அரையிறுதிக்கு தேர்வான SA; வெளியேறிய நடப்பு சாம்பியன் இங்கிலாந்து - WC தற்போதைய நிலை என்ன?

புள்ளிப்பட்டியலின் நிலை என்ன? எந்தெந்த அணிகள் அரையிறுதிக்கு தேர்வாகியுள்ளன? யாரெல்லம் வெளியேறியுள்ளனர்? இன்று இந்திய அணி வீரர் விராட் கோலியின் பிறந்த நாள். இன்று ஒரு சதமடித்து சச்சினின் சாதனையை சமன் செய்வாரா என்ற எதிர்பார்ப்பும் உள்ளது
அரையிறுதிக்கு தேர்வான SA; வெளியேறிய நடப்பு சாம்பியன் இங்கிலாந்து - WC தற்போதைய நிலை என்ன?
அரையிறுதிக்கு தேர்வான SA; வெளியேறிய நடப்பு சாம்பியன் இங்கிலாந்து - WC தற்போதைய நிலை என்ன?ட்விட்டர்

உலகக்கோப்பை 2023 கடந்த அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கியது. இந்தியா, தென் ஆப்பிரிக்கா, இலங்கை, ஆஸ்திரேலியா, வங்கதேசம், இங்கிலாந்து, பாகிஸ்தான், நெதர்லாந்து, ஆப்கானிஸ்தான், நியூசிலாந்து என 10 அணிகள் இம்முறை உலகக்கோபைக்கு தேர்வாகின.

உலகக்கோப்பை தொடங்கிய காலத்தில் அனைத்து அணிகளும் கண்டு அஞ்சிய மேற்கு இந்திய தீவுகள் அணி, இம்முறை தகுதியே பெறவில்லை.

கிட்ட தட்ட அனைத்து அணிகளுமே 7 போட்டிகளை விளையாடிவிட்டன. தற்போது உலகக்கோப்பை தொடர் அரையிறுதியை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது.

இந்நிலையில், புள்ளிப்பட்டியலின் நிலை என்ன? எந்தெந்த அணிகள் அரையிறுதிக்கு தேர்வாகியுள்ளன, யாரெல்லம் வெளியேறியுள்ளனர் உள்ளிட்ட தகவல்களை காணலாம்

இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற வாய்ப்பு?
இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற வாய்ப்பு?Twitter

புள்ளிப்பட்டியல்

 • 7 போட்டிகளில் விளையாடி, அனைத்து போட்டிகளிலும் வென்று 14 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறது இந்திய அணி. இரண்டாவது இடத்தில் தென் ஆப்பிரிக்கா 12 புள்ளிகளுடன் இருக்கிறது.

 • அரையிறுதிக்கு முதல் அணியாக இந்தியா தேர்வானது. நேற்று ஆஸ்திரேலியாவுடன் இங்கிலாந்து தோற்ற நிலையில், தென் ஆப்பிரிக்கா அரையிறுதிக்கு தகுதிபெற்றது

 • உலகக்கோப்பை தொடரில் இருந்து முதல் அணியாக வங்கதேசம் எலிமினேட் ஆனது. ஆஸ்திரேலியாவுடன் நேற்றைய போட்டியில் தோற்றதால், நடப்பு சாம்பியனான இங்கிலாந்தும் வெளியேறியது.

  (2019 உலகக்கோப்பையில் இங்கிலாந்து அணி வென்றது. நியூசிலாந்துடனான அந்த இறுதிப்போட்டி டிரா ஆனபோது, சூப்பர் ஓவர் வைக்கப்பட்டது. சூப்பர் ஓவரிலும் டை ஆக, அதிக பௌண்டரிகள் கணக்கில் இங்கிலாந்துக்கு கோப்பை வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது)

 • 10 புள்ளிகளுடன் 5 முறை சாம்பியன் ஆஸ்திரேலியா, 8 புள்ளிகளுடன் நியூசிலாந்து முறையே 3 மற்றும் 4ம் இடங்களில் உள்ளனர்.

