொரு பேட்ஸ்மேனான குஷால் மல்லா 34 பந்துகளில் சதம் விளாசி அதிவேக சதம் அடித்த வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

முன்னதாக இந்திய கேப்டன் ரோஹிட் ஷர்மா மற்றும் தென்னாப்பிரிக்க அணியின் டேவிட் மில்லர் 35 பந்துகளில் சதம் அடித்து சாதனைப் படைத்திருந்தனர்.

Asian Games: 20 ஓவரில் 314 ரன்கள், 9 பந்துகளில் 50 - யுவராஜ் சிங் சாதனை முறியடித்தது யார்?
”விராட் கோலிக்காக இதை செய்யவேண்டும்” உருக்கமான கோரிக்கை வைத்த சேவாக் - என்ன பேசினார்?

மல்லா 50 பந்துகளில் 134 ரன்கள் அடித்து அவுட் ஆகாமல் களத்தில் இருந்தார். 12 சிக்ஸர்களும் 8 பவுண்டரிகளும் விளாசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

டி20 போட்டியில் அதிக ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அணி என்ற பெருமையையும் பெற்றுள்ளது நேபாளம். அபாரமான பந்துவீச்சால் மங்கோலிய வீரர்களை 41 ரன்களில் ஆலவுட் செய்து 273 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றனர்.

Asian Games: 20 ஓவரில் 314 ரன்கள், 9 பந்துகளில் 50 - யுவராஜ் சிங் சாதனை முறியடித்தது யார்?
பாகிஸ்தான் அணிக்காக விளையாடிய மூன்று இந்திய வீரர்கள் - ஒரு சுவாரஸ்ய கிரிக்கெட் வரலாறு!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com