SRH vs DC: சொந்த மண்ணில் சொதப்பிய ஹைதராபாத் - கடைசி இரண்டு இடங்களுக்கு தான் இந்த போட்டியா?

200 ரன்களுக்கு மேல் இலக்கை நிர்ணையிக்கும் போட்டிகளுக்கு மத்தியில் 145 என்பது மிக மிக எளிதான டார்கெட், ஆனால் அணியின் பேட்டிங் வலுவாக இருக்கும் பட்சத்தில்...
SRH vs DC: சொந்த மண்ணில் சொதப்பிய ஹைதராபாத் - கடைசி இரண்டு இடங்களுக்கு தான் இந்த போட்டியா?
SRH vs DC: சொந்த மண்ணில் சொதப்பிய ஹைதராபாத் - கடைசி இரண்டு இடங்களுக்கு தான் இந்த போட்டியா?Twitter
Published on

என்ன தான் நேற்றின் போட்டியில் டெல்லியிடம் தோற்றிருந்தாலும், புள்ளிப்பட்டியலில் தனது 7வது இடத்தை டெல்லிக்கு விட்டுக்கொடுக்கவில்லை சன்ரைசர்ஸ் ஹைதராபாத். அது மட்டுமே தற்போதைய ஆறுதலாக இருக்கிறது அணிக்கு.

ஐபிஎல் 2023ன் 34வது போட்டியில் ஹைதராபாத் அணியை சொந்த மண்ணில் தோற்கடித்தது டெல்லி கேபிட்டல்ஸ் அணி. ஹைதராபாத் அணியால் ஒரு காலத்தில் கைவிடப்பட்ட வார்னருக்கு இது ஒரு ஸ்பெஷலான கம் பேக் ஆக இருக்கிறது. அணியின் வெற்றியை தொடர்ந்து அவர் ஆக்ரோஷமாக ஆர்பரித்ததிலேயே அது தெரிந்திருக்கும்.

டாஸ் வென்ற டெல்லி கேபிட்டல்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. மெச்சிக்கொள்ளும் அளவுக்கு அதிரடியாக யாரும் விளையாடவில்லை என்றாலும், 20 ஓவர் முடிவில் 144 ரன்களை சேர்த்தது அணி. அதிகபட்சமாக அக்சர் படேல், மனீஷ் பாண்டே இருவரும் தலா 34 ரன் எடுத்திருந்தனர்.

200 ரன்களுக்கு மேல் இலக்கை நிர்ணையிக்கும் போட்டிகளுக்கு மத்தியில் 145 என்பது மிக மிக எளிதான டார்கெட், ஆனால் அணியின் பேட்டிங் வலுவாக இருக்கும் பட்சத்தில்.

ஹைதராபாத் அணிக்கு அந்த வகையில் துரதிர்ஷ்டம் தான். நம்பிக்கை நாயகன் ராகுல் திரிபாதிக்கு, இந்த சீசன் பின்னடைவாகவே உள்ளது. மயான்க் அகர்வால், தமிழ்நாடு வீரர் வாஷிங்டன் சுந்தர், புவனேஷ்வர் குமார் மட்டுமே போராடினர். அதுவும் வீணானது. 7 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது ஹைதராபாத் அணி.

SRH vs DC: சொந்த மண்ணில் சொதப்பிய ஹைதராபாத் - கடைசி இரண்டு இடங்களுக்கு தான் இந்த போட்டியா?
CSK vs MI: சென்னை, மும்பை போட்டியை ஐபிஎல்லின் El Clasico எனக் குறிப்பிடுவது ஏன்?

போட்டி முடிந்து பேசிய டேவிட் வார்னர்,ஹைதராபாத்தில் தனக்கு ஆதரவளித்த ரசிகர்களுக்கு நன்றி சொன்னார். “முகேஷ் கடைசி ஓவரில் அழுத்தத்தை சிறப்பாக கையாண்டார், மற்றும் எங்கள் அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள், அக்சர் மற்றும் குல்தீப் அணியின் பலமாக இருக்கின்றனர்" என்றார் வார்னர்

மேலும், “இஷாந்த் சர்மாவை பாராட்டவேண்டும், அவர் என்னிடம் தான் எப்போதும் தயாராக இருப்பதாக தெரிவித்திருந்தார். ஆனால் துரதிர்ஷடவசமாக அவரின் உடல்நிலை மோசமானது. ஆனால் இன்று சிறப்பாக விளையாடினார்” என்றார்.

மற்ற அணிகள் தங்களை விட அதிக புள்ளிகளுடன் இருக்கின்றனர் என்பதால், இனி அணியை வெற்றியின் பாதையில் இட்டுச்செல்ல செய்யவேண்டிய முயற்சிகளை மேற்கொள்ளவிருக்கிறோம் என்று கூறி விடைப்பெற்றார் வார்னர். நேற்று வென்றிருந்தாலும் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறது டிசி!

ஹைதராபாத் அணி கேப்டன் மார்க்ரம் கூறுகையில், தொடர் தோல்வியால் வீரர்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர் எனவும், அதனை சரி செய்து அவர்களுக்கு இன்னும் சுதந்திரம் அளிக்கவேண்டும் எனவும் பேசினார். ஆலோசனைகளை கேட்டு அதற்கேற்றவாறு முன்னேறுவோம் எனவும் கூறினார் எய்டன் மார்க்ரம்.

எனினும் நேற்றைய போட்டி, புள்ளிப்பட்டியலின் கடைசி இரண்டு இடங்களுக்கானதாக தான் இருந்தது!

SRH vs DC: சொந்த மண்ணில் சொதப்பிய ஹைதராபாத் - கடைசி இரண்டு இடங்களுக்கு தான் இந்த போட்டியா?
தோனி: ”எனக்கு farewell தருகிறார்கள்” எங்கு நோக்கினும் Yellow Jersey- ஓய்வு பெறுகிறாரா தல?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com