CSK vs MI: சென்னை, மும்பை போட்டியை ஐபிஎல்லின் El Clasico எனக் குறிப்பிடுவது ஏன்?

சென்னை மும்பை இடையிலான போட்டியை எல் க்ளாசிக்கோ என்று குறிப்பிடுகின்றனர். எல் க்ளாசிக்கோ என்ற பெயர் ஏன்? இதுவரை சென்னை மும்பை மோதியதில், யாருக்கு வெற்றி சதவிகிதம் அதிகமாக இருக்கிறது என பார்க்கலாம்
CSK vs MI: சென்னை மும்பை போட்டியை el classico எனக் குறிப்பிடுவது ஏன்?
CSK vs MI: சென்னை மும்பை போட்டியை el classico எனக் குறிப்பிடுவது ஏன்?Twitter
Published on

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் அணியை இன்று எதிர்கொள்கிறது.

என்னதான் எல்லா போட்டிகளுக்குமே ரசிகர்கள் மத்தியில் ஆரவாரம் இருந்தாலும், சென்னை மும்பை அணிகள் மோதல் ஐபிஎல்லில் மிக முக்கிய போட்டியாக பார்க்கப்படுகிறது.

இந்தியா பாகிஸ்தான் போட்டிகளை போல.

நேற்றுவரை நண்பர்களாக இருந்தவர்கள் கூட, இன்று எதிர் எதிர் திசையில் நிற்பார்கள்.

சென்னை மும்பை இடையிலான போட்டியை எல் க்ளாசிக்கோ என்று குறிப்பிடுகின்றனர். எல் க்ளாசிக்கோ என்ற பெயர் ஏன்? இதுவரை சென்னை மும்பை மோதியதில், யாருக்கு வெற்றி சதவிகிதம் அதிகமாக இருக்கிறது என பார்க்கலாம்

எல் க்ளாசிக்கோ

ஸ்பெயின் கால்பந்து கிளப்புகளான FC Barcelona மற்றும் Real Madrid FC அணிகள் மோதுவதை தான் எல் க்ளாசிக்கோ எனக் குறிப்பிடுவார்கள்.

இந்த இரு அணிகளுக்கும் இடையில் இருக்கும் போட்டி, பகைமையை எடுத்துக்காட்டுகிறது இச்சொல்.

எல் க்ளாசிக்கோ என்பதன் பொருள் The Classic என்பதாகும்.

அதுபோல தான் சென்னை மும்பை அணிகள் மோதுவதை எல் க்ளாசிக்கோ எனக் குறிப்பிடுகின்றனர் ரசிகர்கள்

CSK vs MI

ஐபிஎல் வரலாற்றில் மிகப்வும் வெற்றிகரமான, இரு அணிகள் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ்.

மும்பை மற்றும் சென்னை இதுவரை முறையே ஐந்து மற்றும் நான்கு ஐபிஎல் கோப்பைகளை வென்றுள்ளனர். இரு அணிகளுமே இரு முறை சாம்பியன்ஸ் டிராபியையும் வென்றுள்ளனர்

இதுவரை 36 முறை இரு அணிகளும் மோதியுள்ளன. இதில் 21 முறை மும்பை இந்தியன்ஸ் அணியும், 15 முறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் வென்றுள்ளனர்.

CSK vs MI: சென்னை மும்பை போட்டியை el classico எனக் குறிப்பிடுவது ஏன்?
IPL 2023: குருனால் சுழலில் சிக்கிய ஹைதராபாத்; முதலிடத்துக்கு முன்னேறிய லக்னோ

அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச ஸ்கோர்

இதுவரை இரு அணிகளும் மோதியதில், அதிகபட்சமாக சென்னை 218 ரன்களும், மும்பை 219 ரன்களும் எடுத்துள்ளனர்.

குறைந்தபட்சமாக சென்னை அணி 79 ரன்களும், மும்பை 136 ரன்களும் எடுத்துள்ளனர்.

சென்னை சார்பில் அதிக ரன்கள் அடுத்த வீரராக சுரேஷ் ரெய்னா 736 ரன்கள் எடுத்துள்ளார். மும்பை சார்பில் ரோஹித் சர்மா 711 ரன்கள் எடுத்திருக்கிறார்.

அதிகபட்ச விக்கெட்களை மும்பைக்கு எதிராக டுவெயின் பிராவோ - 37 விக்கெட்டுகள், மும்பை சார்பில் லசித் மலிங்கா - 37 விக்கெட்கள் எடுத்துள்ளனர்.

டுவெயின் பிராவோ, ராபின் உத்தப்பா, மைக்கல் ஹஸி, பார்திவ் படேல், ஹர்பஜன் சிங், கரண் சர்மா, அம்பதி ராயுடு உள்ளிட்ட வீரர்கள், சென்னை மும்பை என இரு அணிகளுக்காகவும் விளையாடியுள்ளனர்.

CSK vs MI: சென்னை மும்பை போட்டியை el classico எனக் குறிப்பிடுவது ஏன்?
CSK vs GT: "ருதுராஜ்ஜை பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது" - தோல்வி பற்றி தோனி பேசியது என்ன?

இந்த சீசனில் இதுவரை

கடந்த ஆண்டு இரண்டு அணிகளுமே மோசமான ஆட்டத்தையே வெளிப்படுதியது. முதல் அணியாக மும்பை இந்தியன்ஸ் வெளியேறியது.

இன்று மும்பையின் வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ளது சென்னை மும்பை இடையிலான போட்டி. இப்போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் களமிறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுவரை நடைப்பெற்ற இரு போட்டிகளில் ஒரு போட்டியில் சென்னை அணி வென்றுள்ளது. மும்பை அணி இந்த சீசனில் இன்னும் ஒரு வெற்றியைக் கூட பதிவு செய்யவில்லை.

CSK vs MI: சென்னை மும்பை போட்டியை el classico எனக் குறிப்பிடுவது ஏன்?
IPL2023: முதல் போட்டியில் மூன்று விக்கெட் - KKR களமிறக்கிய இந்த 19 வயது சுயாஷ் சர்மா யார்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com