மே 28ல் நடைபெறவுள்ள ஐபிஎல் 2023ன் இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனிக்கு தடை விதிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.
ஆனால், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வரவில்லை. கணிப்புக்ளே உலாவி வருகின்றன.
கடந்த மே 23ஆம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குஜராத் டைட்டன்ஸ் அணியை முதல் தகுதிச் சுற்றில் எதிர்கொண்டது
முதலில் பேட்டிங் செய்து 172 ரன்களை குஜராத்துக்கு இலக்காக நிர்ணயித்தது சென்னை அணி. இரண்டாவதாக குஜராத் அணி விளையாடும்போது 16வது ஓவரை வீச மதீஷா பதிரனாவை அழைத்தார் தோனி.
ஆனால் நடுவர்கள் தடுத்தனர். காரணம் அவர் களத்தை விட்டு 9 நிமிடங்கள் வெளியில் இருந்தார். ஐபிஎல் விதிமுறைகளின்படி, ஒரு வீரர் களத்தை விட்டு 8 நிமிடங்கள் மட்டுமே வெளியில் இருக்க அனுமதி. ஒரு நிமிடம் கூடுதலாக இருந்ததால் இந்த தடை விதிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து மாற்று பௌலரை தேர்ந்தெடுக்காமல், 9 நிமிடங்களையும் நடுவரிடம் பேசிய கழித்தார் தோனி. இந்த விஷயம் இணையத்தில் வைரலானது.
ஒரு பக்கம் இது தோனியின் புத்திசாலித்தனம் என இணையம் பாராட்டு மழைப் பொழிந்தாலும், ஐபிஎல் நடத்தை விதிமுறைகளை மதிக்காததும், நடுவர்களை அவமதிக்கும் விதமாக நடந்துகொண்டதாகவும் இது பார்க்கப்படுகிறது.
இதனால், நடைபெறவுள்ள அடுத்த சிஎஸ்கே போட்டியில் தோனிக்கு விளையாட தடை விதிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. ஒரு வேளை தடை விதிக்கப்பட்டால், இது சென்னை அணி கோப்பையை வெல்வதில் பெரும் சிக்கலாக வந்தமையும்.
இன்று நடைபெறவுள்ள இரண்டாவது தகுதிச் சுற்றில் குஜராத் டைட்டன்ஸ் அணியை மும்பை இந்தியன்ஸ் அணி எதிர்கொள்கிறது. இதில் வெற்றிப்பெறும் அணி, ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறும் இறுதி போட்டியில் சென்னையுடன் மோதும்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust