IPL 2022: போச்சுடா மீண்டும் மீண்டுமா? மும்பையை சாவடி அடித்த கொல்கத்தா; CSK-க்கு சிக்கல்?

சென்னை அணியைப் போலவே கொல்கத்தாவுக்கும் நூலிழையில் பிளே ஆஃப் வாய்ப்பு காத்திருக்கிறது. அதே சமயம் சென்னை அணிக்கு பிளே ஆஃப் செல்வதில் போட்டியும் கூடுதலாகி இருக்கிறது.
KKR
KKRDhoni
Published on

மும்பை அணியை சாவடி அடித்து எட்டாவது இடத்தில் உட்கார வைத்திருக்கிறது கொல்கத்தா அணி. ஆம். காலம் காலமாக எந்த அணியிடம் தொடர்ச்சியாகத் தோல்வி அடைந்து அசிங்கப்பட்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நின்றதோ அதே அணியை நேற்று போட்டுப் பொளந்தது.

முதல்முறையாக மும்பையை மூன்று முறை தொடர்ச்சியாக வீழ்த்தி வெற்றியைச் சுவைத்திருக்கிறது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.

நேற்றைய ஆட்டத்தில் எல்லாமே ட்விஸ்ட் தான்.

மும்பை இந்தியன்ஸ் நேற்றைய ஆட்டத்தில் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது. வெங்கடேஷ் அய்யர் மற்றும் அஜிங்கிய ரஹானே தொடக்க வீரார்களாக களமிறங்கினர். ரஹானே தடவ, அய்யர் வெளுக்க கொல்கத்தா ஸ்கோர் டீசண்ட்டாக உயர்ந்தது.

பவர்பிளே முடிவில் அபாரமாக விளையாடி 64 ரன்கள் எடுத்திருந்தது கொல்கத்தா அணி. அப்போது வெங்கடேஷ் விக்கெட்டை மட்டும் இழந்திருந்தது. வெங்கடேஷ் அய்யர் 24 பந்துகளை சந்தித்து நான்கு சிக்ஸர்கள், மூன்று பௌண்டரிகள் என 43 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.

10 ஓவர்களில் 87 ரன்கள் எடுத்தது. அதன் பின்னர் ரஹானே விக்கெட் வீழ்ந்ததும் நிதிஷ் ராணா சிக்ஸர்களாய் பறக்கவிட்டார்.

ஷ்ரேயஸ் அய்யர் விக்கெட்டை இழந்தாலும் 14 ஓவர்கள் முடிவில் 136 ரன்கள் எடுத்திருந்தது கொல்கத்தா.

இனி செம ஆட்டம்தான் ஸ்கோர் 200-ஐ தொடும் எனக் கொல்கத்தா ரசிகர்களுக்கு நம்பிக்கை பிறந்தது. ஏனெனில் களத்தில் ஃபுல் ஃபார்மில் ராணாவும் கூடவே ரஸ்ஸலும் இருந்தனர்.

அப்போது பும்ராவை அழைத்தார் ரோகித். 15வது ஓவரை வீசிய பும்ரா படக்கென இந்த இருவரின் விக்கெட்டையும் தூக்கினார்.

அந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள் தனது அடுத்த ஓவரில் ரன்கள் ஏதும் கொடுக்காமல் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களையும் வாயைப் பிளக்க வைத்தார்.

20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்களை மட்டுமே சேர்த்து கொல்கத்தா. பும்ரா வெறும் 10 ரன்களை மட்டும் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி மாஸ் காட்டினார்.

KKR
தி கிரேட் காலி முதல் வீர் மஹான் வரை: இந்தியாவின் WWE வரலாறு
Ringu Singh and Russel
Ringu Singh and RusselTwitter

முதல் ஓவரிலேயே ரோகித் ஷர்மா விக்கெட்டை போட்டுத் தள்ளினார் டிம் சவுத்தீ. 10 ஓவர்கள் முடிவில் தடவி தடவி இரண்டு விக்கெட்டுகளை மட்டும் இழந்து 66 ரன்களை எடுத்திருந்தது மும்பை அணி.

அடுத்த 67 ரன்களை எடுக்க 7.3 ஓவர்களை மட்டுமே எடுத்துக்கொண்டது மும்பை. ஆனால் அதற்கு எட்டு விக்கெட்டுகளை விலையாகக் கொடுத்தது. விளைவு 52 ரன்கள் வித்தியாசத்தில் சூப்பர் வெற்றி பெற்றது கொல்கத்தா அணி.

KKR
IPL 2022: நம்பர் 1 இடத்தை பிடித்தது லக்நௌ; இனியும் சென்னைக்கு வாய்ப்பு உண்டா?

பேட் கம்மின்ஸ் மூன்று விக்கெட்டுகளை எடுக்க, மூன்று பேரை ரன் அவுட் செய்தனர் கொல்கத்தா ஃபீல்டர்கள். மும்பை தரப்பில் இஷான் கிஷன் மட்டும் அரை சதமடித்தார்.

இந்த வெற்றியின் மூலம் ஒன்பதாவது இடத்திலிருந்து ஏழாவது இடத்துக்குத் தாவியது கொல்கத்தா. இதன்மூலம் சென்னை அணியைப் போலவே கொல்கத்தாவுக்கும் நூலிழையில் பிளே ஆஃப் வாய்ப்பு காத்திருக்கிறது. அதே சமயம் சென்னை அணிக்கு பிளே ஆஃப் செல்வதில் போட்டியும் கூடுதலாகி இருக்கிறது.

KKR
IPL : ஐபிஎல் நிர்வாகம் மரியாதையாக நடத்தவில்லை - கிறிஸ் கெயில் குற்றச்சாட்டு

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com