 • ஆனால் அதே 8 புள்ளிகளுடன் அடுத்தடுத்த இடங்களில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிதான் உள்ளதால், அரையிறுதிக்கு செல்லும் அடுத்த 2 அணிகள் யார் என்று இன்னும் தீர்மானிக்க முடியவில்லை

அரையிறுதிக்கு தேர்வான SA; வெளியேறிய நடப்பு சாம்பியன் இங்கிலாந்து - WC தற்போதைய நிலை என்ன?
World Cup 2023: சச்சின் டூ யுவராஜ் சிங் - இதுவரை உலகக்கோப்பையில் சிறந்த perfomance-கள்

அதிக ரன்கள்

 1. குயின்டன் டி காக் (தென் ஆப்பிரிக்கா) - 7 போட்டிகளில் 77.85 சராசரியுடன் 545 ரன்கள்

 2. ரச்சின் ரவீந்திரா (நியூசிலாந்து) - 8 போட்டிகளில் 74.71 சராசரியுடன் 523 ரன்கள்

 3. விராட் கோலி (இந்தியா) - 7 போட்டிகளில் 88.40 சராசரியுடன் 442 ரன்கள்

 4. டேவிட் வார்னர் (ஆஸ்திரேலியா) - 7 போட்டிகளில் 61.14 சராசரியுடன் 428 ரன்கள்

 5. ரோஹித் சர்மா (இந்தியா) - 7 இன்னிங்ஸ்களில் 57.42 சராசரியுடன் 402 ரன்கள்

அரையிறுதிக்கு தேர்வான SA; வெளியேறிய நடப்பு சாம்பியன் இங்கிலாந்து - WC தற்போதைய நிலை என்ன?
World Cup 2023: மீண்டும் சச்சினின் சாதனையை தகர்த்த கோலி - முதல் வெற்றியை பதித்த இந்தியா!

அதிக விக்கெட்கள்

 1. ஆடம் ஜம்பா (ஆஸ்திரேலியா) - 7 போட்டிகளில் 19 விக்கெட்டுகள்

 2. தில்ஷன் மதுஷங்க (இலங்கை) - 7 போட்டிகளில் 18 விக்கெட்டுகள்

 3. மார்கோ ஜான்சன் (தென் ஆப்பிரிக்கா) - 7 போட்டிகளில் 16 விக்கெட்டுகள்

 4. ஷஹீன் அப்ரிடி (பாகிஸ்தான்) - 8 போட்டிகளில் இருந்து 16 விக்கெட்டுகள்

 5. ஜஸ்பிரித் பும்ரா (இந்தியா) - 7 போட்டிகளில் இருந்து 15 விக்கெட்டுகள்

இன்று இந்தியா தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. இந்திய அணி இதுவரை எந்த போட்டியிலும் தோல்விபெறவில்லை. ஒரு போட்டியில் தோற்றிருந்தாலும், வலுவான அணியாக தன்னை நிலை நிறுத்தியிருக்கிறது தென் ஆப்பிரிக்கா.

இன்று இந்திய அணி வீரர் விராட் கோலியின் பிறந்த நாள். இன்று ஒரு சதமடித்து சச்சினின் சாதனையை சமன் செய்வாரா என்ற எதிர்பார்ப்பு உள்ளது

ஆகையால் இன்றைய போட்டியின் மீது எதிர்பார்ப்புகள் கூடுதலாக உள்ளன. இன்றைய போட்டியின் முடிவு, அரையிறுதி போட்டிகளின் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் அய்யமில்லை.

இந்தியா இதுவரை இரண்டு முறை (1983, 2011) உலகக்கோப்பை வென்றுள்ளது. தென் ஆப்பிரிக்கா இதுவரை ஒரு முறை கூட உலகக்கோப்பையை வெல்லவில்லை.

அரையிறுதிக்கு தேர்வான SA; வெளியேறிய நடப்பு சாம்பியன் இங்கிலாந்து - WC தற்போதைய நிலை என்ன?
உலகக்கோப்பை இல்லை, ஒரு தங்க பதக்கத்துக்காக போட்டி போடும் இந்திய வீரர்கள் - பின்னணி என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

MGRADMKActor VijayJayalalithaHistory

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com