"இன்னும் 2 குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளுங்கள் " - கோலிக்கு வார்னர் 'அடடா' அட்வைஸ்

எவ்வளவு பெரிய வீரராக இருந்தாலும் ஒரு கட்டத்தில், ஏற்ற இறக்கத்தை அனுபவித்துத்தான் ஆக வேண்டும். மீண்டும் பழைய "ஃபார்ம் - க்கு செல்ல நீண்ட நாட்கள் கூட ஆகலாம். உங்கள் நம்பிக்கையை மட்டும் ஒருபோதும் இழந்துவிடக் கூடாது என்றார்.
David Warner - Virat Kohli
David Warner - Virat Kohli Twitter
Published on

கடந்த சில வருடங்களாக சர்வதேசப் போட்டியிலும் சரி ஐபிஎல் தொடரிலும் சரி முன்பு போல விராட் கோலி அதிரடியாக விளையாடுவதில்லை என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

குறிப்பாக நடப்பு ஐபிஎல் தொடரில் அவர் மிக சுமாராகவே விளையாடி வருகிறார். 10 போட்டிகளில் இதுவரை விளையாடியுள்ள அவர் மொத்தமாக 186 ரன்கள் மட்டுமே குவித்திருக்கிறார்.

விராட் கோலி தற்போது மோசமான ஃபார்மில் உள்ளதால் அவர் குறித்து ரசிகர்கள் உட்பட முன்னணி கிரிக்கெட் வீரர்களும் தங்களின் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

David Warner
David WarnerTwitter

மீண்டும் கோலி "ஃபார்ம்"-க்கு வர நீங்கள் என்ன அறிவுரை கூறுவீர்கள் என வார்னரிடம் கேட்கப்பட்டது.

அதற்குப் பதில் அளித்த வார்னர்

"ஃபார்ம்" தற்காலிகம் "கிளாஸ்" தான் நிரந்தரம். எனவே அதைத் தவறவிடக்கூடாது. இது அனைத்து வீரர்களுக்கும் நடப்பது தான்" என்றார்.

எவ்வளவு பெரிய வீரராக இருந்தாலும் ஒரு கட்டத்தில், ஏற்ற இறக்கத்தை அனுபவித்துத்தான் ஆக வேண்டும். மீண்டும் பழைய "ஃபார்ம் - க்கு செல்ல நீண்ட நாட்கள் கூட ஆகலாம். உங்கள் நம்பிக்கையை மட்டும் ஒருபோதும் இழந்துவிடக் கூடாது என்றார்.

, "இன்னும் 2 குழந்தைகளைப் பெற்றுக்கொண்டு, வாழ்க்கையையும் கிரிக்கெட்டையும் மேலும் சந்தோசமாக அனுபவியுங்கள் என்றார்.

டேவிட் வார்னரின் இந்த அறிவுரை தற்போது சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகியுள்ளது.

David Warner - Virat Kohli
விராட் கோலியை படுத்தி எடுத்த 2021ஆம் ஆண்டு - Short Video

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow Us on:

Newssensetn: https://www.newssensetn.com/

Nalam360 : https://www.newssensetn.com/health

Newsnow: https://www.newssensetn.com/wow-news

Tamilflashnewsapp: https://www.newssensetn.com/tamilnadu

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com