David Warner: 100வது டெஸ்ட்டில் இரட்டை சதம் - வரலாறு படைத்த ஆஸ்திரேலிய வீரர்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது ஆஸ்திரேலியா. இது டேவிட் வார்னரின் 100வது சர்வதேச டெஸ்ட் போட்டியாகும்.
David Warner
David Warnerட்விட்டர்
Published on

தனது நூறாவது சர்வதேச டெஸ்ட் போட்டியில் இரட்டை சதமடித்து சாதனை படைத்துள்ளார் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர்.

ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டேவிட் வார்னர். இவரது விளையாட்டிற்கு ரசிகர்கள் இருப்பதை விட, டிக் டாக் வீடியோக்களுக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம்.

இவர் இந்திய பாடல்களுக்கு தன் குழந்தைகளுடனோ, தனியாகவோ நடனமாடி இந்தியாவில் ரசிகர்களை சம்பாரித்து வைத்திருக்கிறார்.

ஆஸ்திரேலிய அணியின் சிறந்த பேட்டர்களுள் ஒருவராக கருதப்படும் டேவிட் வார்னர் தற்போது புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது ஆஸ்திரேலியா. இது டேவிட் வார்னரின் 100வது சர்வதேச டெஸ்ட் போட்டியாகும்.

தனது 100வது டெஸ்ட் போட்டியில் சதமடித்து சாதனை படைத்தார் டேவிட் வார்னர். இதன் மூலம் 100வது டெஸ்ட்டில் சதமடித்த 10வது வீரரானார் டேவிட்

David Warner
Virat Kohli : 1021 நாட்களுக்கு பிறகு சதம் விளாசிய விராட் - கொண்டாடித் தீர்த்த ரசிகர்கள்!

தொடர்ந்து பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தி, தன் 100வது டெஸ்ட்டில் இரட்டை சதத்தை பூர்த்தி செய்தார். கிரிக்கெட் வரலாற்றில் 100வது டெஸ்ட்டில் இரட்டை சதமடித்த இரண்டாவது வீரரானார் வார்னர்.

இதற்கு முன்பு 2021ல் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து வீரர் ஜோ ரூட், தன் 100வது டெஸ்ட்டில் இரட்டை சதமடித்தார். 100வது டெஸ்ட் போட்டியில் இரட்டை சதமடித்த முதல் நபர் என்ற பெருமையை பெற்றார் ரூட்.

மேலும், 8000 ரன்களை கடந்த 8வது ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் என்ற இலக்கையும் எட்டியுள்ளார்.

David Warner
Ishan Kishan 200: அதிவேக இரட்டை சதம் - வங்கதேசத்துக்கு எதிராக ருத்ர தாண்டவம் ஆடிய இஷான்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com