தோனி போட்ட கண்டிஷன்: ஜடேஜாவை தக்கவைத்த சிஎஸ்கே - டிவிட்டர் பதிவு வைரல்

மும்பையில் கீரன் பொல்லார்ட், சென்னை அணியிலிருந்து ப்ராவோ, உத்தப்பா, சன் ரைசர்ஸ் அணியிலிருந்து கேன் வில்லியம்சன், டெல்லி அணியிலிருந்து ஷர்துல் தாகுர் போன்ற பெரிய தலைகளின் பெயர்கள் இதிலிருந்தன.
தோனி - ஜடேஜா
தோனி - ஜடேஜாடிவிட்டர்
Published on

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர் ரவீந்திர ஜடேஜாவை அந்த அணி தக்க வைத்துள்ளது. தன் ட்விட்டர் பக்கத்தில் ஜடேஜா தோனியுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, “எல்லாம் நலம்” என்று தலைப்பிட்டிருந்தார்.

2023ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் ஏலம் டிசம்பரில் நடக்கவுள்ள நிலையில் அணி நிர்வாகங்கள், அவர்கள் அணியில் தக்கவைக்கும் வீரர்கள் மற்றும் விடுவிக்கப்படும் வீரர்களின் பட்டியலை அறிவித்தது.

முக்கிய வீரர்கள் பலரும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். இது பலருக்கு அதிர்ச்சியை அளித்தது. காரணம் மும்பையில் கீரன் பொல்லார்ட், சென்னை அணியிலிருந்து ப்ராவோ, உத்தப்பா, சன் ரைசர்ஸ் அணியிலிருந்து கேன் வில்லியம்சன், டெல்லி அணியிலிருந்து ஷர்துல் தாகுர் போன்ற பெரிய தலைகளின் பெயர்கள் இதிலிருந்தன.

மும்பை வீரர் கீரன் பொல்லார்ட் இதன் பிறகு ஐபிஎல்லிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், விடுவிக்கப்பட்ட அணி வீரர்கள் பட்டியல் வெளியான சிறிது நேரத்தில் ஜடேஜா ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் தோனியுடன் இருக்கும் புகைப்படம் ஒன்ரை பகிர்ந்து, “எல்லாம் நலம்” என்று தலைப்பிட்டு பகிர்ந்திருந்தார். ஏற்கனவே சென்னை அணிக்கும், தோனிக்கும், ஜடேஜாவுக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் இருப்பதாக வதந்திகள் வெளிவந்தது.

கடந்த சீசன் ஐபிஎல் முடிந்தவுடன் சென்னை அணி குறித்த தனது பதிவுகளை ஜடேஜா நீக்கியதாகவும், அவர் மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு திரும்பப் போகிறார் என்றும் இணையத்தில் பரவலாக பேசப்பட்டது.

இவ்வனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சமீபத்தில், சென்னை அணி நிர்வாகம், ஜடேஜாவை அணியிலிருந்து நீக்க மறுப்பு தெரிவித்தாக டைம்ஸ் ஆஃப் இந்தியா அறிக்கை கூறியிருந்தது. “ஜடேஜாவின் இடத்தை வேறு யாரும் நிரப்ப முடியாது என்றும், அணியில் ஜடேஜாவை தக்க வைப்பதில் தோனி உறுதியாக இருப்பதாகவும் அந்த அறிக்கை கூறியது.

தற்போது ஜடேஜாவின் இந்த பதிவு, சென்னை ரசிகர்களுக்கு இனிய செய்தியாக வந்துள்ளது. சென்னை அணியின் சமூக வலைத்தள பக்கமும், ஜடேஜாவை தக்கவைப்பதாக கூறி, “8வது அதிசயம் (ஜடேஜாவின் ஜெர்சி நம்பர் 8!) எங்களுடன் தான் இருக்கும்” என்று பதிவிட்டிருந்தது.

தோனி - ஜடேஜா
இந்திய அணியில் மீண்டும் தோனி? டி20 அணியில் சேர்க்க பிசிசிஐ திட்டம்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com