Dhoni
DhoniTwitter

இந்திய அணியில் மீண்டும் தோனி? டி20 அணியில் சேர்க்க பிசிசிஐ திட்டம்?

2021ல் துபாயில் நடத்தப்பட்ட 20ஓவர் உலகக்கோப்பை தொடருக்கு தோனி மெண்டராக நியமிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Published on

நடந்து முடிந்த 20 ஓவர் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி மோசமான தோல்வியடைந்தது. இதனையடுத்து மீண்டும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியை களமிறக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

உலகக்கோப்பைக்கு முன் நடந்த தொடர்களில் வெற்றிபெற்றிருந்தாலும், இந்திய அணி டி20 உலகக்கோப்பையில் சற்று மோசமாக தான் விளையாடி வந்தது. 5ல் நான்கு போட்டிகளில் வென்றாலும், புள்ளிப்பட்டியலின் முதலிடத்தில் இருந்தாலும், ஒரு அணியாக இந்திய வீரர்கள் பெரிதும் சோபிக்கவில்லை.

உச்சகட்டமாக அரையிறுதியில் இங்கிலாந்து அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை தோற்கடித்தது. தோல்வியுற்ற இந்திய அணி தொடரிலிருந்து வெளியேறியது. சூப்பர் 12ல் தென் ஆஃப்ரிக்கவுடன் தோல்வி, வங்கதேசத்திடம் தோற்கும் நிலையில் இருந்து வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

மற்றொரு புறம், இந்திய அணியின் தற்போதைய கேப்டன் ரோஹித் சர்மா, தொடக்க வீரர் கேஎல் ராகுல் ஆகியோரின் ஃபார்ம் அணியில் அவர்களது இடத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது.

Dhoni
தோனி, கோலியை வீழ்த்திய உலகின் டாப் 10 பணக்கார விளையாட்டு வீரர்கள் இவர்கள்தான்!

இவ்வனைத்தையும் கருத்தில் கொண்டு இந்திய கிரிக்கெட் வாரியம் முன்னாள் கேப்டன் தோனியை மீண்டும் களமிறக்க திட்டமிட்டுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. தோனியை வைத்து அணியை மீண்டும் உருவாக்கும் திட்டத்தில் பிசிசிஐ இருப்பதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

2023ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் முடிவடைந்ததும் தோனியை இந்திய அணியின் பயிற்சியாளராக பிசிசிஐ நியமிக்கலாம். தற்போது பயிற்சியாளராக இருக்கும் டிராவிட் ஒரு நாள், டெஸ்ட், டி20 என மூன்று துறைகளையும் கவனித்துக்கொள்வது சற்றே கடினமான விஷயமாக இருக்கலாம் என்கிறது ஒரு தரப்பு.

“எப்படியும் தோனி அடுத்த ஆண்டு ஐபிஎல்லுக்கு பிறகு ஓய்வை அறிவிக்கலாம். பிசிசிஐ தோனியின் அனுபவம், மற்றும் அணுகுமுறைகளை சரியான விதத்தில் அணிக்காக பயன்படுத்த தீவிர எதிர்பார்ப்பில் இருக்கிறது” என்றது டெலிகிராஃப் தளம்.

மேலும், குறிப்பிட்ட வீரர்களுடன் தோனி செயல்படுவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. தோனியை அணியில் சேர்ப்பதன் மூலம் வீரர்கள் ‘பயமில்லாமல்’ போட்டிகளை விளையாட உதவும் என பிசிசிஐ நினைப்பதாகவும் அந்த தளம் கூறுகிறது.

2021ல் துபாயில் நடத்தப்பட்ட 20ஓவர் உலகக்கோப்பை தொடருக்கு தோனி மெண்டராக நியமிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Dhoni
அடுத்த சீசனுக்கும் தோனி தான் சிஎஸ்கே கேப்டன்? சென்னை அணி குறித்த புதிய அப்டேட்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

logo
Newssense
newssense.vikatan.com