”விராட் கோலிக்காக இதை செய்யவேண்டும்” உருக்கமான கோரிக்கை வைத்த சேவாக் - என்ன பேசினார்?

அவர் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும் எனவும், இறுதியில் இந்தியா பாகிஸ்தான் மோதும் எனவும் தனது கணிப்பை முன்வைத்துள்ளார்
”விராட் கோலிக்காக இதை செய்யவேண்டும்” உருக்கமான கோரிக்கை வைத்த சேவாக் - என்ன பேசினார்?
”விராட் கோலிக்காக இதை செய்யவேண்டும்” உருக்கமான கோரிக்கை வைத்த சேவாக் - என்ன பேசினார்?twitter

”2011ஆம் ஆண்டு உலகக்கோப்பையை சச்சின் டெண்டுல்கருக்காக வென்றோம். அதே போல இந்த முறை உலகக்கோப்பையை விராட் கோலிக்காக இந்திய அணி வென்று தர வேண்டும்” என உருக்கமாக பேசியுள்ளார் முன்னாள் இந்திய வீரர் வீரேந்திர சேவாக்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட உலகக்கோப்பை 2023ன் அட்டவணை நேற்று வெளியானது. 12 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவில் மீண்டும் நடைபெறும் போட்டிகள் அக்டோபர் 5ல் தொடங்குகின்றன.

முதல் போட்டியில் நியூசிலாந்து இங்கிலாந்து அணிகள் மோதும். அக்டோபர் 8ஆம் தேதி இந்திய அணிக்கு முதல் போட்டி, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சேப்பாக்கத்தில் நடக்கிறது.

உலகக்கோப்பை தொடங்கவுள்ளதை ஒட்டி, முன்னாள் இந்திய அணி வீரரான சேவாக் தனது எதிர்பார்ப்பை முன்வைத்திருக்கிறார்.

2011ல் இந்திய அணி உலகக்கோப்பையை சச்சின் டெண்டுல்கருக்காக வென்று தந்தது எனவும், தற்போது அதே போன்றதொரு பரிசினை இந்திய அணி விராட் கோலிக்கு வழங்கவேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

“அப்போது சச்சின் டெண்டுல்கர் இந்திய அணியில் எந்த இடத்தில் இருந்தாரோ அதே இடத்தில் இருக்கிறார் விராட். அவரது பேச்சு, விளையாடும் முறை, அணி வீரர்கள் மீது அவர் வைக்கும் கவனம் என அனைத்தும் சச்சினை நினைவுப்படுத்துகிறது.

இந்திய அணியின் வெற்றிக்காக தனது சக்திக்கும் மீறி விளையாடுபவர் விராட். ஆடுகளம் எப்படி இருக்கும் என்று கணிக்கக்கூடியவர். என்ன செய்தால் அணியை வெற்றியடையச் செய்யலாம் என்பதை அறிந்தவர். இந்திய அணிக்காக நிறைய ரன்கள் குவித்து உலகக்கோப்பையை வென்று தருவார்” என்றார் சேவாக்.

”விராட் கோலிக்காக இதை செய்யவேண்டும்” உருக்கமான கோரிக்கை வைத்த சேவாக் - என்ன பேசினார்?
BCCI: உலகக்கோப்பை 2023 அட்டவணை வெளியிட்ட ஐசிசி - இந்தியா பாகிஸ்தான் எப்போது மோதுகிறது?

இந்திய அணி தற்போது அழுத்தமான சூழ்நிலைகளை கையாள கற்றுக்கொண்டு விட்டது எனவும் இதுவே பாகிஸ்தானுக்கு எதிராக அணியை வெற்றியடையச் செய்யும் எனவும் கூறியுள்ளார்.

மற்ற அணிகளுடன் இந்தியா மோதுவதைக் காட்டிலும், பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி உணர்ச்சிகள் கலந்ததாக இருக்கும் என்று கூறியவர், இந்தியா நிச்சயம் அக்டோபர் 15ல் பாகிஸ்தானுக்கு எதிராக வெல்லும் எனவும் தெரிவித்திருக்கிறார்

மேலும், அவர் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும் எனவும், இறுதியில் இந்தியா பாகிஸ்தான் மோதும் எனவும் அவர் தனது கணிப்பை முன்வைத்துள்ளார்.

”விராட் கோலிக்காக இதை செய்யவேண்டும்” உருக்கமான கோரிக்கை வைத்த சேவாக் - என்ன பேசினார்?
தோனி Candy Crush விளையாடிய வீடியோ வைரல் - அடுத்த 3 மணி நேரத்தில் என்ன நடந்தது தெரியுமா?

கடந்த 2011ல் இந்தியாவில் உலகக்கோப்பை போட்டிகள் நடைப்பெற்றன. இலங்கைக்கு எதிரான இறுதிப்போட்டியில் இந்திய அணி இமாலய வெற்றிப்பெற்று 28 ஆண்டுகள் கழித்து கோப்பையை வென்றது.

அதன் பிறகு 2013ல் சாம்பியன்ஸ் டிராபி வென்றது இந்திய அணி. இந்த இரு அணிகளிலும் விராட் கோலி இடம்பெற்றிருந்தார். சேவாக் 2011 உலகக்கோப்பை அணியில் இருந்தார்

ஆனால் அதன் பிறகு இந்திய அணி எந்த கோப்பையும் வெல்லவில்லை, குறிப்பாக விராட்டின் தலைமையில்.

ஒரு காலத்தில் எப்படி ஒரு ஐசிசி கோப்பைக்காக சச்சின் டெண்டுல்கர் ஏங்கினாரோ, அதே நிலையில் இருக்கிறார் விராட் கோலி. அல்லது அப்படி சித்தரிக்கப்படுகிறார்.

எனில் இந்த ஐசிசி கோப்பையை அவருக்கு வென்று கொடுத்தால், அவர் ஓய்வு பெற வாய்ப்பிருக்கிறதா?

அண்ண எப்போ எந்திரிப்பாரு திண்ண எப்போ காலியாகும் என்று காத்திருக்கிறதா இந்திய அணி?

”விராட் கோலிக்காக இதை செய்யவேண்டும்” உருக்கமான கோரிக்கை வைத்த சேவாக் - என்ன பேசினார்?
IPL 2023: விராட் கோலி டூ சஞ்சு சாம்சன் - ஐபிஎல்லில் இந்தியர்களின் அதிகபட்ச தனிபட்ட ஸ்கோர்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com