IPL 2022 : நீயா நானா போட்டியில் ஜெயித்தது குஜராத்; Playoffs-க்கு தகுதி பெற்றது எப்படி?

தற்போதைய சூழலில் இன்னும் ஒரு ஆட்டத்தில் குஜராத் வெற்றி பெறும் பட்சத்தில் புள்ளிபட்டியலில் முதல் இரண்டு இடங்களில் இடம்பிடித்து பிளே ஆஃப் குவாலிபயர் 1 போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பு அந்த அணிக்கு கிடைக்கும்.
Gujarat Titans
Gujarat TitansTwitter
Published on

லக்நௌ அணியை 62 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இருக்கிறது குஜராத் டைட்டன்ஸ். இதன் மூலம் இந்த சீசனில் முதல் அணியாக பிளே ஆஃப்க்கு தகுதி பெற்றுள்ளது.

நேற்றைய ஆட்டத்தில் குஜராத் வைத்த இலக்கு 145 ரன்கள்தான். ஆனால் அதைக்கூட அடிக்க முடியாமல் 82 ரன்கள் மட்டுமே எடுத்து படுதோல்வி அடைந்தது லக்நௌ சூப்பர் ஜெயன்ட்ஸ்

டாஸ் வென்ற குஜராத் கேப்டன் ஹர்டிக் பாண்ட்யா பேட்டிங் செய்ய முடிவெடுத்தார். பவர்பிளேவில் இரண்டு விக்கெட்டுகளை இழந்து 35 ரன்கள் மட்டுமே எடுத்தது குஜராத் அணி.

ஹர்டிக் பாண்டியாவும் அணியை காப்பாற்றவில்லை. அதன் பிறகு ஜோடி சேர்ந்த மில்லர் - சுப்மன் கில் கூட்டணி மெல்ல மெல்ல அணியை மீட்டெடுத்தது. 16 ஓவர்களில் 100 ரன்களை கடந்தது குஜராத். ஆனால் அதே ஓவரில் மில்லர் அவுட் ஆனார்.

Tiwatia
TiwatiaTwitter

கடைசி கட்டத்தில் ராகுல் தீவாத்யா அதிரடியாய் ஆட, அவருக்கு பக்கபலமாய் நின்றார் சுப்மன் கில். தீவாத்யா 16 பந்துகளில் 22 ரன்கள் எடுத்தார். கில் 49 பந்துகளில் 63 ரன்கள் எடுத்தார்.

சேஸிங்கில் சொதப்பித் தள்ளியது லக்நௌ சூப்பர் ஜெயன்ட்ஸ். முதல் ஆளாக குயின்டன் டீ காக் வீழ்ந்தார். அவரை பின்தொடர்ந்து கே.எல்.ராகுலும் வெளியேறினார். பவர்பிளே முடிவதற்குள் கரண் ஷர்மா விக்கெட்டையும் தூக்கியது பாண்ட்யா படை.

அவரை தொடர்ந்து க்ரூனால் பாண்ட்யா, ஆயூஷ் படோனி, மார்கஸ் ஸ்டாய்னிஸ், ஜேசன் ஹோல்டர் என வரிசையாக வந்த வேகத்தில் விக்கெட்டை தூக்கி கொடுத்துவிட்டு பெவிலியனை நோக்கி ஓடினார்கள்.

எந்த ஆர்ப்பாட்டமும் இன்றி சரணடைந்தது சூப்பர் ஜெயன்ட்ஸ். 14 ஓவர்களுக்குள் பத்து பேரின் விக்கெட்டுகளையும் அள்ளி மேட்சை முடித்து குஜராத்.

Gujarat Titans
உங்கள் ஸ்மார்ட்போனை விட மலிவான செலவில் இந்த உலக நாடுகளுக்கு செல்லலாம்
Rashid khan
Rashid khanTwitter

ரஷீத் கான் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார். சாய் கிஷோர் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

நேற்றைய ஆட்டத்தில் படுதோல்வி அடைந்தபோதும் சூப்பர் ஜெயன்ட்ஸ் இரண்டாவது இடத்தில் 16 புள்ளிகளோடு தொடர்கிறது.

தற்போதைய சூழலில் இன்னும் ஒரு ஆட்டத்தில் குஜராத் வெற்றி பெறும் பட்சத்தில் புள்ளிபட்டியலில் முதல் இரண்டு இடங்களில் இடம்பிடித்து பிளே ஆஃப் குவாலிபயர் 1 போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பு அந்த அணிக்கு கிடைக்கும்.

இன்றைய ஆட்டத்தில் டெல்லி மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன.

Gujarat Titans
IPL 2022: போச்சுடா மீண்டும் மீண்டுமா? மும்பையை சாவடி அடித்த கொல்கத்தா; CSK-க்கு சிக்கல்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com