Virat Kohli : 1021 நாட்களுக்கு பிறகு சதம் விளாசிய விராட் - கொண்டாடித் தீர்த்த ரசிகர்கள்!

இன்றைய போட்டியில், 61 பந்துகளில் 122 ரன்கள் விளாசியுள்ளார் விராட். 12 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்சர்கள் அடங்கும். இன்னிங்ஸ் முடிவில் விராட்டின் ஸ்ட்ரைக் ரேட் 200 என்பது குறிப்பிடத்தக்கது.
Virat Kohli
Virat Kohli ICC
Published on

ஆசியக் கோப்பை 2022, ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் தனது 71வது சதத்தை பதிவு செய்தார் விராட் கோலி. கடைசியாக 2019ம் ஆண்டு வங்காள தேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சதமடித்தார் விராட். நீண்ட நாட்களாக சதம் இல்லாதது விராட் மீது பல விமர்சனங்கள் எழ காரணமாக அமைந்தது.

இன்றைய போட்டியில், 61 பந்துகளில் 122 ரன்கள் விளாசியுள்ளார் விராட். 12 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்சர்கள் அடங்கும். இன்னிங்ஸ் முடிவில் விராட்டின் ஸ்ட்ரைக் ரேட் 200 என்பது குறிப்பிடத்தக்கது.

விராட் கோலியின் இந்த 100 ரன்கள் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. சிறப்பாக தனது முதல் சர்வதேச டி20 சதத்தையும் பதிவு செய்துள்ளார் விராட்.

டி20 சதம் அடிப்பது என்பது சாதாரண விஷயமில்லை. இதற்கு அதிக ஆற்றலும் உறுதியும் தேவை. தனது 33வது வயதில் இந்த சதத்தை பதிவு செய்ததன் மூலம் அதிக வயதில் சதம் அடித்த வீரர் என்ற பட்டத்தையும் பெறுகிறார் விராட்.

முன்னதாக சூர்யகுமார் யாதவ் மற்றும் ரோஹித் சர்மா தங்களது 31 வயதில் டி20 சதம் அடித்தனர்.

இந்த 71வது சதத்தின் மூலம் ரிக்கி பாண்டிங் அடித்த சதங்களின் எண்ணிக்கையை சமன் செய்துள்ளார் விராட். அதிகபட்சமாக சச்சின் 100 சதங்கள் விளாசியுள்ளார்.

Virat Kohli
விராட் கோலி உபயோகித்த High Altitude Mask - பயன்கள் என்ன? விலை என்ன?

இந்த சதம் ரசிகர்களின் நீண்ட நாள் காத்திருப்பை முடிவுக்கு கொண்டுவந்துள்ளது.

Virat Kohli
"தோனி மட்டும் தான் என்னிடம் பேசினார்" - மனம் திறந்த விராட் கோலி

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com